செம ட்ரிக்ஸ்... டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் செல்ல லாரி டிரைவர்கள் செய்யும் தந்திரம்! என்ன தெரியுமா?

டோல்கேட்டில் கட்டணம் செலுத்தாமல் செல்வதற்காக லாரி டிரைவர்கள் தந்திரம் ஒன்றை செய்து வருகின்றனர். இந்த புது ட்ரிக்ஸ் என்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செம ட்ரிக்ஸ்... டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் செல்ல லாரி டிரைவர்கள் செய்யும் தந்திரம்! என்ன தெரியுமா?

இந்தியாவில் டோல்கேட் கட்டணம் செலுத்த பாஸ்ட்டேக் ஸ்டிக்கரை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. பாஸ்ட்டேக் ஸ்டிக்கரை பெறுவதற்கு வரும் ஜனவரி 15ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருப்பதால், அனைவரும் தற்போது தங்கள் வாகனத்திற்கு பாஸ்ட்டேக் ஸ்டிக்கரை வேக வேகமாக வாங்கி வருகின்றனர்.

செம ட்ரிக்ஸ்... டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் செல்ல லாரி டிரைவர்கள் செய்யும் தந்திரம்! என்ன தெரியுமா?

முதலில் கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என்றுதான் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன்பின் 15 நாட்கள், அதாவது டிசம்பர் 15ம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்பின் பாஸ்ட்டேக் பெறுவதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதம், அதாவது வரும் ஜனவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

செம ட்ரிக்ஸ்... டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் செல்ல லாரி டிரைவர்கள் செய்யும் தந்திரம்! என்ன தெரியுமா?

பாஸ்ட்டேக் என்பது வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் ஆகும். இதற்கு நீங்கள் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். உங்கள் வாகனம் டோல்கேட்டிற்கு செல்லும்போது அங்குள்ள ஸ்கேனர்கள் இந்த ஸ்டிக்கரை 'ரீட்' செய்து உங்கள் வருகையை பதிவு செய்யும். மேலும் உங்கள் கணக்கில் இருந்து கட்டணம் எடுத்து கொள்ளப்படும்.

செம ட்ரிக்ஸ்... டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் செல்ல லாரி டிரைவர்கள் செய்யும் தந்திரம்! என்ன தெரியுமா?

உங்கள் கணக்கில் பணம் தீர்ந்து விட்டால், நீங்கள் மீண்டும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். டோல் பிளாசாக்களில் கட்டணம் செலுத்த நீங்கள் நீண்ட நேரம் காத்து கொண்டிருப்பதை பாஸ்ட்டேக் தவிர்க்கிறது. இதன் மூலம் உங்கள் நேரமும், உங்கள் வாகனத்தின் எரிபொருளும் மிச்சமாகும். மேலும் வாகனங்கள் வேகமாக சென்று கொண்டே இருக்கலாம் என்பதால், டோல்கேட்களில் போக்குவரத்து நெரிசலும் குறையும்.

செம ட்ரிக்ஸ்... டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் செல்ல லாரி டிரைவர்கள் செய்யும் தந்திரம்! என்ன தெரியுமா?

இதுபோல் பாஸ்ட்டேக் மூலம் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இந்த சூழலில், டோல்கேட்களில் கட்டணம் செலுத்துவதில் இருந்து தப்பிப்பதற்காக, ஒரு சில லாரி டிரைவர்கள் பாஸ்ட்டேக் திட்டத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதற்காக மிகவும் நூதனமான ஒரு தந்திரத்தை அவர்கள் கையாள்கின்றனர்.

செம ட்ரிக்ஸ்... டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் செல்ல லாரி டிரைவர்கள் செய்யும் தந்திரம்! என்ன தெரியுமா?

டோல்கேட்களில் கட்டணம் செலுத்தாமல் தப்புவதற்காக, 2 டேக் தந்திரத்தை லாரி டிரைவர்கள் கையாள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது வேலிட் மற்றும் பிளாக்லிஸ்ட் செய்யப்பட்ட 2 ஸ்டிக்கர்களை லாரி டிரைவர்கள் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக அவர்கள் எப்படி கட்டணம் செலுத்தாமல் தப்புகின்றனர்? என்பதை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விளக்குகின்றனர்.

செம ட்ரிக்ஸ்... டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் செல்ல லாரி டிரைவர்கள் செய்யும் தந்திரம்! என்ன தெரியுமா?

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், ''2 டேக்குகளை கொண்டு வரும் வாகனங்களை கண்டறியும்படி, ஐஎச்எம்சிஎல் (IHMCL - Indian Highways Management Company Limited) நிறுவனத்திடம் கேட்டு கொண்டுள்ளோம். மேலும் டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் தப்பிப்பதற்காக 2 டேக்குகளை பயன்படுத்திய ஒரு சில லாரி டிரைவர்களை நாங்களும் பிடித்துள்ளோம்.

செம ட்ரிக்ஸ்... டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் செல்ல லாரி டிரைவர்கள் செய்யும் தந்திரம்! என்ன தெரியுமா?

இத்தகைய டிரைவர்கள் பிளாக்லிஸ்ட் செய்யப்பட்ட டேக்குகளை வாகனத்தின் கண்ணாடியில் ஒட்டி கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன்பின் டோல்கேட்டிற்கு வந்ததும், நம்மிடம் கட்டணம் பெறாமல் அனுப்பி விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன், டோல்கேட் அதிகாரிகளுடன் 5 முதல் 10 நிமிடங்கள் வரை கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபடுகின்றனர்.

செம ட்ரிக்ஸ்... டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் செல்ல லாரி டிரைவர்கள் செய்யும் தந்திரம்! என்ன தெரியுமா?

இதன் மூலம் டோல்கேட்களில் உள்ள அதிகாரிகளை அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றனர். ஆனால் அதன்பின்பும் கூட கட்டணம் வாங்காமல் அவர்களை அங்கிருந்து புறப்பட அனுமதிக்கவில்லை என்றால், வேலிட் டேக்கை கொடுத்து ஸ்கேன் செய்து கொள்கின்றனர். அல்லது ரொக்கமாக கட்டணத்தை செலுத்தி விட்டு செல்கின்றனர்.

செம ட்ரிக்ஸ்... டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் செல்ல லாரி டிரைவர்கள் செய்யும் தந்திரம்! என்ன தெரியுமா?

அவர்களின் இந்த தந்திரம் உங்களுக்கு தற்போது புரிந்திருக்கும். கட்டணம் செலுத்தாமல் தப்பிப்பதற்காகவே அவர்கள் இந்த யுக்தியை கையாள்கின்றனர். டோல்கேட் அதிகாரிகளுடன் லாரி டிரைவர்கள் வாக்குவாதம் செய்யும் சமயங்களில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகிறது. எனவே டோல்கேட் அதிகாரிகளுக்கு கடுமையான அழுத்தம் ஏற்படுகிறது.

செம ட்ரிக்ஸ்... டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் செல்ல லாரி டிரைவர்கள் செய்யும் தந்திரம்! என்ன தெரியுமா?

இதன் மூலம் தங்களிடம் கட்டணம் பெறாமல் அனுப்பி வைக்கும் வகையில், டோல்கேட் அதிகாரிகளுக்கு லாரி டிரைவர்கள் நெருக்கடியை உண்டாக்குகின்றனர். அவ்வாறு கட்டணம் பெறாமல் அனுப்பி வைக்கப்பட்டால், அவர்களால் ஒரு நாளைக்கு 1,000 முதல் 1,500 ரூபாய் வரை சேமிக்க முடியும். எனவேதான் அவர்கள் இந்த தந்திரத்தை கையாள்கின்றனர்.

செம ட்ரிக்ஸ்... டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் செல்ல லாரி டிரைவர்கள் செய்யும் தந்திரம்! என்ன தெரியுமா?

லாரி டிரைவர்களின் இந்த தந்திரத்தால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. குறிப்பாக டோல்கேட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதுபோன்ற லாரி டிரைவர்களை கண்டறியும் முயற்சியிலும், அவர்களின் இந்த தந்திர நடவடிக்கையை தடுக்கும் முயற்சியிலும் தற்போது நாங்கள் ஈடுபட்டுள்ளோம்'' என்றனர்.

செம ட்ரிக்ஸ்... டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் செல்ல லாரி டிரைவர்கள் செய்யும் தந்திரம்! என்ன தெரியுமா?

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர்கள்தான் இந்த நூதன வழிமுறையை பின்பற்றி வருகின்றனர். இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய (National Highways Authority of India - NHAI) அதிகாரிகள் கூறுகையில், ஒரு சில லாரி டிரைவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செம ட்ரிக்ஸ்... டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் செல்ல லாரி டிரைவர்கள் செய்யும் தந்திரம்! என்ன தெரியுமா?

இதன்படி அவர்களால் பயன்படுத்தப்பட்ட இரண்டு ஸ்டிக்கர்களும் பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது'' என்றனர். இப்படியெல்லாம் வித்தியாச வித்தியாசமாக யோசிக்க லாரி டிரைவர்களுக்கு யார் சொல்லி கொடுக்கிறார்கள்? என்பது தெரியவில்லை. இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Lorry Drivers Use Novel Tricks To Evade Toll Plaza Fee. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X