தாமரையை பெயராக வைத்து இயங்கும் கார் நிறுவனத்தின் இயக்குநருக்கு தடை: எதற்காக தெரியுமா...?

தாமரையை சின்னமாக வைத்துக்கொண்டு இயங்கிவரும் லோட்டஸ் நிறுவனத்தின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இயக்குநருக்கு ஒரு ஆண்டு காலம் கார் ஓட்டக்கூடாது என நார்விச் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாமரையை பெயராக வைத்து இயங்கும் கார் நிறுவனத்தின் இயக்குநருக்கு தடை: எதற்காக தெரியுமா...?

லண்டனைச் சார்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான லோட்டஸ், இலகு ரக ஸ்போர்ட்ஸ் மற்றும் பந்தயக் கார்களைத் தயாரித்து வருகின்றது. கடந்த 1948ம் ஆண்டு யுனைடெட் கிங்டத்தின் ஹெத்தல் என்னும் நகரத்தில் இந்த கார் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட எஸ்பிரிட், எலான், யூரோப்பா, எலிஸ், எக்ஸைக் மற்றும் இவோரா ஆகிய கார்கள் மிகவும் பிரபலமானவை.

தாமரையை பெயராக வைத்து இயங்கும் கார் நிறுவனத்தின் இயக்குநருக்கு தடை: எதற்காக தெரியுமா...?

இந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட சில கார்கள் எஃப்1 போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளது. பிரிட்டிஷைச் சார்ந்து இயங்கும் இந்த நிறுவனத்தின் 51 சதவீதம் பங்கினை கீலி எனப்படும் சீனாவைச் சேர்ந்த செஜியாங் கீலி ஹோல்டிங்ஸ் குழுமம் கொள்முதல் செய்துள்ளது. லோட்டஸ் தயாரிப்புகள் அனைத்தும் மிகவும் பவரானவை என்றாலும், அதன் கார்களை கையாள்வது மிகவும் எளிதாக இருக்கும். இதனால், இந்த நிறுவனத்தின் கார்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம்.

தாமரையை பெயராக வைத்து இயங்கும் கார் நிறுவனத்தின் இயக்குநருக்கு தடை: எதற்காக தெரியுமா...?

இந்த நிலையில், லோட்டஸ் நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றிவரும் உதய் சேனாபதி என்பவரை இங்கிலாந்து போலீஸார் கைது செய்துள்ளனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் இந்த நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்துள்ளார். முன்னதாக ஜாகுவார், லேண்ட் ரோவர் மற்றும் பென்ட்லி ஆகிய முன்னணி நிறுவனங்கள் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், உதய் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி அன்று மதுஅருந்திவிட்டு, தனது வால்வோ எக்ஸ்சி60 மாடல் காரில் சென்றுள்ளார். அப்போது, ஈஸ்ட் ஏஞ்சலியா பிராந்தியத்தில் உள்ள நார்விச் என்னும் பகுதியில் போலீஸார் அவரை மடக்கி விசாரணைச் செய்துள்ளனர். அதில், அவர் குடித்துவிட்டு வாகனத்தை இயக்கி வந்தது தெரியவந்தது. பின்னர், இதை உறுதி செய்யும் விதமாக பிரீத் அனலைஸரில் சோதனைச் செய்தனர். அதில், அவர் அளவிற்கு அதிகமாக மது அருந்தி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவர்மீது வழக்குபதிவு செய்த போலீஸார், மேற்படி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

தாமரையை பெயராக வைத்து இயங்கும் கார் நிறுவனத்தின் இயக்குநருக்கு தடை: எதற்காக தெரியுமா...?

இதற்கிடையில், உதய் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சிமோன் நிக்கோலஸ், "உதய் தனது நண்பர்கள் கொடுத்த பார்ட்டிக்கு சென்றுள்ளார். பின்னர், பார்ட்டியை முடித்த அவர், டாக்ஸி மூலம் வீடு செல்வதற்காக திட்டமிட்டுள்ளார். ஆனால், அதற்கு முன்னதாக தனது வால்வோ எக்ஸ்சி60 காரை பாதுகாப்பான இடத்தில் பார்க்கிங் செய்வதற்காக இடத்தைத் தேடியுள்ளார். அவரின் துரதிர்ஷ்டம், அந்த நேரத்தில் பார்க்கிங் கிடைக்கவில்லை. அப்போதுதான், அவர் காரை ஓட்டிச் செல்லும்போது போலீஸார் கைது செய்துள்ளனர்" என விளக்கம் அளித்தார்.

உதய் தரப்பில் இவ்வாறு காரணம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர் குடித்து விட்டு வாகனம் ஓட்டியது தவறு என நார்விச் மேஜிஸ்டிரேட் கருத்து தெரிவித்தது. மேலும், அவருக்கு 1,850 யூரோ அபராதம் விதிக்கப்பட்டது. அதில், உடனடியாக 85 யூரோவைக் கட்ட உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் 12 மாதங்களுக்கு வாகனங்களை இயக்கக் கூட என கடுமையான உத்தரவையும் நார்விச் நீதிமன்றம் பிறப்பித்தது.

தாமரையை பெயராக வைத்து இயங்கும் கார் நிறுவனத்தின் இயக்குநருக்கு தடை: எதற்காக தெரியுமா...?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உதய்-க்கு வழங்கியிருக்கக் கூடிய இந்த தண்டனை கடுமையானதாக இருந்தாலும், குற்றங்களைத் தவிர்க்க இதுபோன்ற நடவடிக்கைதான் உதவிசெய்யும் என அந்த நாட்டு சமூகநல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

லோட்டஸ் நிறுவன ஊழியர் வாகனத்தை இயக்கக்கூடாது என தடைவிதிக்கப்படுவது இது ஒன்றும் முதல் முறையல்ல, இதற்கு முன்னதாகவும் இதேபோன்று அங்கு பணியாற்றும் ஊழியருக்கு நடைபெற்றுள்ளது. மார்க் கேல்ஸ் என்ற ஊழியர் கடந்த 2018ம் ஆண்டு புதியதாக தயாரித்த கார் ஒன்றை 164 கிமீ வேகத்தில் ஓட்டி டெஸ்ட் செய்ததற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவருக்கு 30 நாட்கள் மட்டுமே தடைவிதிக்கப்பட்டது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Lotus Car Company Director Uday Banned From Driving For 12 Months. Read In Tamil.
Story first published: Monday, March 11, 2019, 14:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X