கார்களில் லீகலா என்னென்ன மாடிஃபிகேஷன்களை செய்யலாம் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இந்தியாவில் சட்டத்திற்கு உட்பட்டு கார்களில் என்னென்ன மாடிஃபிகேஷன்களை செய்ய முடியும்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார்களில் லீகலா என்னென்ன மாடிஃபிகேஷன்களை செய்யலாம் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வது சட்டத்திற்கு புறம்பானது என இந்தியாவின் உச்ச நீதிமன்றம் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் அதிரடியாக உத்தரவிட்டது. ஆனால் உங்கள் காரில் செய்யப்படும் அனைத்து ஆல்டரேஷன்களும் சட்டத்திற்கு எதிரானவை அல்ல. சட்ட ரீதியாக உங்கள் காரில் ஒரு சில மாறுதல்களை உங்களால் செய்ய முடியும். அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார்களில் லீகலா என்னென்ன மாடிஃபிகேஷன்களை செய்யலாம் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

டயர் அப்கிரேடு

டயர்களை சட்டத்திற்கு உட்பட்டு அப்கிரேடு செய்ய முடியும். ஆனால் புதிய டயர்கள், உற்பத்தியாளரின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அதேபோல் ஸ்டாக் டயர்களின் அதே ஸ்பீடு ரேட்டிங்கையோ (அ) அதற்கும் அதிகமான ஸ்பீடு ரேட்டிங்கையோ புதிய டயர்கள் பெற்றிருப்பதும் முக்கியம். ஒருவேளை புதிய டயர்கள் பெரிய செக்ஸன் அகலத்தை கொண்டிருந்தால், நீங்கள் சைடுவால் உயரத்தை குறைக்க வேண்டும்.

கார்களில் லீகலா என்னென்ன மாடிஃபிகேஷன்களை செய்யலாம் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ரீ-பெயிண்டிங் (கலரை மாற்றுதல்)

உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப காரின் கலரை மாற்றி கொள்ள அனுமதி உண்டு. ஆனால் பெயிண்ட் மாடிஃபிகேஷன்களுக்கு ஆர்டிஓ அனுமதியை பெற வேண்டும். நீங்கள் கலரை மாற்றியுள்ளீர்கள் என்பதை உங்கள் காரின் பதிவு சான்றிதழ் பிரதிபலிக்க வேண்டும். ஆனால் ஆர்மி க்ரீன் கலரில் பெயிண்ட் செய்வதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் ஆலிவ் க்ரீன் கலர் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கார்களில் லீகலா என்னென்ன மாடிஃபிகேஷன்களை செய்யலாம் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

சஸ்பென்ஸன் அப்கிரேடு

உங்கள் காருக்கு நீங்கள் சிறந்த சஸ்பென்ஸனை பெற முடியும். இது உங்கள் பயண அனுபவத்தை மேம்படுத்தும். ஆன்டி-ரோல் பார்கள் போன்றவற்றை இன்ஸ்டால் செய்வதன் மூலம் வளைவுகளில் திரும்பும்போது பாடி ரோல் போன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும். அதாவது உங்களுக்கு நிலையான ரைடு கிடைக்கும்.

கார்களில் லீகலா என்னென்ன மாடிஃபிகேஷன்களை செய்யலாம் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

மாற்றுத்திறனாளிகளுக்கான மாடிஃபிகேஷன்கள்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையிலான மாடிஃபிகேஷன்களை செய்வது, அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும். அடாப்டடடு மிரர்கள், வீல் சேர் லிஃப்ட்கள், ஆட்டோமேட்டிக் அல்லது கையால் இயக்க கூடிய கிளட்ச், ஆக்ஸலரேட்டர் மற்றும் பிரேக்குகள் போன்றவற்றை பொருத்துவது ஆகிய மாடிஃபிகேஷன்கள், காரை அவர்களுக்கு ஏற்றதாக மாற்றும்.

கார்களில் லீகலா என்னென்ன மாடிஃபிகேஷன்களை செய்யலாம் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இங்கே நாங்கள் கூறியிருப்பது ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் கார்களை இன்னும் பல வழிகளில் மாடிஃபிகேஷன் செய்ய முடியும். மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் மாருதி சுஸுகி ஆல்டோ மற்றும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் என எந்தவொரு காரையும் மாடிஃபிகேஷன் செய்ய முடியும்.

கார்களில் லீகலா என்னென்ன மாடிஃபிகேஷன்களை செய்யலாம் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

பாடி வ்ராப்பிங்

இது உங்கள் காரின் பெயிண்ட் வேலைப்பாடுகளுக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது. அதற்கு மாற்றாக வினைல் வ்ராப், உங்கள் காரின் ஃபேக்டரி பெயிண்ட்டை பாதுகாக்கும். இந்த மாடிஃபிகேஷனை செய்வதற்கு உங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்ச ரூபாய் வரை செலவு ஆகலாம். ஆனால் சரியாக அப்ளை செய்யப்பட்டால், இது 5 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து உழைக்கும்.

கார்களில் லீகலா என்னென்ன மாடிஃபிகேஷன்களை செய்யலாம் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

உங்கள் காரில் வினைல் வ்ராப்பிங் செய்வது முற்றிலும் சட்டப்பூர்வமானது. இதுதவிர வ்ராப்பிங் செய்வதற்கு முன்போ அல்லது செய்த பின்போ நீங்கள் ஆர்டிஓ அனுமதியையும் பெற தேவையில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதுபோன்று சட்டத்திற்கு உட்பட்டு உங்கள் காரை நீங்கள் தாராளமாக மாடிஃபிகேஷன் செய்யலாம்.

கார்களில் லீகலா என்னென்ன மாடிஃபிகேஷன்களை செய்யலாம் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால் வாகனங்களை சட்டத்திற்கு உட்பட்டு மட்டும் மாடிஃபிகேஷன் செய்யுங்கள். ஒரு சிலர் விதிமுறைகளை மீறி வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்கின்றனர். இது முற்றிலும் தவறான விஷயம். அப்படி விதிமுறைகளை மீறி மாடிஃபிகேஷன் செய்யப்படும் வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கார்களில் லீகலா என்னென்ன மாடிஃபிகேஷன்களை செய்யலாம் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அத்துடன் அபராதமும் விதிக்கப்படலாம். எனவே எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில், குறிப்பாக ராயல் என்பீல்டு பைக்குகளில் அதிக அளவு மாடிஃபிகேஷன் செய்யப்படுகிறது. பெரும்பாலானோர் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பொருத்துவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.

கார்களில் லீகலா என்னென்ன மாடிஃபிகேஷன்களை செய்யலாம் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இது தவறானது என காவல் துறையினர் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பறிமுதல் செய்து, அவற்றை காவல் துறையினர் பலமுறை அழித்தும் உள்ளனர். ஆனால் இன்னமும் கூட இரு சக்கர வாகன உரிமையாளர்கள் மத்தியில் இதுகுறித்து போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பது வருத்தமான விஷயம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Legal car modifications in india here s everything you need to know
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X