இவ்ளோ ஸ்பீடா? அதிகபட்ச வேகத்தையும் மீறி பறந்த லம்போர்கினி உருஸ் கார்... வீடியோவை பாருங்க!

லம்போர்கினி உருஸ் கார் ஒன்று அதிகபட்ச வேகத்தில் பறந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இவ்ளோ ஸ்பீடா? அதிகபட்ச வேகத்தையும் மீறி பறந்த லம்போர்கினி உருஸ் கார்... வீடியோவை பாருங்க!

தேசிய ஆட்டோமொபைல் டெஸ்ட் டிராக்குகள் அமைப்பு, மத்திய பிரதேச மாநிலம் பிதாம்பூரில், சமீபத்தில் ஆசிய கண்டத்தின் நீளமான மற்றும் வேகமான டெஸ்ட் டிராக்கை உருவாக்கியது. இந்த டெஸ்ட் டிராக்கை ஒன்றிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சமீபத்தில் திறந்து வைத்தார். இங்கு வேக கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.

இவ்ளோ ஸ்பீடா? அதிகபட்ச வேகத்தையும் மீறி பறந்த லம்போர்கினி உருஸ் கார்... வீடியோவை பாருங்க!

கார்களை அவற்றின் அதிகபட்ச வேகத்தில் இயக்க முடியும். இதற்கு உகந்த சூழல் இங்கு உள்ளது. சூப்பர் கார் மற்றும் சொகுசு எஸ்யூவி கார்களை வைத்திருக்கும் பலர் இந்த டெஸ்ட் டிராக்கை ஏற்கனவே பயன்படுத்த தொடங்கி விட்டனர். இந்த சூழலில் இங்கு லம்போர்கினி உருஸ் எஸ்யூவி கார் ஒன்று மணிக்கு 317 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இவ்ளோ ஸ்பீடா? அதிகபட்ச வேகத்தையும் மீறி பறந்த லம்போர்கினி உருஸ் கார்... வீடியோவை பாருங்க!

malwasupercarsclub-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ தொடங்கும்போதே லம்போர்கினி உருஸ் எஸ்யூவி மணிக்கு 300 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட வேகத்தில்தான் பயணம் செய்து கொண்டிருந்தது. லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரின் அதிகாரப்பூர்வ டாப் ஸ்பீடு மணிக்கு 190 மைல்கள் அல்லது 305 கிலோ மீட்டர்கள் ஆகும்.

இவ்ளோ ஸ்பீடா? அதிகபட்ச வேகத்தையும் மீறி பறந்த லம்போர்கினி உருஸ் கார்... வீடியோவை பாருங்க!

ஆனால் டிரைவர் தொடர்ந்து வேகமாக காரை செலுத்தியதால், மணிக்கு 305 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தையும் லம்போர்கினி உருஸ் கடந்தது. டிரைவர் காரை 7வது கியரில் ஓட்டினார். இதன் காரணமாக மணிக்கு 317 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை நோக்கி கார் மெதுவாக நகர்ந்தது. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் இந்த வேகத்தை பார்க்க முடிகிறது.

இவ்ளோ ஸ்பீடா? அதிகபட்ச வேகத்தையும் மீறி பறந்த லம்போர்கினி உருஸ் கார்... வீடியோவை பாருங்க!

பொதுவாக உண்மையான வேகத்திற்கும், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் காட்டும் வேகத்திற்கும் இடையே சிறிய வித்தியாசம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த லம்போர்கினி உருஸ் உண்மையில் என்ன வேகத்தில் சென்றது? என்பது அவ்வளவு தெளிவாக தெரியவில்லை. அத்துடன் இது லம்போர்கினி உருஸ் காரின் அதிகாரப்பூர்வமற்ற டாப் ஸ்பீடு ஆகும்.

இவ்ளோ ஸ்பீடா? அதிகபட்ச வேகத்தையும் மீறி பறந்த லம்போர்கினி உருஸ் கார்... வீடியோவை பாருங்க!

இதற்கிடையே இந்த டெஸ்ட் டிராக்கை பயன்படுத்துவதற்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இதில், ஃபோக்ஸ்வேகன், ஃபியட் கிறைல்லர் ஆட்டோமொபைல் மற்றும் லம்போர்கினி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. சரி, நாம் மீண்டும் லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காருக்கு நாம் வருவோம். இது சூப்பர் கார் உரிமையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.

இவ்ளோ ஸ்பீடா? அதிகபட்ச வேகத்தையும் மீறி பறந்த லம்போர்கினி உருஸ் கார்... வீடியோவை பாருங்க!

இது இந்திய சாலைகளிலும் ஓட்டுவதற்கு ஏற்ற லம்போர்கினி நிறுவனத்தின் காராக உள்ளது. எனவே இந்தியாவில் லம்போர்கினி உருஸ் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை திரைப்பட நட்சத்திரங்கள் பலர் லம்போர்கினி உருஸ் காரை சொந்தமாக வைத்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரில், 4.0 லிட்டர் வி8 ட்வின் டர்போ இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 650 பிஎஸ் பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் எடை சுமார் 2.2 டன்கள் ஆகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Lamborghini Urus SUV Touches 317 Kmph Speed At Asia’s Longest Test Track - Video. Read in Tamil
Story first published: Wednesday, July 28, 2021, 17:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X