இந்தியாவிற்கே முன்னுதாரணம்... அதிரடியான முடிவை எடுத்த மஹாராஷ்டிரா கவர்னர்... என்னனு தெரியுமா?

இந்தியாவிற்கே முன்னுதாரணமாக, அதிரடி முடிவை ஒன்றை மஹாராஷ்டிரா கவர்னர் எடுத்துள்ளார்.

இந்தியாவிற்கே முன்னுதாரணம்... அதிரடியான முடிவை எடுத்த மஹாராஷ்டிரா கவர்னர்... என்னனு தெரியுமா?

உலகின் பல்வேறு நாடுகளை கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது மிகவும் கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் உலக பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ளது. கொரோனாவின் கோர பிடியில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்தியாவில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்தியாவிற்கே முன்னுதாரணம்... அதிரடியான முடிவை எடுத்த மஹாராஷ்டிரா கவர்னர்... என்னனு தெரியுமா?

கடந்த மார்ச் 24ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது வரை நீடித்து கொண்டுள்ளது. இதன் காரணமாக நம்மில் பெரும்பாலானோரின் எதிர்கால திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் ஊரடங்கு காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தற்போது இழுத்து மூடப்பட்டுள்ளன. ஒரு சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் வேலையை பறித்துள்ளன.

MOST READ: பருவமழை வரப்போகுது... உங்க வண்டிக்கு எக்ஸ்ட்ரா கவனிப்பு ரொம்ப முக்கியம்... என்ன பண்ணணும்னு தெரியுமா?

இந்தியாவிற்கே முன்னுதாரணம்... அதிரடியான முடிவை எடுத்த மஹாராஷ்டிரா கவர்னர்... என்னனு தெரியுமா?

அதே சமயம் சில நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளன. தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுமல்லாது, மத்திய, மாநில அரசுகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் ஊரடங்கு காரணமாக மத்திய, மாநில அரசுகள் பெருமளவில் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன.

இந்தியாவிற்கே முன்னுதாரணம்... அதிரடியான முடிவை எடுத்த மஹாராஷ்டிரா கவர்னர்... என்னனு தெரியுமா?

இதனால் மத்திய, மாநில அரசுகள் தரப்பில் தற்போது பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புதிய கார் வாங்கும் திட்டத்தை காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளார். ரூ.10 கோடி மதிப்புள்ள காரை வாங்க அவர் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்தியாவிற்கே முன்னுதாரணம்... அதிரடியான முடிவை எடுத்த மஹாராஷ்டிரா கவர்னர்... என்னனு தெரியுமா?

ஆனால் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க உதவும் வகையில், அவர் அந்த திட்டத்தை காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளார். குடியரசு தலைவரின் இந்த முடிவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், மஹாராஷ்டிர மாநில ஆளுனரும் தற்போது அதே பாணியிலான ஒரு முடிவை எடுத்துள்ளார்.

இந்தியாவிற்கே முன்னுதாரணம்... அதிரடியான முடிவை எடுத்த மஹாராஷ்டிரா கவர்னர்... என்னனு தெரியுமா?

ராஜ்பவனின் செலவுகளை குறைப்பதற்காக, மஹாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி (Bhagat Singh Koshyari) பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். இதன்படி ராஜ்பவனில் புதிய கட்டுமான பணிகள் எதையும் மேற்கொள்ள கூடாது. அத்துடன் பழுது பார்க்கும் பணிகளையும் செய்ய கூடாது. அதேபோன்று ராஜ்பவனில் புதிய பணியமர்த்தல்களையும் மேற்கொள்ள கூடாது.

இந்தியாவிற்கே முன்னுதாரணம்... அதிரடியான முடிவை எடுத்த மஹாராஷ்டிரா கவர்னர்... என்னனு தெரியுமா?

