ரயில் வந்த நேரத்தில் தண்டவாளத்தில் சிக்கி கொண்ட கார்... நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ...

ரயில் வந்து கொண்டிருந்த நேரத்தில், கார் ஒன்று தண்டவாளத்தில் சிக்கி கொண்டது. நெஞ்சை அதிர்ச்சியில் உறைய வைக்கும் இந்த திக்... திக்... வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ரயில் வந்த நேரத்தில் தண்டவாளத்தில் சிக்கி கொண்ட கார்... நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ...

உலகின் நான்காவது மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்கை கொண்டிருக்கும் நாடு இந்தியா (அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன). இந்திய ரயில்வே துறையில் சுமார் 13 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த சூழலில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சிறிய நகரம் ஒன்றில், மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ கார் ஒன்று எதிர்பாராத விதமாக ரயில்வே தண்டவாளத்தில் சிக்கி கொண்டது. சக்தி வாய்ந்த காராக கருதப்பட்டாலும், தண்டவாளத்தில் இருந்து வெளியே வர முடியாமல் அந்த கார் திணறியது.

ரயில் வந்த நேரத்தில் தண்டவாளத்தில் சிக்கி கொண்ட கார்... நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ...

அப்போது அவ்வழியாக ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காரின் டிரைவர் தன்னால் முடிந்த வரைக்கும் முயற்சி செய்து பார்த்தார். இருந்தபோதும் தண்டவாளத்தில் இருந்து காரை வெளியே எடுக்க முடியவில்லை.

எனவே அங்கிருந்த மக்கள் உடனடியாக உதவி செய்ய ஓடி வந்தனர். தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி அவர்கள் காரை தள்ளி பார்த்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக அப்போதும் கார் வெளியே வரவில்லை. அந்த நேரத்தில் ரயில் நெருங்கி வந்திருந்தது.

இதனால் பதற்றம் அடைந்த மக்கள், ரயிலை நிறுத்தும்படி அதன் டிரைவருக்கு வேகமாக சைகை காட்டினர். அதிர்ஷ்டவசமாக இதனை புரிந்து கொண்ட ரயிலின் டிரைவர் ஒரு வழியாக ரயிலை நிறுத்தி விட்டார். வேகமாக பயணித்து கொண்டிருக்கும் ஒரு ரயிலை அப்படியே நிறுத்துவது அபாயகரமானது.

ரயில் வந்த நேரத்தில் தண்டவாளத்தில் சிக்கி கொண்ட கார்... நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ...

அப்படி நிறுத்தினால் ரயில் தடம் புரண்டு விடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இதனால் ரயிலின் உள்ளே இருக்கும் பயணிகளுக்கும் ஆபத்து ஏற்படும். எனவே தண்டவாளத்தில் கார் சிக்கி கொண்டிருப்பதை, அந்த ரயிலின் டிரைவர் தொலைவில் இருந்தே பார்த்திருக்க கூடும் என கருதப்படுகிறது.

இதன்மூலம் அவர் படிப்படியாக வேகத்தை குறைத்திருக்கலாம். அல்லது சிறிய நகரம் என்பதால், அவர் ரயிலை மிகவும் மெதுவாகவே இயக்கி வந்திருக்கலாம். எது எப்படியோ அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு விட்டது.

ரயில் நிறுத்தப்பட்ட பின்புதான் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதன்பின் கூடுதலாக சிலர் வந்து காரை மீட்க உதவி செய்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பே கார் மீட்கப்பட்டது. அதுவரை ரயில் மிகவும் பொறுமையாக அங்கேயே காத்து கொண்டிருந்தது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சூழலில், அங்கிருந்த சிலர் இந்த சம்பவத்தை செல்போனில் பதிவு செய்தனர். சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

தண்டவாளத்தில் இருந்து கார் மீண்டு வருவதை வீடியோவின் 2வது பகுதியில் பார்க்க முடிகிறது. நிச்சயமாக இதன்பின்புதான் காரின் டிரைவர் நிம்மதி அடைந்திருப்பார். குறுக்கு வழியில் விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காகவே அவர் இந்த பாதையை தேர்வு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனால் இந்த சம்பவத்தின் மூலமாக அவர் பாடம் கற்று கொண்டிருப்பார். இந்திய ரயில்வே துறையானது, உள்கட்டமைப்பு தேவைகளை வேகமாக பூர்த்தி செய்து வருகிறது. ஆனால் இதுபோன்ற 'ஷார்ட் கட்ஸ்' மீதுதான் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியாவின் அதிவேக ரயிலாக கருதப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் (டிரெயின்-18) சேவையை பிரதமர் மோடி இன்று (பிப்.15) தொடங்கி வைத்தார். சென்னை ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட டிரெயின்-18 ரயில், டெல்லி-வாரணாசி இடையே இயக்கப்படுகிறது.

ரயில் வந்த நேரத்தில் தண்டவாளத்தில் சிக்கி கொண்ட கார்... நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ...

இந்த ரயில் சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து சாதனை படைத்தது. இப்படிப்பட்ட வேகத்தில் வரும் ஒரு ரயில், தண்டவாளத்தில் சிக்கி கொண்ட கார் உள்ளிட்ட சிறிய இலகுரக வாகனங்கள் மீது மோதினால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும்.

எனவேதான் இத்தகைய 'ஷார்ட் கட்ஸ்' மீது இந்திய ரயில்வே துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வாகன ஓட்டிகளும் மற்ற போக்குவரத்து முறைகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். ஒரு சில நிமிடங்களை மிச்சம் பிடிப்பதற்காக, குறுக்கு வழியை தேர்வு செய்தால் ஆபத்துதான் மிஞ்சும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mahindra Bolero Car Gets Stuck On Railway Track-Train Wait Patiently: Video Goes Viral. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X