உங்க ராசிக்கு எந்த கலர் வண்டியை வாங்கணும் தெரியுமா? இதை மட்டும் சரியா பண்ணீட்டா அதிர்ஷ்டம் கொட்டுமாம்!

ராசி (Zodiac Signs), ஜோதிடம் (Astrology) ஆகிய விஷயங்களில் இந்திய மக்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. திருமணம் செய்வது மற்றும் புதிய வீடு அல்லது நிலம் வாங்குவது என வாழ்க்கையில் மிகவும் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, கண்டிப்பாக ஜோதிடம் பார்ப்பதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர்.

இதன் அடிப்படையில்தான் அவர்களின் முடிவுகள் அமைகிறது. இதேபோல் புதிய கார் அல்லது பைக் வாங்குவதற்கு முன்பு, ஜோதிடம் பார்க்கும் பழக்கமும் பலரிடம் காணப்படுகிறது. இதில், நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்குதான் இந்த செய்தி. தங்கள் ராசிக்கு ஏற்ற நிறத்தில் (Colour) வாகனங்களை வாங்க வேண்டும் என மக்கள் ஆசைப்படுகின்றனர். வாகனத்தின் நிறத்தை தேர்வு செய்வது என்பது, ஒருவரின் தனிப்பட்ட விருப்பம்தான் என்றாலும் கூட, ராசியை பொறுத்து ஒவ்வொருவருக்கும் ஒரு சில நிறங்கள் சாதகமானதாக இருக்கும் என ஜோதிடம் கூறுகிறது.

உங்க ராசிக்கு எந்த கலர் வண்டியை வாங்கணும் தெரியுமா? இதை மட்டும் சரியா பண்ணீட்டா அதிர்ஷ்டம் கொட்டுமாம்!

ஜோதிடத்தின் அடிப்படையில், பொருத்தமான நிறம் என்பது வாகன உரிமையாளர்களின் ராசியை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு ராசிக்கும் சாதகமான நிறம் எது? என்பதைதான் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். எனவே புதிதாக கார் அல்லது பைக் வாங்கும்போது, உங்கள் ராசிக்கு ஏற்ற நிறத்தை இதன் மூலமாக நீங்கள் தேர்வு செய்து கொள்ள முடியும். இங்கே மற்றொரு மிக முக்கியமான விஷயத்தையும் நாங்கள் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

ராசி மற்றும் ஜோதிடம் ஆகிய விஷயங்களில் நம்பிக்கை இல்லாத பலரும் இந்தியாவில் உள்ளனர் என்பதை மறுக்க முடியாது. ஆனால் ராசி, ஜோதிடம் என்பது இந்தியாவில் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு பாரம்பரியமான நம்பிக்கை ஆகும். எனவேதான் முக்கிய முடிவுகளுக்கு பலரும் அவற்றை சார்ந்துள்ளனர். எனவே அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகளுக்கும் மரியாதை அளிக்கும் விதமாக இந்த செய்தியை வழங்குகிறோம். சரி, வாருங்கள் செய்திக்குள் செல்லலாம்.

முதலில் மேஷ ராசி (Aries). செவ்வாய்தான் (Mars) இந்த ராசிக்கான அதிபதி. மேஷ ராசிக்கார்களுக்கு சிகப்பு, மஞ்சள் மற்றும் குங்குமப்பூ நிறம் ஆகியவை சாதகமாக கருதப்படுகின்றன. அதேபோல் ரிஷப ராசியின் (Taurus) அதிபதி வெள்ளி (Venus) ஆகும். ரிஷப ராசிக்காரர்களுக்கு வெள்ளை, பச்சை மற்றும் கருப்பு ஆகிய நிறங்கள் சாதகமானதாக பார்க்கப்படுகிறது. அடுத்து நாம் பார்க்க போவது மிதுனம் (Gemini). இந்த ராசியின் அதிபதி புதன் (Mercury).

சிகப்பு, புல் பச்சை மற்றும் சாம்பல் ஆகியவை மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான நிறங்கள் ஆகும். அடுத்தது கடக ராசி (Cancer). சந்திரன்தான் (Chandra) இந்த ராசியின் அதிபதி. அதாவது நிலா (Moon). வெள்ளை, சிகப்பு மற்றும் மஞ்சள் ஆகியவை கடக ராசிக்கு சாதகமான நிறங்கள் ஆகும். அடுத்து நாம் பார்க்க போவது சிம்ம ராசி (Leo). சூரியன்தான் இந்த ராசியின் அதிபதி (Sun). சிகப்பு, மஞ்சள், வெள்ளை மற்றும் குங்குமப்பூ நிறம் ஆகியவை இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமானவை ஆகும்.

அடுத்தது கன்னி ராசி (Virgo). மிதுன ராசியை போல், இந்த ராசிக்கும் புதன்தான் அதிபதி. எனவே மிதுன ராசிக்காரர்களை போல் இவர்களுக்கும் சிகப்பு, புல் பச்சை மற்றும் சாம்பல் ஆகியவைதான் சாதகமான நிறங்களாக உள்ளன. அடுத்து நாம் பார்க்க போவது துலாம் ராசி (Libra). ரிஷப ராசியை போல், துலாம் ராசிக்கும் வெள்ளிதான் அதிபதி. எனவே ரிஷப ராசிக்காரர்களை போன்று, துலாம் ராசிக்காரர்களுக்கும் வெள்ளை, பச்சை மற்றும் கருப்பு ஆகியவைதான் சாதகமான நிறங்களாக கருதப்படுகின்றன.

அடுத்தது விருச்சிக ராசி (Scorpio). மேஷ ராசியை போல், செவ்வாய்தான் இந்த ராசிக்கும் அதிபதி ஆகும். எனவே மேஷ ராசிக்கார்களை போன்றே சிகப்பு, மஞ்சள் மற்றும் குங்குமப்பூ நிறம் ஆகியவை விருச்சிக ராசிக்காரர்களுக்கும் சாதகமாக பார்க்கப்படுகின்றன. அடுத்தது தனுசு ராசி (Sagittarius). வியாழன்தான் (Jupiter) இந்த ராசிக்கான அதிபதி. அதாவது குரு. சிகப்பு, மஞ்சள், வெண்கல மற்றும் குங்குமப்பூ நிறம் ஆகியவை இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமானவை ஆகும்.

அடுத்து நாம் பார்க்க போவது மகரம் (Capricorn). இந்த ராசிக்கான அதிபதி சனி (Saturn) ஆகும். நீலம், பச்சை மற்றும் மஞ்சள் ஆகியவை இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான நிறங்களாக உள்ளன. அதேபோல் கும்ப ராசிக்காரர்களுக்கும் (Aquarius), சனிதான் அதிபதி. எனவே இவர்களுக்கும் நீலம், பச்சை மற்றும் மஞ்சள் ஆகியவைதான் சாதகமான நிறங்கள். அடுத்தது மீன ராசி (Pisces). தனுசு ராசியை போல், மீன ராசிக்கும் வியாழன்தான் அதிபதி. எனவே சிகப்பு, மஞ்சள், வெண்கல மற்றும் குங்குமப்பூ நிறம் ஆகியவைதான் இவர்களுக்கும் சாதகமான நிறங்கள் ஆகும். அந்தந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு சாதகமான நிறம் கொண்ட வாகனங்களை வாங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Lucky colour for cars and bikes as per astrology zodiac signs
Story first published: Tuesday, November 29, 2022, 12:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X