கார் விபத்தில் காயமடைந்த பிரபல நடிகை... யார் என்று தெரிந்தால் நொறுங்கி போயிருவீங்க...

கார் விபத்தில் பிரபல நடிகை ஒருவர் காயமடைந்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார் விபத்தில் காயமடைந்த பிரபல நடிகை... யார் என்று தெரிந்தால் நொறுங்கி போயிருவீங்க...

இந்தியாவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவது மற்றும் குடிபோதையில் வாகனங்களை இயக்குவது போன்ற போக்குவரத்து விதிமுறை மீறல்களே பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணங்களாக உள்ளன.

கார் விபத்தில் காயமடைந்த பிரபல நடிகை... யார் என்று தெரிந்தால் நொறுங்கி போயிருவீங்க...

எனவே வாகன ஓட்டிகளுக்கு அரசு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இருந்தபோதும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. சில சமயங்களில் புகழ்பெற்ற மனிதர்களும் சாலை விபத்துக்களில் சிக்குகின்றனர். இந்த வகையில் தற்போது புகழ்பெற்ற நடிகை ஒருவரும், அவரது கணவரும் சாலை விபத்தில் சிக்கியுள்ளனர்.

கார் விபத்தில் காயமடைந்த பிரபல நடிகை... யார் என்று தெரிந்தால் நொறுங்கி போயிருவீங்க...

புகழ்பெற்ற பாலிவுட் நடிகை சபானா ஆஷ்மியும், அவரது கணவர் ஜாவேத் அக்தரும்தான் சாலை விபத்தில் சிக்கியுள்ளனர். இந்த விபத்து கடந்த சனிக்கிழமையன்று (ஜனவரி 18), மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று சபானா ஆஷ்மியும், ஜாவேத் அக்தரும், டாடா சபாரி ஸ்டிரோம் எஸ்யூவி காரில் பயணித்து கொண்டிருந்தனர்.

கார் விபத்தில் காயமடைந்த பிரபல நடிகை... யார் என்று தெரிந்தால் நொறுங்கி போயிருவீங்க...

கமலேஷ் காமத் என்பவர் இந்த காரை ஓட்டி சென்றார். மும்பையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் காலாப்பூர் என்ற இடத்திற்கு அருகே வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் கார் மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஜாவேத் அக்தருக்கு காயம் ஏற்படவில்லை. ஆனால் சபானா ஆஷ்மிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

கார் விபத்தில் காயமடைந்த பிரபல நடிகை... யார் என்று தெரிந்தால் நொறுங்கி போயிருவீங்க...

அவருக்கு தலை மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் ராஜேஷ் பாண்டுராங் ஷிண்டே ராய்காட் போலீசில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் அதிரடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் விபத்தில் காயமடைந்த பிரபல நடிகை... யார் என்று தெரிந்தால் நொறுங்கி போயிருவீங்க...

சபானா ஆஷ்மியின் கார் டிரைவர் கமலேஷ் காமத் பொறுப்பற்ற முறையில் காரை ஓட்டி வந்ததாக லாரி டிரைவர் ராஜேஷ் பாண்டுராங் ஷிண்டே போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் கார் டிரைவர் கமலேஷ் காமத் மீது போலீசார் அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார் விபத்தில் காயமடைந்த பிரபல நடிகை... யார் என்று தெரிந்தால் நொறுங்கி போயிருவீங்க...

இதுகுறித்து ராய்காட் போலீஸ் எஸ்பி பரஸ்கார் கூறுகையில், ''கண்மூடித்தனமாகவும், அலட்சியமாகவும் கார் ஓட்டிய காரணத்தால், டிரைவர் கமலேஷ் காமத் மீது நாங்கள் ஐபிசி செக்ஸன்கள் 279 மற்றும் 337-ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். ஆனால் கார் டிரைவர் கமலேஷ் காமத்தை நாங்கள் இன்னும் கைது செய்யவில்லை.

கார் விபத்தில் காயமடைந்த பிரபல நடிகை... யார் என்று தெரிந்தால் நொறுங்கி போயிருவீங்க...

கமலேஷ் காமத்திற்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு விட்டது. இதன் மூலம் அவர் கார் ஓட்டிய போது மது அருந்தியிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது'' என்றார். ஆனால் டாடா சபாரி ஸ்டிரோம் எஸ்யூவி காரில் பயணம் செய்து கொண்டிருந்த அனைவரும் சீட் பெல்ட் அணிந்திருந்தார்களா? என்பது உறுதியாக தெரியவில்லை.

கார் விபத்தில் காயமடைந்த பிரபல நடிகை... யார் என்று தெரிந்தால் நொறுங்கி போயிருவீங்க...

இந்த விபத்து நடைபெற்ற மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் தினமும் ஏராளமான விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இதில், பல விபத்துக்களில் உயிர் பலி நிகழ்கிறது. அதிவேகம்தான் பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணமாக உள்ளது. குறிப்பாக கார் டிரைவர்கள்தான் அதிவேகத்தில் பயணம் செய்து விபத்துக்களில் சிக்குகின்றனர்.

கார் விபத்தில் காயமடைந்த பிரபல நடிகை... யார் என்று தெரிந்தால் நொறுங்கி போயிருவீங்க...

எனவே அதிவேகத்தில் பயணம் செய்வதை இன்றோடு விட்டு விடுங்கள். இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய, மாநில அரசுகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன சட்டம் இதற்கு ஒரு உதாரணம்.

கார் விபத்தில் காயமடைந்த பிரபல நடிகை... யார் என்று தெரிந்தால் நொறுங்கி போயிருவீங்க...

இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. எனவே போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் நீங்கள் முறையாக பின்பற்றினால், அபராதம் செலுத்துவதில் இருந்து தப்புவதோடு, சாலை விபத்துக்களில் சிக்காமலும் தப்பி விடலாம்.

Image Courtesy: ‎Tushar Kevadiya/Facebook

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Lorry Driver Files FIR Against Bollywood Actress Shabana Azmi's Car Driver For Rash Driving. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X