இனி மானியம் கிடையாது... பேக் அடித்த மாநில அரசு... "போட்ட பிளான் எல்லாம் போச்சே" புலம்பும் மக்கள்!..

குறிப்பிட்ட ஓர் மாநில அரசு மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக வழங்கி வந்த மானிய திட்டத்தை ரத்து செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட இருக்கின்றது என்பதுகுறித்த விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இனி மானியம் கிடையாது... பேக் அடித்த மாநில அரசு...

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதாகக் கூறி மத்திய மற்றும் மாநில அரசுகள், பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டிற்கு முடிவு கட்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், இவற்றை எடுத்த உடன் அடியோடு ஒழித்துவிட முடியாது என்பதனால், படிப்படியாக அவற்றை பயன்பாட்டில் இருந்து அகற்றும் முயற்சியில் அரசுகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

இனி மானியம் கிடையாது... பேக் அடித்த மாநில அரசு...

அதேசமயம், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக பிற மாசை குறைவாக ஏற்படுத்தும் மற்றும் மாசையே ஏற்படுத்தாத வண்ணம் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளையும் அரசுகள் மிக தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், பல்வேறு சிறப்பு சலுகைகளுடன் அரசுகள் ஊக்குவித்து வரும் வாகனமாக மின்சார வாகனங்கள் இருக்கின்றன.

இனி மானியம் கிடையாது... பேக் அடித்த மாநில அரசு...

இவை சுற்றுச் சூழலுக்கு துளியளவும் பாதிப்பை ஏற்படுத்தாது. அதாவது, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களைப் போல் கார்பன்டை-ஆக்ஸைடு உமிழ்வை டன் கணக்கில் வெளியிடாது. இதனால்தான் மின்சார வாகனங்கள் சுற்றுச்சூழலின் மிக சிறந்த நண்பனாக பார்க்கப்படுகின்றது. இந்த காரணத்திற்காகதான் இந்த வாகனங்களின் பயன்பாட்டை உலக நாடுகள் அனைத்தும் சலுகைகளை வாரி வழங்கி ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன.

இனி மானியம் கிடையாது... பேக் அடித்த மாநில அரசு...

இந்த மாதிரியான ஓர் செயலையே இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சில மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, மானிய திட்டம் பலரை ஈர்க்கும் வகையில் உள்ளது. இது மிக உயரிய விலையில் காணப்படும் மின் வாகனங்களின் விலையை பல மடங்கு குறைக்க உதவுகின்றது. இதன் விளைவாகவே பலரால் நுகரக் கூடிய வாகனமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மாறியிருக்கின்றன. இதுதவிர வரி சலுகை போன்ற சிறப்பு சலுகைகளும் அரசுகளால் வழங்கப்பட்டு வருகின்றன.

இனி மானியம் கிடையாது... பேக் அடித்த மாநில அரசு...

இருப்பினும் பலரை அரசுகளின் மானிய திட்டமே கவர்ந்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான ஓர் திட்டத்தையே மஹாராஷ்டிரா மாநில அரசு அதன் சார்பில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியாக செயல்படுத்தி வந்தது. இந்த திட்டத்தையே அம்மாநில அரசு தற்போது கை விட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநில அரசின் இந்த திடீர் அறிவிப்பு மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

இனி மானியம் கிடையாது... பேக் அடித்த மாநில அரசு...

பலர் மின்சார வாகனங்களை வரும் பண்டிகைக் காலங்களில் வாங்க திட்டமிட்டிருந்த நிலையில் மஹாராஷ்டிரா அரசாங்கம் மின் வாகனங்களுக்கு வழங்கி வந்த மானிய திட்டம் கை விடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் விளைவாக சிலர் மின் வாகனம் வாங்கும் திட்டத்தைக் கை விடும் சூழல் உருவாகியுள்ளது.

இனி மானியம் கிடையாது... பேக் அடித்த மாநில அரசு...

மஹாராஷ்டிரா மாநில அரசு மின்சார வாகனத்தின் பேட்டரி கிலோவாட் கெபாசிட்டியைப் பொருத்தே அதன் மானியத்தை எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு வழங்கி வந்தது. மின் வாகனங்களுக்கான மானிய திட்டம் முதல் முறையாக அம்மாநிலத்தில் 23 ஜூலை 2021லேயே அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் 31 டிசம்பர் 2021 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் இந்த திட்டம் 31 மார்ச் 2022 வரை நீட்டிக்கப்பட்டது. மானியம் கணிசமாக குறைக்கப்பட்டே மீண்டும் அது நீட்டிக்கப்பட்டது.

இனி மானியம் கிடையாது... பேக் அடித்த மாநில அரசு...

ஒரு kWh-க்கு ரூ. 5 ஆயிரம் வரை மானியம் வழங்கப்பட்டது. அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் வரை மானியம் வழங்கப்பட்டது. முன்னதாக 15 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இந்த மானிய திட்டத்திற்கு மஹாராஷ்டிரா கவர்மென்ட் முற்று புள்ளி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இனி மானியம் கிடையாது... பேக் அடித்த மாநில அரசு...

ஏற்கனவே மத்திய அரசு அதன் சார்பில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மானியத்தை வழங்கி வரும்நிலையில், தனியாக சில மாநில அரசுகளும் இதுபோன்று மானியத்தை வழங்கும் செயலை மின் வாகனங்களுக்காக மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், மஹாராஷ்டிரா வழங்கி வந்த மானிய திட்டத்தின்கீழ் பல ஆயிரக் கணக்கான மின்சார வாகனங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன.

இனி மானியம் கிடையாது... பேக் அடித்த மாநில அரசு...

கடந்த மார்ச் மாத நிலவரப்படி 80,606 யூனிட் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக வேகமாக மின்சார வாகனங்கள் அம்மாநிலத்தில் உயர்ந்திருப்பதை இந்த எண்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன. இந்த வேகத்திற்கு அரசின் தற்போதைய நடவடிக்கை முற்று புள்ளி வைக்கலாம் என யூகிக்க முடிகின்றது. முன்னதாக கோவா அரசாங்கம் இந்த மாதிரியான ஓர் நடவடிக்கையை கையில் எடுத்திருந்தது.

இனி மானியம் கிடையாது... பேக் அடித்த மாநில அரசு...

தற்போது மின் வாகனங்களுக்காக வழங்கப்பட்டு வந்த மானியத்தை நிறுத்தியிருப்பதால் மஹாராஷ்டிரா அரசும் கோவாவுடன் இணைந்திருக்கின்றது. இதைத்தொடர்ந்து, இதேமாதிரியான வேறு சில மாநில அரசுகளும் மானிய திட்டத்தை ரத்து செய்யலாம் என்கிற எண்ணமே பிற மாநில வாசிகள் மனதில் எழும்பியிருக்கின்றது. தமிழகத்தில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக பெரியளவில் மானியம் போன்ற திட்டங்கள் ஏதுவும் நடைமுறைத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Maharashtra government withdraws ev subsidy policy here is full details
Story first published: Friday, August 12, 2022, 13:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X