திருடுப்போன லம்போர்கினி காரை ஸ்கூட்டரில் விரட்டி சென்று மீட்ட உரிமையாளர்!! 14 வயது சிறுவன் கைது

கார் திருட்டு என்பது அவ்வப்போது, அனைத்து நாடுகளிலும் நடைபெறக்கூடிய ஒன்று தான். ஆனால் நம்மூர் திருடர்கள் எல்லாம் கோடி கணக்கில் மதிப்புள்ள சொகுசு கார்களின் பக்கம் அவ்வளவாக செல்ல மாட்டார்கள்.

திருடுப்போன லம்போர்கினி காரை ஸ்கூட்டரில் விரட்டி சென்று மீட்ட உரிமையாளர்!! 14 வயது சிறுவன் கைது

சூப்பர் கார்களை பயன்படுத்தும் அளவிற்கு அறிவுள்ள திருடர்கள் நம் இந்தியாவில் குறைவு. அது ஒருபக்கம் என்றாலும், லக்சரி கார்களை திருடினால் அதனால் ஏற்படும் பின் விளைவுகளை சந்திக்க வேண்டுமே என்கிற பயம் தான் முக்கிய காரணமாகும்.

திருடுப்போன லம்போர்கினி காரை ஸ்கூட்டரில் விரட்டி சென்று மீட்ட உரிமையாளர்!! 14 வயது சிறுவன் கைது

இதனால் அதிகப்பட்சமாகவே டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா போன்ற பிரபலமான கார்களின் மீது தான் கை வைப்பார்கள். ஆனால் வெளிநாடுகளில் எல்லாம் கதையே வேறு. அதிலும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் காஸ்ட்லீயான கார்களே அசால்ட்டாக திருடுப்போவது உண்டு.

திருடுப்போன லம்போர்கினி காரை ஸ்கூட்டரில் விரட்டி சென்று மீட்ட உரிமையாளர்!! 14 வயது சிறுவன் கைது

அதற்கு ஒரு உதாரணத்தை பற்றியே இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஒருவர் திருடுப்போன தனது லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரை ஸ்கூட்டரில் விரட்டி சென்று வெற்றிகரமாக மீட்டுள்ளார்.

திருடுப்போன லம்போர்கினி காரை ஸ்கூட்டரில் விரட்டி சென்று மீட்ட உரிமையாளர்!! 14 வயது சிறுவன் கைது

ஃப்ளோரிடா மாகாணத்தில் மியாமி என்கிற பகுதியில் அரங்கேறியுள்ள இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட உருஸ் காரின் உரிமையாளரின் பெயர் கிறிஸ் சாண்டர்ஸ். இவரது 2 லட்ச அமெரிக்க டாலர்கள் (கிட்டத்தட்ட ரூ.1.46 கோடி) மதிப்புள்ள லம்போர்கினி உருஸ் கார் ஏற்கனவே அவரது வீட்டில் இருந்து ஆள் இல்லா நேரத்தில் திருடு போனது.

திருடுப்போன லம்போர்கினி காரை ஸ்கூட்டரில் விரட்டி சென்று மீட்ட உரிமையாளர்!! 14 வயது சிறுவன் கைது

இதனை உரிமையாளர் பல இடத்தில் தேடி வந்துள்ளார். இருப்பினும் கிடைத்து பாடில்லை. இந்த நிலையில் கடந்த ஜூன் 8ஆம் தேதி கிறிஸ் சாண்டர்ஸ் தனது வீட்டில் அமர்ந்திருந்த போது, ஜன்னல் வழியாக தனது கருப்பு நிற உருஸ் கார் சாலையில் செல்வதை அடையாளம் கண்டுள்ளார்.

பிறகு சிறிதும் தாமதிக்காமல் தனது ஸ்கூட்டரை எடுத்தவர் வேகமாக தனது திருடு போன காரை நோக்கி சென்றுள்ளார். அந்த உருஸ் காரை சிறுவன் ஒருவர் இயக்கி கொண்டிருந்துள்ளார். லம்போர்கினி உருஸ் காரை பற்றி உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும்.

திருடுப்போன லம்போர்கினி காரை ஸ்கூட்டரில் விரட்டி சென்று மீட்ட உரிமையாளர்!! 14 வயது சிறுவன் கைது

உலகின் வேகமான சூப்பர் கார்களுள் ஒன்றான உருஸில் 0-வில் 100kmph வேகத்தை வெறும் 3.6 வினாடிகளில் எட்டிவிட முடியும். இந்த லக்சரி எஸ்யூவி காரின் டாப் ஸ்பீடு 305kmph ஆகும். இப்படிப்பட்ட காரை ஒருவர் ஸ்கூட்டரில் விரட்டி பிடித்திருப்பது உண்மையில் ஆச்சிரியமான விஷயமே.

திருடுப்போன லம்போர்கினி காரை ஸ்கூட்டரில் விரட்டி சென்று மீட்ட உரிமையாளர்!! 14 வயது சிறுவன் கைது

போலீஸார் அளித்த தகவல்களின்படி, கிறிஸ் சாண்டர்ஸின் உருஸ் காரை 14 வயதுடைய சிறுவன் திருடியுள்ளார். சாண்டர்ஸின் வீட்டில் இருந்து கார் திருடு போகும்போது, சிசிடிவி வீடியோவில் இருந்தவருக்கும் இந்த சிறுவருக்கும் தோற்றத்தில் அதிகளவில் ஒத்து போகிறது.

திருடுப்போன லம்போர்கினி காரை ஸ்கூட்டரில் விரட்டி சென்று மீட்ட உரிமையாளர்!! 14 வயது சிறுவன் கைது

இதை எல்லாம் வைத்து இந்த 14 வயது சிறுவன் தான் காரை திருடியுள்ளார் என்பதை போலீஸார் உறுதிப்படுத்தி உள்ளனர். அதுமட்டுமின்றி இந்த சிறுவன் காரை திருடிக்கொண்டு போவதை நேரில் பார்த்த சாட்சி ஒன்றும் உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Lamborghini Urus SUV, stolen by a teenager, chased down by owner on a scooter.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X