சில நிமிடங்களில் ஒன்றுமில்லாமல் போன கோடி ரூபாய் கார்... லம்போர்கினி உருஸ்!! எங்கு நடந்தது தெரியுமா?

கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி உருஸ் கார் ஒன்று தைவான் நாட்டில் சாலையிலேயே தீப்பற்றி எரிந்துள்ளது. இதுகுறித்து நமக்கு கிடைத்துள்ள வீடியோவை இந்த செய்தியில் பார்ப்போம்.

சில நிமிடங்களில் ஒன்றுமில்லாமல் போன கோடி ரூபாய் கார்... லம்போர்கினி உருஸ்!! எங்கு நடந்தது தெரியுமா?

சாலையிலேயே இயங்கி கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிவது எல்லாம் நம் நாட்டை பொறுத்தவரையில் பெரிய விஷயமாக இருந்தாலும், வெளிநாடுகளில் சாதாரண விஷயமே.

சில நிமிடங்களில் ஒன்றுமில்லாமல் போன கோடி ரூபாய் கார்... லம்போர்கினி உருஸ்!! எங்கு நடந்தது தெரியுமா?

சமீபத்தில் கூட அமெரிக்காவிலும், சீனாவிலும் டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார்கள் தீப்பிடித்து எரிந்ததை பற்றி நமது செய்திதளத்தில் பார்த்திருந்தோம். ஆனால் நாம் இந்த செய்தியில் பார்க்க போவது சாலையிலேயே எரிந்த லம்போர்கினி உருஸ் காரை பற்றி ஆகும்.

இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பரவி வருகின்றன. தேசிய விரைவு சாலை ஒன்றில் இயங்கி கொண்டிருந்த இந்த உருஸ் எஸ்யூவி திடீரென தீப்பற்றி கொண்டதை கண்ட அதன் உரிமையாளர் காரை உடனே சாலையின் பக்கவாட்டில் நிறுத்தியுள்ளார் என அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

சில நிமிடங்களில் ஒன்றுமில்லாமல் போன கோடி ரூபாய் கார்... லம்போர்கினி உருஸ்!! எங்கு நடந்தது தெரியுமா?

சாலையில் கார் ஒன்று எரிவதை பார்த்த அந்த வழியாக வந்த லாரி ஓட்டுனர் ஒருவர் தீயணைப்பான் கொண்டு தீயை அணைக்க முயற்சி செய்தும் எந்த பலனும் இல்லை. முழுவதும் எரிந்த காரில் இருந்து உபயோகிக்க முடியாத உலோகங்களும், பிளாஸ்டிக்குகளுமே மிஞ்சின.

சில நிமிடங்களில் ஒன்றுமில்லாமல் போன கோடி ரூபாய் கார்... லம்போர்கினி உருஸ்!! எங்கு நடந்தது தெரியுமா?

இந்த லம்போர்கினி உருஸ் காரை ஓட்டிவந்த 29 வயதான உரிமையாளருக்கு இந்த விபத்தினால் எந்த பாதிப்பு ஏற்படவில்லை என செய்திகள் கூறுகின்றன. இவர் வெறும் 8 மாதங்களுக்கு முன்பு தான் இந்த லம்போர்கினி காரை வாங்கியுள்ளார்.

சில நிமிடங்களில் ஒன்றுமில்லாமல் போன கோடி ரூபாய் கார்... லம்போர்கினி உருஸ்!! எங்கு நடந்தது தெரியுமா?

அதற்குள் இவ்வாறு தீ விபத்து ஏற்பட என்ன காரணம் என்பது நம்மை போல் அவருக்கும் தெரியவில்லை. தைவானை சேர்ந்த சாங்குவா கவுண்டி தீயணைப்பு துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, ஷார்ட் சர்க்யுட்டால் காரில் தீ உருவாகி இருக்கலாம்.

சில நிமிடங்களில் ஒன்றுமில்லாமல் போன கோடி ரூபாய் கார்... லம்போர்கினி உருஸ்!! எங்கு நடந்தது தெரியுமா?

இந்த தீ எரிபொருள் பகுதியில் ஏற்பட்டதே இவ்வளவு பெரிய தீப்பிழப்புகள் ஏற்பட காரணமாக இருக்க வேண்டும். இதை வைத்து உருஸ் எஸ்யூவி காரை பற்றி தவறாக நினைத்துவிட வேண்டாம். ஏனெனில் லம்போர்கினியின் அதிகளவில் விற்பனையாகும் மாடலாக உருஸ் விளங்குகிறது.

சில நிமிடங்களில் ஒன்றுமில்லாமல் போன கோடி ரூபாய் கார்... லம்போர்கினி உருஸ்!! எங்கு நடந்தது தெரியுமா?

கடந்த 2020ஆம் ஆண்டில் லம்போர்கினி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த கார்களில் 59.1 சதவீதம் உருஸ் கார்களும். மொத்தம் 4,391 உருஸ் கார்கள் கடந்த ஆண்டில் உலகம் முழுக்க விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சில நிமிடங்களில் ஒன்றுமில்லாமல் போன கோடி ரூபாய் கார்... லம்போர்கினி உருஸ்!! எங்கு நடந்தது தெரியுமா?

உருஸ் எஸ்யூவியில் 4.0 லிட்டர், இரட்டை-டர்போ, வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 650 பிஎஸ் மற்றும் 850 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு இசட்.எஃப் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

சில நிமிடங்களில் ஒன்றுமில்லாமல் போன கோடி ரூபாய் கார்... லம்போர்கினி உருஸ்!! எங்கு நடந்தது தெரியுமா?

இந்த லம்போர்கினி காரின் அதிகப்பட்ச வேகம் 190kmph ஆகும். 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய லம்போர்கினி உருஸ் காரின் விலை தைவானில் 9.99 மில்லியன் புதிய தைவான் டாலர்களாக உள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 2.63 கோடியாகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Lamborghini Urus Catches Fire While Driving Down A Freeway In Taiwan.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X