பெட்ரோல்/டீசல் விலையை பற்றி இனி கவலையே பட வேணாம்...மோடி திறந்து வைக்கும் எத்தனால் ஆலைதான் இனி எதிர்கால ஆயில்

பிரதமர் மோடி ஹரியானா மாநிலத்தில் எத்தனால் தயாரிப்பு ஆலையைத் திறந்து வைக்கிறார். இது நாட்டிற்கு எப்படிப் பயன்படும்? இதனால் ஆட்டோமொபைல் துறைக்கு என்ன புண்ணியம் முழு தகவல்களை இங்கே காணுங்கள்.

பெட்ரோல் / டீசல் விலையைப் பற்றி இனி கவலையே பட வேணாம் . . . மோடி திறந்து வைக்கும் எத்தனால் ஆலைதான் இனி எதிர்கால ஆயில் . . .

இன்று பெட்ரோல் பயன்பாடு அதிகமாகிக்கொண்டே வருகிறது. இந்தியாவில் விற்பனையாகும் 90 சதவீத பெட்ரோல்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யிலிருந்தே உருவாகிறது. அதனால் தற்போது நாம் நமது பெட்ரோல் தேவைகளுக்கு வெளிநாடுகளைத் தான் சார்ந்து இருக்கிறோம்.

பெட்ரோல் / டீசல் விலையைப் பற்றி இனி கவலையே பட வேணாம் . . . மோடி திறந்து வைக்கும் எத்தனால் ஆலைதான் இனி எதிர்கால ஆயில் . . .

இந்நிலையில் பெட்ரோல் தேவையைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளையும் ஆய்வுகளையும் நடத்தி வருகிறது. அதன்படி மத்திய அரசு எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிசக்தி கொண்ட வாகனங்களை அதிகம் விற்பனை செய்ய மானியங்களை அறிவித்துள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசலின் தேவை அதிகமாகி வருகிறது.

பெட்ரோல் / டீசல் விலையைப் பற்றி இனி கவலையே பட வேணாம் . . . மோடி திறந்து வைக்கும் எத்தனால் ஆலைதான் இனி எதிர்கால ஆயில் . . .

இதையடுத்து மத்திய அரசு பெட்ரோலுக்கு மாற்றாக எத்தனாலை எரிபொருளாகச் சேர்க்கும் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. தற்போது வரை இந்தியா பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது. எத்தனால் என்பதை முற்றிலும் உள் நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும். வாகனங்கள் எத்தனாலிலும் ஓட வைக்க முடியும்.

பெட்ரோல் / டீசல் விலையைப் பற்றி இனி கவலையே பட வேணாம் . . . மோடி திறந்து வைக்கும் எத்தனால் ஆலைதான் இனி எதிர்கால ஆயில் . . .

ஆனால் இந்தியாவின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு எத்தனால் உற்பத்தி இல்லை இதனால் இதை எரிபொருளாகக் கொண்டு பயன்படுத்தப்படும் வாகனங்கள் தயாரிப்பில் இல்லை. அதனால் மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக எத்தனாலுக்கு பழக்க மத்திய அரசு பெட்ரோலுடன் எத்தனாலை கலக்கும் திட்டத்தை வகுத்து வருகிறது.

பெட்ரோல் / டீசல் விலையைப் பற்றி இனி கவலையே பட வேணாம் . . . மோடி திறந்து வைக்கும் எத்தனால் ஆலைதான் இனி எதிர்கால ஆயில் . . .

இந்நிலையில் எதிர்காலத்தில் எத்தனாலில் மட்டுமே இயங்கும் வாகனங்களைத் தயாரிக்கவும் பல் நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றனர். குறிப்பாக ஹோண்டா நிறுவனம் தற்போது வரை எலெக்டரிக் வாகனங்களின் மீது பெரிய அளவில் நம்பிக்கையில்லாமல் பயோ ஃப்யூயலில் இயங்கும் வாகனத்தைத் தயாரிக்க முயற்சித்து வருகிறது.

பெட்ரோல் / டீசல் விலையைப் பற்றி இனி கவலையே பட வேணாம் . . . மோடி திறந்து வைக்கும் எத்தனால் ஆலைதான் இனி எதிர்கால ஆயில் . . .

இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஹரியானா மாநிலம் பானிபட் பகுதியில் 2ம் தலைமுறை எத்தனாலை தயாரிக்கும் ஆலையைத் திறந்து வைக்கவுள்ளார்.சுமார் ரூ900 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலை நாளை நாட்டிற்காக அர்ப்பணிக்கப்படுகிறது.

பெட்ரோல் / டீசல் விலையைப் பற்றி இனி கவலையே பட வேணாம் . . . மோடி திறந்து வைக்கும் எத்தனால் ஆலைதான் இனி எதிர்கால ஆயில் . . .

இந்த ஆலையில் ஆண்டிற்கு 3 கோடி லிட்டர் எத்தனால் தயாரிக்கும் அளவிற்குத் திறன் கொண்டது. இதற்காக 2 லட்சம் டன் வைக்கோல்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆலையை இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் உருவாக்கியுள்ளது. பானிபட்டில் உள்ள அந்நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மையத்திற்கு அருகிலேயே இந்த ஆலையையும் உருவாக்கியுள்ளது.

பெட்ரோல் / டீசல் விலையைப் பற்றி இனி கவலையே பட வேணாம் . . . மோடி திறந்து வைக்கும் எத்தனால் ஆலைதான் இனி எதிர்கால ஆயில் . . .

இந்த ஆலை இந்தியாவில் தயாரிக்கப்படும் பயோ ஃப்யூயல் உற்பத்தியை அதிகரிக்க பெரும் உதவியைச் செய்கிறது. இந்த ஆலை மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை செய்கின்றனர். இந்த எத்தனால் இந்தியாவில் ஃபாஸில் ஃப்யூயல் எனப்படும் பல விதமான எரிபொருளில் இயங்கும் வாகன தயாரிப்பை ஊக்குவிக்கிறது.

பெட்ரோல் / டீசல் விலையைப் பற்றி இனி கவலையே பட வேணாம் . . . மோடி திறந்து வைக்கும் எத்தனால் ஆலைதான் இனி எதிர்கால ஆயில் . . .

இதனால் இந்தியாவில் பெட்ரோலின் தேவை குறைவதுடன், காற்று மாசும் கணிசமான அளவு குறைகிறது. இது மட்டும் செயல்பாட்டிற்கு வந்தால் இந்தியாவில் உருவாகும் 3 லட்சம் டன் கார்பன் டைஆக்ஸைடு எமிஷன் குறையும் என எதிர்பார்க்கலாம். இதை எல்லாம் மனதில் வைத்துத் தான். இந்தியா மிகப்பெரிய அளவில் எத்தனால் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

பெட்ரோல் / டீசல் விலையைப் பற்றி இனி கவலையே பட வேணாம் . . . மோடி திறந்து வைக்கும் எத்தனால் ஆலைதான் இனி எதிர்கால ஆயில் . . .

இந்தியா கடந்த 2022 மார்ச் 13ம் தேதி பெட்ரோலில் 9.45 சதவீதம் எத்தனாலை கலந்து வருகிறது. இதை விரைவில் 10 சதவீதமாக உயர்த்தும் என பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக 2020 டிசம்பர் மாதமே 20 சதவீத எத்தனால் கலப்பை உறுதி செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டது. ஆனால் பல சிக்கல் காரணமாக தற்போது 10 சதவீதம் தான் நெருங்கியுள்ளது.

பெட்ரோல் / டீசல் விலையைப் பற்றி இனி கவலையே பட வேணாம் . . . மோடி திறந்து வைக்கும் எத்தனால் ஆலைதான் இனி எதிர்கால ஆயில் . . .

இந்நிலையில் இந்த மாற்று எரிசக்தியில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் பெட்ரோல் டீசலின் தேவை குறைந்து மக்கள் மாற்று எரிசக்தியை நேரடியாக தங்கள் வாகனங்களில் பயன்படுத்தத் துவங்கிவிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Launch of 2g ethanol plant in Panipat by pm Modi know Full detail
Story first published: Tuesday, August 9, 2022, 17:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X