இரவு ரயில்களில் பெண்கள் டிக்கெட் இல்லாமல் செல்லமுடியுமா? அடிக்கடி பயணிப்பவர்களுக்கு கூடஇந்த ரூல்ஸ்கள் தெரியாது

இந்திய ரயில்வே சட்டங்களில் பெண்கள் பாதுகாப்பாக ரயில்களில் பயணிக்கப் பல சட்டங்கள் உள்ளது. பலருக்கு இந்த சட்டங்கள் பற்றி அவ்வளவாகத் தெரியாது. இது குறித்த தகவல்களைக் காணலாம் வாருங்கள்

இரவு ரயில்களில் பெண்களால் டிக்கெட் எடுக்காமலேயே செல்ல முடியுமா? அடிக்கடி பயணிப்பவர்களுக்குக் கூட இந்த ரூல்ஸ்கள் தெரியாது !

இந்தியாவில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணிக்கப் பயன்படும் முக்கியமான பொது போக்குவரத்து ரயில். இந்தியாவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் பயணிக்கின்றன. அதில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்கின்றனர். இந்த ரயில்கள் மட்டும் இல்லை என்றால் இந்தியாவின் வளர்ச்சியே கேள்விக் குறியாக இருந்திருக்கும்.

இரவு ரயில்களில் பெண்களால் டிக்கெட் எடுக்காமலேயே செல்ல முடியுமா? அடிக்கடி பயணிப்பவர்களுக்குக் கூட இந்த ரூல்ஸ்கள் தெரியாது !

இந்தியாவில் ஓடும் நீண்ட தூரரயில்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் இயக்கப்படுகிறது. ரயிலில் சிலிப்பர்களில் படுத்துத் தூங்கும் வசதி இருப்பதால் பெரும்பாலான பயணிகள் இரவில் பயணிப்பதையே விரும்புகின்றனர்.

இரவு ரயில்களில் பெண்களால் டிக்கெட் எடுக்காமலேயே செல்ல முடியுமா? அடிக்கடி பயணிப்பவர்களுக்குக் கூட இந்த ரூல்ஸ்கள் தெரியாது !

இரவு பயணம் என்பது எந்த அளவிற்கு இனிமை ஆனதோ அதே அளவிற்கு ஆபத்தானது. பொதுவாக ரயில் நிலையங்கள் எல்லாம் ஊருக்கு வெளிப்புறமாகவே அமைக்கப்பட்டிருக்கும். அதனால் இரவு நேரங்களில் ரயில்வே ஸ்டேஷனிற்கு செல்வது என்பது சற்று பாதுகாப்பு குறைந்தது தான்.

இரவு ரயில்களில் பெண்களால் டிக்கெட் எடுக்காமலேயே செல்ல முடியுமா? அடிக்கடி பயணிப்பவர்களுக்குக் கூட இந்த ரூல்ஸ்கள் தெரியாது !

முன்னர் பல நேரங்களில் ரயில் நிலையங்களில் இரவு நேரங்களில் குற்றங்கள் நடந்துள்ளன. அதனால் பெண்கள் தனியாக இரவு நேர ரயில் பயணம் என்பது மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு 1989ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய ரயில்வே சட்டத்தில் பெண்களுக்காகப் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ரயிலில் பெண்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள என்னென்ன விஷயங்களைச் சட்டம் செய்துள்ளது எனக் காணலாம்

இரவு ரயில்களில் பெண்களால் டிக்கெட் எடுக்காமலேயே செல்ல முடியுமா? அடிக்கடி பயணிப்பவர்களுக்குக் கூட இந்த ரூல்ஸ்கள் தெரியாது !

அனைத்து ரயில்களிலும் பெண்கள் மட்டும் தனியாகப் பயணம் செய்யத் தனி பெட்டி ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த பெட்டியில் ஆண்கள் ஏற தடை உள்ளது. அந்த பெட்டியில் பெண்கள் மட்டுமே பயணிக்க வேண்டும். அந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகர் ஆணாக இருந்தால் அவர் ரயில் நிலையங்களில் ரயில் நிற்கும் போது அதிலிருந்து பெண்கள் இறங்கும் போது தான் டிக்கெட்டை பரிசோதனை செய்ய வேண்டும். ரயில் ஓடும் போது பெண்கள் பெட்டிக்குள் ஆண் டிக்கெட் பரிசோதகர் இருக்கக் கூடாது.

இரவு ரயில்களில் பெண்களால் டிக்கெட் எடுக்காமலேயே செல்ல முடியுமா? அடிக்கடி பயணிப்பவர்களுக்குக் கூட இந்த ரூல்ஸ்கள் தெரியாது !

அதன் படி 1989ம் ஆண்டின் இந்திய ரயில்வே சட்டம் பிரிவு 139படி ஒரு பெண் தனியாகவோ அல்லது குழந்தையுடனோ ஆண் துணையில்லாமல் இரவில் ரயிலில் பயணிக்கும் போது அவரிடம் ரயில் பயணத்திற்கான டிக்கெட் இல்லை என்றால் அவரை டிக்கெட் அவரை டிக்கெட் பரிசோதகர்கள் ரயிலிலிருந்து கீழே இறங்க உத்தரவிட முடியாது. அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு அந்த ரயிலில் அவர் டிக்கெட் இல்லாமலேயே செல்லலாம்.

இரவு ரயில்களில் பெண்களால் டிக்கெட் எடுக்காமலேயே செல்ல முடியுமா? அடிக்கடி பயணிப்பவர்களுக்குக் கூட இந்த ரூல்ஸ்கள் தெரியாது !

அதே நேரத்தில் இடையில் ஏதேனும் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் பாதுகாப்புப் பணியிலிருந்தால் அங்குப் பெண் போலீஸ் பணியிலிருந்தால் அவரிடம் வேண்டுமானால் டிக்கெட் இல்லாத குற்றத்திற்காக ஒப்படைக்கலாம். ஆனால் ரயில்வே போலீசில் பெண் போலீசார்கள் இரவில் ரயில் நிலையங்களில் பணியாற்றுவதில்லை என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்

இரவு ரயில்களில் பெண்களால் டிக்கெட் எடுக்காமலேயே செல்ல முடியுமா? அடிக்கடி பயணிப்பவர்களுக்குக் கூட இந்த ரூல்ஸ்கள் தெரியாது !

அதே போல இந்திய ரயில்வே சட்டம் பிரிவு 311ன் படி ரயிலில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டியில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் ஏறிவிட்டால் அதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அவரை அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி வேறு பெட்டியில் ஏறிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளத்தான் முடியும்.

இரவு ரயில்களில் பெண்களால் டிக்கெட் எடுக்காமலேயே செல்ல முடியுமா? அடிக்கடி பயணிப்பவர்களுக்குக் கூட இந்த ரூல்ஸ்கள் தெரியாது !

இந்திய ரயில்வே சட்டப் பிரிவு 162ன் படி ரயில்களில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே பயணிக்க முடியும். ஆண் குழந்தைகள் 12 வயது வரை இருந்தால் பயணிக்கலாம். 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் பெண்கள் பெட்டியில் ஏற அனுமதி கிடையாது.

இரவு ரயில்களில் பெண்களால் டிக்கெட் எடுக்காமலேயே செல்ல முடியுமா? அடிக்கடி பயணிப்பவர்களுக்குக் கூட இந்த ரூல்ஸ்கள் தெரியாது !

இது மட்டுமல்ல தற்போது இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் உள்ள பயணிகளுக்கு வழங்கப்படும் ஓய்வெடுக்கும் அறையில் 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு ரயில் நிலையத்தில் ஓய்வறை இருந்தால் அதில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவும் பெண்களின் பாதுகாப்பிற்காகவே செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
List of laws to protect women passengers in train travel
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X