Just In
- 2 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 9 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 10 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- 11 hrs ago
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
Don't Miss!
- News
தன்னலமற்ற சேவை.. புற்றுநோயாளிகளுக்காக வாழ்நாளையே அர்பணித்தவர் மருத்துவர் சாந்தா
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெள்ளம் சூழ்ந்த நிலையில் மாற்றி யோசித்த மக்கள்! செல்போனை எப்படி சார்ஜ் செய்தனர் தெரியுமா? மாஸ் ஐடியா
வெள்ளம் சூழ்ந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் மக்கள் மாற்றி யோசித்துள்ளனர். அவர்கள் தங்கள் செல்போனை சார்ஜ் செய்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தற்போது கன மழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாய் மாறியுள்ளன. நிலச்சரிவு உள்ளிட்ட சம்பவங்களால் கேரள மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை எடுத்து கொண்டால், நீலகிரி மாவட்டம் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.

பேய் மழையில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலமும் தப்பவில்லை. குறிப்பாக மஹாராஷ்டிரா மாநிலத்தின் கோலாப்பூர் மற்றும் சாங்லி மாவட்டங்கள்தான் கன மழையில் சிக்க தவித்து வருகின்றன. மஹாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பெய்து வரும் மழையால் இதுவரை சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் உடைமைகள் சேதம் அடைந்துள்ளன. கோலாப்பூர் மற்றும் சாங்லி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அத்துடன் அங்கு மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சார வசதி இல்லாத காரணத்தால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதுபோன்ற அவசர கால சூழ்நிலைகளில் செல்போன்களின் மிகவும் அவசியம். ஆனால் மின்சாரம் இல்லாமல் செல்போனை எப்படி சார்ஜ் செய்வது? அதான் பவர் பேங்க் இருக்கிறதே என நீங்கள் யோசிக்கலாம். ஒரு வேளை பவர் பேங்க்கும் டிரை ஆகி விட்டால்? இப்படியான ஒரு இக்கட்டான சூழலில்தான் கோலாப்பூர் மற்றும் சாங்லி மக்கள் தற்போது சிக்கி கொண்டுள்ளனர்.

எனினும் தங்கள் செல்போனை உயிர்ப்புடன் வைத்திருக்க கோலப்பூர் மக்கள் சற்று மாற்றி யோசித்துள்ளனர். வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. மோட்டார்சைக்கிள் பேட்டரி மூலமாக மக்கள் தங்கள் செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்றுவது போல் அந்த புகைப்படம் உள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார்சைக்கிளின் பேட்டரியில் இருந்து ஏராளமான செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்றுவது போல அந்த புகைப்படம் காட்சியளிக்கிறது. இந்த புகைப்படம் கோலாப்பூர் பகுதியில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்சாரம் இல்லாத காரணத்தால் செல்போனை சார்ஜ் செய்ய மக்கள் இந்த வழிமுறையை கையாண்டிருப்பதாக தெரிகிறது.

எனினும் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்த இடம் பிரகாசமாக இருப்பது சற்று சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. ஒருவேளை ஜெனரேட்டர் வசதி அங்கு இருந்ததா? என்பது போன்ற சந்தேகங்கள் எழுகின்றன. இது தொடர்பான உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகததால், இது புரளியாக இருக்குமோ? என்றும் கூறப்படுகிறது.

ஆனால் டெக்னிக்கலாக பார்த்தால் இது நடைமுறையில் சாத்தியமாக கூடிய விஷயமே. ஆனால் அதற்கு கொஞ்சம் உழைக்க வேண்டும். இந்த படம் ஒருவேளை உண்மையாக இருந்தால், இதுபோன்ற மிக மோசமான சூழ்நிலையிலும் புத்தி கூர்மையுடன் யோசித்த மக்களுக்கு நிச்சயம் பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும்.

சமூக வலை தளங்களில் நெட்டிசன்களும் பலரும் கூட இது ஒரு சிறப்பான ஐடியா என்றுதான் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே மஹாராஷ்டிரா மாநிலத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.