கொரோனாவிற்கு எதிரான போர்: படை வீரராக மாறும் பிரபல சொகுசு கார் நிறுவனம்... அசத்தலான அறிவிப்பு!

கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கும் விதமாக மருத்துவ மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் பணியில் பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கொரோனாவிற்கு எதிரான போர்: படை வீரராக மாறும் பிரபல சொகுசு கார் நிறுவனம்... அசத்தலான அறிவிப்பு!

உலக போரைக் காட்டிலும் மிகக் கொடுமையான தாக்கத்தை கொரோனா (நாவல் கோவிட்-19) ஏற்படுத்தி வருகின்றது. இந்த உயிர் கொல்லி வைரஸின் தாக்கத்தால் உலக நாடுகள் பல மிகப்பெரிய பேரழிவைச் சந்தித்து வருகின்றது. குறிப்பாக, ஏராளமான உயிர்களை அது பலி கொடுத்து வருகின்றது.

கொரோனாவிற்கு எதிரான போர்: படை வீரராக மாறும் பிரபல சொகுசு கார் நிறுவனம்... அசத்தலான அறிவிப்பு!

சுகாதாரத்துறையில் தலை சிறந்து விளங்கிய பல வளர்ந்த நாடுகள்கூட கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் சூழலே இப்போது வரை காணப்படுகின்றது. இதனைக் கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் அதிக எண்ணிக்கையிலான உயிர்கள் தினந்தோறும் பரிதாபமாக உலகை விட்டு பிரிந்து வருகின்றன..

கொரோனாவிற்கு எதிரான போர்: படை வீரராக மாறும் பிரபல சொகுசு கார் நிறுவனம்... அசத்தலான அறிவிப்பு!

இருப்பினும், சற்றும் தளராமல் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கு எதிரான போரை தொடுத்த வண்ணமே இருக்கின்றது. முக்கியமாக மக்களை கொரோனா தொற்றில் இருந்து காப்பதற்கான முயற்சிகளை போர்க்கால நடவடிக்கையாக அவை மேற்கொண்டு வருகின்றன.

கொரோனாவிற்கு எதிரான போர்: படை வீரராக மாறும் பிரபல சொகுசு கார் நிறுவனம்... அசத்தலான அறிவிப்பு!

இதற்கிடையில் வைரஸ் பாதிப்பில் இருந்து மீட்பதற்கான மாற்று மருந்தை தயாரிக்கும் பணியிலும் ஒவ்வொரு நாட்டு அரசும் தீவிரம் காட்டி வருகின்றது. அதேசமயம், உலகின் மிக சிறிய நாடுகளில் ஒன்றான கியூபாவில் கொரோனாவிற்கான மருந்து கண்டுபிடித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பல உலக நாடுகள் தற்போது வரை மிக சரியான மாற்று மருந்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றது.

கொரோனாவிற்கு எதிரான போர்: படை வீரராக மாறும் பிரபல சொகுசு கார் நிறுவனம்... அசத்தலான அறிவிப்பு!

இந்த நிலையில் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் சில வாகன உற்பத்தி நிறுவனங்களின் உதவியை நாடியிருக்கின்றன. இதனடிப்படையில், பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், 3டி பிரிண்டர்ஸ் உதவியுடன் கொரோனாவில் பாதுகாப்பதற்கான கருவிகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

கொரோனாவிற்கு எதிரான போர்: படை வீரராக மாறும் பிரபல சொகுசு கார் நிறுவனம்... அசத்தலான அறிவிப்பு!

இதற்காக, திறமை வாய்ந்த ஊழியர்கள் குழுவை அது நிர்ணயித்துள்ளது. இவர்கள் பல ஆண்டுகள் ஆட்டோத் துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள். இவர்கள் மருத்துவ சாதனங்களை தயாரிப்பதிலும் கை தேர்ந்தவர்கள் என பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனாவிற்கு எதிரான போர்: படை வீரராக மாறும் பிரபல சொகுசு கார் நிறுவனம்... அசத்தலான அறிவிப்பு!

சொகுசு கார்களை உற்பத்தி செய்து வரும் பென்ஸ் நிறுவனம் இந்த 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1,50,000 பிளாஸ்டிக் மற்றும் மெட்டல் உபகரணங்களை ஒவ்வொரு வருடமும் தயாரித்து வருகின்றது. இந்த அதீத திறனை மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்க பென்ஸ் திட்டமிட்டுள்ளது.

கொரோனாவிற்கு எதிரான போர்: படை வீரராக மாறும் பிரபல சொகுசு கார் நிறுவனம்... அசத்தலான அறிவிப்பு!

இந்த உபகரணங்கள் வரும் காலத்தில் கொரோனா மட்டுமின்றி பலவிதமான மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தப்படும்.ஆனால், தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை முன்னிட்டே இந்த நடவடிக்கையில் பென்ஸ் களமிறங்கியிருக்கின்றது.

கொரோனாவிற்கு எதிரான போர்: படை வீரராக மாறும் பிரபல சொகுசு கார் நிறுவனம்... அசத்தலான அறிவிப்பு!

தற்போது உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றில் தமிழகம் இந்திய அளவில் 2ம் இடத்தை பிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.

கொரோனாவிற்கு எதிரான போர்: படை வீரராக மாறும் பிரபல சொகுசு கார் நிறுவனம்... அசத்தலான அறிவிப்பு!

குறிப்பாக, இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்தே இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த 41 பேர் வசித்த இடத்தில் தற்போது தீவிர கண்கானிப்பு செய்ய இருப்பதாக பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதற்காக, அப்பகுதியில் வீடு, வீடாக சென்று யாருக்காவது காய்ச்சல், இருமல் பிரச்னை இருக்கிறதா என கண்கானிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

கொரோனாவிற்கு எதிரான போர்: படை வீரராக மாறும் பிரபல சொகுசு கார் நிறுவனம்... அசத்தலான அறிவிப்பு!

இந்த பரிசோதனையில் காய்ச்சல், இருமல் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களை உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பது தற்போது தமிழக மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கின்றது. இம்மாதிரியான நேரத்தில் மக்களைக் காக்கின்ற முயற்சியில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் மருத்துவ உபகரணங்களை தயாரிக்க ஆரம்பிப்பது வரவேற்பை அளிக்கும் விதமாக உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Luxury Car Maker Mercedes Benz Plans To Produce Medical Equipment For CoronaVirus. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X