மேலும் விவிஐபிக்களுக்கு பரிசுகள்/நினைவு பொருட்களை வழங்குவதும் தற்போதைக்கு நிறுத்தப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறைகள் அமலில் இருக்கும். இதுபோல் இன்னும் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இதன்படி கவர்னர் தனது அதிகாரப்பூர்வ வாகனத்தை மேம்படுத்தப்போவதில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவிற்கே முன்னுதாரணம்... அதிரடியான முடிவை எடுத்த மஹாராஷ்டிரா கவர்னர்... என்னனு தெரியுமா?

இதற்கு கூடுதல் செலவு ஆகும் என்பதால் கவர்னர் இந்த முடிவை எடுத்துள்ளார். எனினும் தற்போது இருக்கும் காரை கவர்னர் எப்போது அப்கிரேட் செய்வார்? என்பது உறுதியாக தெரியவில்லை. தற்போதைய நிலையில், மெர்சிடிஸ்-பென்ஸ் இ-க்ளாஸ் இ350 சிடிஐ (Mercedes-Benz E-Class E350 CDI) கார்தான், மஹாராஷ்ர கவர்னரின் அதிகாரப்பூர்வ வாகனமாக இருந்து வருகிறது.

இந்தியாவிற்கே முன்னுதாரணம்... அதிரடியான முடிவை எடுத்த மஹாராஷ்டிரா கவர்னர்... என்னனு தெரியுமா?

பதிவு ஆவணங்களை வைத்து பார்க்கையில், இந்த கார் கடந்த 2014ம் ஆண்டு வாங்கப்பட்டுள்ளது. எனினும் இது அதிகாரப்பூர்வமான இ-க்ளாஸ் கார்டு கிடையாது. அதிகாரப்பூர்வமான இ-க்ளாஸ் கார்டு மாடல், தொழிற்சாலையில் இருந்து வெளிவரும்போதே, கவச பாதுகாப்பு வசதிகளுடன் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கே முன்னுதாரணம்... அதிரடியான முடிவை எடுத்த மஹாராஷ்டிரா கவர்னர்... என்னனு தெரியுமா?

ஆனால் மஹாராஷ்டிரா கவர்னரின் காரில், புல்லட் புரூஃப் கவச வசதிகள் பின்னாளில் இன்ஸ்டால் செய்து கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய மஹாராஷ்டிரா கவர்னரும் இதே காரைதான் பயன்படுத்தினார். அவருக்கு பின்பு கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த பதவிக்கு வந்த பகத் சிங் கோஷ்யாரியும் தற்போது அதே காரைதான் பயன்படுத்தி வருகிறார்.

இந்தியாவிற்கே முன்னுதாரணம்... அதிரடியான முடிவை எடுத்த மஹாராஷ்டிரா கவர்னர்... என்னனு தெரியுமா?

மறு உத்தரவு வரும் வரையிலும் அவர் அதே காரைதான் பயன்படுத்தவுள்ளார். ஆனால் நிலைமை சீரானதற்கு பின், மஹாராஷ்டிரா கவர்னர் எந்த காரை வாங்கவுள்ளார்? என்பது தெரியவில்லை. ஆனால் விதிகளின்படி, மஹாராஷ்டிரா முதல்வர், கவர்னர், துணை முதல்வர், தலைமை நீதிபதி உள்ளிட்டோர், தாங்கள் வாங்க விரும்பும் காருக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்து கொள்ளலாம்.

இந்தியாவிற்கே முன்னுதாரணம்... அதிரடியான முடிவை எடுத்த மஹாராஷ்டிரா கவர்னர்... என்னனு தெரியுமா?

அவர்களின் வாகனங்களுக்கு பண வரம்பு எதுவும் இல்லை. மெர்சிடிஸ்-பென்ஸ் இ-க்ளாஸ் கார் இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு லக்ஸரி வாகனம் ஆகும். இந்த காரின் விசாலமான இடவசதி கிடைக்கிறது. மேலும் ஏராளமான வசதிகளும் உள்ளன. எனவே அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், மற்றும் பிரபல மனிதர்கள் மத்தியில் இந்த கார் மிகவும் பிரபலமாக திகழ்கிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Maharashtra: Governor Bhagat Singh Koshyari Delays Buying New Car In COVID-19 Cost-Cutting Measures. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X