சூப்பர்... அரபு நாட்டில் மாஸ் காட்டும் இந்திய தொழிலதிபர்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

ஐக்கிய அரபு எமீரகத்தில் புகழ்பெற்ற தொழிலதிபராக இருக்கும் யூசுப் அலி பற்றிய இந்த விஷயங்கள் உங்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கலாம்.

சூப்பர்... அரபு நாட்டில் மாஸ் காட்டும் இந்திய தொழிலதிபர்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர்கள் பலர் வெளிநாடுகளிலும் கொடி கட்டி பறக்கின்றனர். அவர்களில் யூசுப் அலி (Yusuf Ali) முக்கியமானவர். ஐக்கிய அரபு எமீரகத்திற்கு அடிக்கடி சென்று வருபவர்களுக்கு, இவரை பற்றி அறிமுகமே தேவையில்லை. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் பிறந்தவரான யூசுப் அலி, ஐக்கிய அரபு எமீரகத்தில் கொடி கட்டி பறக்கும் தொழில் அதிபராக இருந்து வருகிறார்.

சூப்பர்... அரபு நாட்டில் மாஸ் காட்டும் இந்திய தொழிலதிபர்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

யூசுப் அலிக்கு தற்போது 65 வயதாகிறது. நீங்கள் இதற்கு முன்பு ஐக்கிய அரபு எமீரகம் சென்றிருந்தால், லூலூ மால்கள் (Lulu Malls) பற்றி அறிந்திருப்பீர்கள். அதனை நிர்வகித்து வரும் லூலூ குரூப் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் யூசுப் அலிதான். இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமீரகம் ஆகிய நாடுகளின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் யூசுப் அலியும் ஒருவராக உள்ளார்.

சூப்பர்... அரபு நாட்டில் மாஸ் காட்டும் இந்திய தொழிலதிபர்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

லூலூ குரூப் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான யூசுப் அலி, இந்தியர்கள் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறார். இந்தியாவிற்கு வெளியே அதிக இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வரும் நிறுவனங்களின் பட்டியலில் லூலூ குரூப் இன்டர்நேஷனல் முதன்மையான இடத்தில் உள்ளது.

சூப்பர்... அரபு நாட்டில் மாஸ் காட்டும் இந்திய தொழிலதிபர்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த யூசுப் அலி மற்ற தொழிலதிபர்களை போலவே மிகவும் விலை உயர்ந்த கார்களை அதிகம் விரும்ப கூடியவர். எனவே அவர் சொந்தமாக வைத்திருக்கும் கார்களை பற்றியும், அவர் விரும்பி ஓட்டும் கார்களையும் பற்றியும் சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சூப்பர்... அரபு நாட்டில் மாஸ் காட்டும் இந்திய தொழிலதிபர்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost)

உலகில் கிட்டத்தட்ட அனைத்து தொழில் அதிபர்களாலும் விரும்பப்படும் நிறுவனங்களில் ரோல்ஸ் ராய்ஸ் முக்கியமானது. யூசுப் அலிக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் பிடிக்கும். அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் உள்ளது. கேரள மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்த கார், ஸ்பெஷல் நம்பர் பிளேட்டை பெற்றுள்ளது.

சூப்பர்... அரபு நாட்டில் மாஸ் காட்டும் இந்திய தொழிலதிபர்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

அதாவது இந்த காரின் நம்பர் பிளேட்டில், கேரள அரசின் ஸ்டாம்ப் இருக்கும். NORKA-வின் (Department of Non-Resident Keralites Affairs) தலைவராக யூசுப் அலி உள்ளார். எனவேதான் அவரது காரில், அரசு நம்பர் பிளேட் இடம்பெற்றுள்ளது. இந்தியா வரும்போதெல்லாம் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை பயன்படுத்துவது யூசுப் அலியின் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan)

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் மற்றும் ஒரே எஸ்யூவி ரக கார் கல்லினன்தான். உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான காராக ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் உருவெடுத்துள்ளது. இந்த காரில் இருக்கும் அதிநவீன வசதிகள், அவர்களை கவர்ந்திழுக்கின்றன. யூசுப் அலியின் இந்த கல்லினன் கார் துபாயில் உள்ளது. இந்த காரை யூசுப் அலியே ஓட்டுவதை பார்க்க முடிந்துள்ளது.

MOST READ: சீட் நுனியில் அமர்ந்து பென்ஸ் கார் ஓட்டி வந்த 5 வயசு பொடியன்! சொன்ன காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்

சூப்பர்... அரபு நாட்டில் மாஸ் காட்டும் இந்திய தொழிலதிபர்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

லெக்ஸஸ் எல்எக்ஸ் 750 (Lexus LX 750)

லெக்ஸஸ் எல்எக்ஸ் 750 காரும் யூசுப் அலியிடம் உள்ளது. வெள்ளை நிற காரான இது, அதே ட்ரேட்மார்க் பதிவு எண்ணை பெற்றுள்ளது. இது சொகுசு வசதிகளுக்கு பெயர் பெற்ற மாடல் ஆகும். எனவே விலை உயர்ந்த கார்களில் ஒன்றாக, லெக்ஸஸ் எல்எக்ஸ் 750 திகழ்கிறது. ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட இந்த கார், இந்தியாவிலும் ஒரு சில பிரபலங்களிடம் உள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes-Benz GLS)

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரையும் யூசுப் அலி சொந்தமாக வைத்திருக்கிறார். யூசுப் அலி இந்த காரில் பயணம் செய்வதை பல முறை பார்க்க முடிந்துள்ளது. ஹெலிகாப்டரில் இருந்து யூசுப் அலி லேண்ட் ஆகும் சமயங்களில் எல்லாம் இந்த கார்தான் அவரை பிக்அப் செய்ய செல்லும். இது அதிக சொகுசு வசதிகளை கொண்ட கார்களில் ஒன்றாகும்.

பிஎம்டபிள்யூ 750 எல்ஐ எம் ஸ்போர்ட் (BMW 750 Li M Sport)

பிஎம்டபிள்யூ 750 எல்ஐ எம் ஸ்போர்ட் காரையும் யூசுப் அலி சொந்தமாக வைத்துள்ளார். விமான நிலையத்தில் இருந்து விருந்தினர்களை வரவேற்பதற்காக யூசுப் அலி அடிக்கடி இந்த காரை பயன்படுத்துவது வழக்கம். இந்த காரில், 4.4 லிட்டர் பெட்ரோல் வி8 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 600 பிஎச்பி பவரை வாரி வழங்க கூடியது. இதுகுறித்து கார்டாக் செய்தி வெளியிட்டுள்ளது.

MOST READ: லாரியில் இருந்து ராயல் என்பீல்டு பைக்கை கீழே இறக்கும்போது இளைஞருக்கு நடந்த சம்பவம்... வைரல் வீடியோ

சூப்பர்... அரபு நாட்டில் மாஸ் காட்டும் இந்திய தொழிலதிபர்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

பொதுவாகவே ஐக்கிய அரபு எமீரகம் லக்ஸரி கார்களுக்கு பெயர் பெற்றது. அங்கு வசிக்கும் பலரிடம் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்கள் இருக்கும். இந்த வகையில், யூசுப் அலியின் லக்ஸரி கார் கலெக்ஸன் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. இங்கே நாங்கள் ஒரு சில கார்களை மட்டுமே வழங்கியுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் இன்னும் பல்வேறு கார்கள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Lulu Group International Chairman Yusuff Ali's Luxury Car Collection. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X