Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 9 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரூ.30 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்கி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த விவசாயி! காரணம் தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க
விவசாயி ஒருவர், 30 கோடி ரூபாய்க்கு ஹெலிகாப்டர் வாங்கி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கியிருப்பது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவருக்கு விவசாயி என்பதுடன், தொழில் அதிபர் என்பது உள்பட பல்வேறு முகங்கள் உள்ளன. தனது பால் பண்ணை தொழிலை சிறப்பாக செய்வதற்காக நாடு முழுவதும் பயணிக்க வேண்டிய தேவை அவருக்கு இருக்கிறது.

இதன் காரணமாகதான் அவர் தற்போது ஹெலிகாப்டரை வாங்கியுள்ளார். ஜனார்த்தன் போயிர் என்ற அந்த விவசாயி, பால் பண்ணை தொழிலில் சமீபத்தில்தான் களமிறங்கினார். நாங்கள் ஏற்கனவே கூறியபடி இந்த புதிய தொழில் காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு ஜனார்த்தன் போயிர் பயணிக்க வேண்டியுள்ளது.

எனவே தொழில் நிமித்தமான தனது பயணங்கள் சௌகரியமாக இருக்க வேண்டும் என்பதற்காக 30 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெலிகாப்டரை ஜனார்த்தன் போயிர் வாங்கியுள்ளார். பால் பண்ணை தொழில் காரணமாக, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு அடிக்கடி பயணம் செய்ய வேண்டியுள்ளதாக ஜனார்த்தன் போயிர் கூறியுள்ளார்.

நிறைய பகுதிகளில் விமான நிலைய வசதி இல்லாத காரணத்தால், சில சமயங்களில் மிக நீண்ட நேரம் பயணிக்க வேண்டிய சூழல் ஜனார்த்தன் போயிருக்கு ஏற்படுகிறதாம். எனவே ஹெலிகாப்டரை வாங்கி விடுவது என ஜனார்த்தன் போயிர் முடிவு செய்து விட்டார். இந்த யோசனையை ஜனார்த்தன் போயிருக்கு, அவரது நண்பர் ஒருவர்தான் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜனார்த்தன் போயிர் கூறுகையில், ''தொழில் நிமித்தமாக நான் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியுள்ளது. நான் ஹெலிகாப்டரை வாங்கியுள்ளதற்கு அதுவே காரணம். விவசாயத்துடன் எனது பால் பண்ணை தொழிலையும் நான் கவனிக்க வேண்டியுள்ளது'' என்றார். கடந்த ஞாயிற்று கிழமையன்று, ஜனார்த்தன் போயிரின் கிராமத்திற்கு சோதனைக்காக ஹெலிகாப்டர் அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த ஹெலிகாப்டரில் பயணிக்கும் வாய்ப்பை கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு ஜனார்த்தன் போயிர் வழங்கினார். 2.5 ஏக்கர் நிலத்தில் பாதுகாப்பு சுவருடன் ஹெலிபேட் அமைப்பதற்கான ஏற்பாடுகளை ஜனார்த்தன் போயிர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே ஹெலிகாப்டரை நிறுத்துவதற்கான கராஜ் இருக்கும்.

அத்துடன் பைலட் அறை மற்றும் டெக்னீஷியன் அறையும் இருக்கும். வரும் மார்ச் 15ம் தேதி ஹெலிகாப்டர் டெலிவரி செய்யப்படவுள்ளதாக ஜனார்த்தன் போயிர் கூறியுள்ளார். ஜனார்த்தன் போயிருக்கு சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம்.

விவசாயம், பால் பண்ணை ஆகிய தொழில்கள் மட்டுமல்லாது, ரியல் எஸ்டேட் தொழிலையும் ஜனார்த்தன் போயிர் செய்து வருகிறார். பிவாண்டி பகுதியில் பல்வேறு பெரிய நிறுவனங்களின் கிடங்குகள் உள்ளன. எனவே அந்த கிடங்குகளின் உரிமையாளர்களுக்கு பெரிய நிறுவனங்களிடம் இருந்து நல்ல வாடகை கிடைக்கிறது.

இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த பலர் செல்வ செழிப்புடன் காணப்படுகின்றனர். எனவே மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்களும் அப்பகுதியில் மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்த வரிசையில் ஜனார்த்தன் போயிருக்கு சொந்தமாகவும் நிறைய கிடங்குகள் உள்ளன. இதன் மூலமும் அவருக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது.