போஸ்ட் கம்பத்தில் மோதியதற்கே இரண்டு துண்டான லம்போர்கினி

By Balasubramanian

அமெரிக்காவில் கான்கிரிட் போஸ்ட் கம்பத்தின் மீது மோதிய லம்போர்கினி கார் இரண்டு துண்டாக உடைந்தது. உயர்ரக கார்களிலும் விபத்தின் போது அதிக ஆபத்து இருப்பதற்கு இதுவே சாட்சி.

போஸ்ட் கம்பத்தில் மோதியதற்கே இரண்டு துண்டான லம்போர்கினி

விபத்து ஏற்று வந்து விட்டால் உயர்ரக கார், குறைந்த ரக கார் எல்லாம் தரைமட்டம் தான். இப்படியாக உலகம் முழுவதும் உயர்ரக கார் என மக்கள் மத்தியில் பெரும் மதிப்பை பெற்ற லம்போர்கினி ஹரேக்கேன் கார் விபத்தில் சிக்கினால் இரண்டு துண்டாக உடைந்து விடும்.

போஸ்ட் கம்பத்தில் மோதியதற்கே இரண்டு துண்டான லம்போர்கினி

லம்போர்கினி ஹரேக்கேன் காரை பொறுத்தவரை காரின் நடுவில் இன்ஜினை கொண்டது. இது காரில் அமர்ந்திருப்பவர்களின் பின் பக்கம் இருக்கும். இன்ஜின் பின் பக்கம் இருந்தால் தான் மிக வேகமாக செல்லமுடியும். ரேஸ் கார்களிலும் இன்ஜின் பின் புறம் தான் இருக்கும்.

போஸ்ட் கம்பத்தில் மோதியதற்கே இரண்டு துண்டான லம்போர்கினி

ஆனால் பின்புறம் இன்ஜின் இருப்பதால் அதிக எடை கொண்டிருக்கும். முன்புறம் எடை குறைவாக இருக்கும். இதனால் கார் விபத்தில் சிக்கினால் எடை குறைவாக உள்ள பகுதி எளிதாக எடை அதிகமா உள்ள பகுதியை விட்டு உடைந்துவிடும்.

போஸ்ட் கம்பத்தில் மோதியதற்கே இரண்டு துண்டான லம்போர்கினி

அமெரிக்காவின் வெர்ஜினியாவின் வடக்கு பகுதியில் சூப்பர் காரை ஓட்ட தெரியாத ஒருவர் லம்போர்கினி ஹரேக்கேன் மாடல் காரை ஓட்டி சென்றுள்ளார். கார் அவர் எதிர்பார்த்த அளவை விட வேகமாக சென்றுள்ளது. இதனால் பதறிய அவர் அடுத்த என்ன செய்வது என தெரியாமல் திணறினார்.

போஸ்ட் கம்பத்தில் மோதியதற்கே இரண்டு துண்டான லம்போர்கினி

இதனால் கார் அவர் கட்டுப்பாட்டை இழந்து மின்னல் வேகத்தில் பறந்தது. தெடர்ந்து ரோட்டில் இருந்த காண்கிரீட் கம்பத்தில் மோதியது. இதில் லம்போர்கினி இரண்டு துண்டாக உடைந்தது. நல்லவேலையாக இச்சம்பவம் அதிகாலை வேலையில் ரோட்டில் வேறு வாகனங்கள் செல்லாத போது நடந்தது.

போஸ்ட் கம்பத்தில் மோதியதற்கே இரண்டு துண்டான லம்போர்கினி

அதிக வாகனங்கள் செல்லும் நேரத்தில் இச்சம்பவம் நடந்திருந்தால் அது பெரும் கோர விபத்தால நிகழ்ந்திருக்கும். பலர் இதனால் பலியாகியிருக்க கூடிய நிலையும் ஏற்பட்டிருக்கும். தற்போது விபத்து நடந்த பகுதி பகல் நேரங்களில் அதிக போக்குவரத்து நெருக்கடியும், மக்கள் நெருக்கடியும் அதிகமாக பகுதியாக இருக்கும்.

போஸ்ட் கம்பத்தில் மோதியதற்கே இரண்டு துண்டான லம்போர்கினி

தற்போது நிகழ்ந்த விபத்தில் என்ன நடந்தது என்பது குறித்த விபரம் வெளியாகவில்லை. இருந்தாலும் இந்த போட்டோவில் காரில் பெரும்பாலான சேதாரம் பயணிகள்அமரும் இடத்தில் இல்லாததால் உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்காது என நம்பப்படுகிறது.

போஸ்ட் கம்பத்தில் மோதியதற்கே இரண்டு துண்டான லம்போர்கினி

லம்போர்கினி ஹரக்கேன் காரை பொறுத்தவரை வி10 ரக இன்ஜினை கொண்டது. இது 601 குதிரை திறனையும் 413 எல்பி-எப்டி டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இதனால் இதன் வேகம் நீங்கள் கற்பனையில் எண்ணாத அளவிற்கு மிக வேகமாக இருக்கும்.

போஸ்ட் கம்பத்தில் மோதியதற்கே இரண்டு துண்டான லம்போர்கினி

நினைத்துப்பாருங்கள் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த கார் 3.2 நொடியில் 0-100 கி.மீ. வேகத்தை எட்டக்கூடியது. இந்த கார் அதிகபட்சமாக 330 கி.மீ. வேகம் வரை பறக்க கூடியது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Lamborghini Huracan Cut In Half After Hitting Concrete Pole
Story first published: Friday, May 4, 2018, 16:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X