ரோந்து பணிக்காக மஹிந்திரா ஸ்கார்பியோவை வாங்கியுள்ள வெளிநாட்டு போலீஸார்!! தரமான வாகனமென புகழாரம்!

நைரோபி மாநகர போலீஸ் சேவையில் இந்தியாவில் பிரபலமான மஹிந்திரா ஸ்கார்பியோ வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ரோந்து பணிக்காக மஹிந்திரா ஸ்கார்பியோவை வாங்கியுள்ள வெளிநாட்டு போலீஸார்!! தரமான வாகனமென புகழாரம்!

ஆட்டோமொபைல் துறையில் இந்திய தயாரிப்பு வாகனங்களுக்கு என்றே தனி மதிப்பு உள்ளதை மறுத்துவிட முடியாது. டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் இந்திய தயாரிப்புகளுக்கு அடையாளங்களாக திகழ்கின்றன. ஏனெனில் இவற்றின் பயணிகள் கார்கள் உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனைகளில் முழு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளன.

ரோந்து பணிக்காக மஹிந்திரா ஸ்கார்பியோவை வாங்கியுள்ள வெளிநாட்டு போலீஸார்!! தரமான வாகனமென புகழாரம்!

இவற்றின் தரத்தினை பரைச்சாற்றும் விதத்தில் இதற்குமுன் பல நிகழ்வுகளை பார்த்துள்ளோம். சாலை விபத்துகள் பலவற்றின்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் பலரது உயிர்களை காப்பாற்றியுள்ளதை பார்த்திருக்கிறோம். இந்த வகையிலான நிகழ்வுதான் இங்கு அல்ல, கென்யா நாட்டில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வினை மஹிந்திரா க்ரூப்பின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரோந்து பணிக்காக மஹிந்திரா ஸ்கார்பியோவை வாங்கியுள்ள வெளிநாட்டு போலீஸார்!! தரமான வாகனமென புகழாரம்!

இந்த பதிவில், நைரோபி நகர போலீஸாருக்கு வழங்கப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ சிங்கிள் கேப் பிக்அப் ட்ரக் வாகனங்களை காணலாம். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவின் தலைநகரான நைரோபியின் போக்குவரத்து போலீஸாருக்கு மொத்தம் 100 யூனிட் மஹிந்திரா ஸ்கார்பியோ சிங்கிள் கேப் பிக்அப் ட்ரக்குகள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளதாக ஆனந்த் மஹிந்திராவின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரோந்து பணிக்காக மஹிந்திரா ஸ்கார்பியோவை வாங்கியுள்ள வெளிநாட்டு போலீஸார்!! தரமான வாகனமென புகழாரம்!

மஹிந்திரா ஸ்கார்பியோ சிங்கிள் கேப் பிக்அப் ட்ரக் ஆனது மிகுந்த ஆற்றல்மிக்க வாகனமாகவும், அதேநேரம் ஹேண்ட்லிங் செய்வதற்கு மிகவும் எளிமையான வாகனமாகவும் விளங்குகிறது. இதனால் இந்த பிக்அப் ட்ரக் வாகனத்தை எந்தவொரு சாலையிலும் இயக்குவது சிரமம் இல்லாதததாக இருக்கும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவிக்கிறது.

ரோந்து பணிக்காக மஹிந்திரா ஸ்கார்பியோவை வாங்கியுள்ள வெளிநாட்டு போலீஸார்!! தரமான வாகனமென புகழாரம்!

ஆனந்த் மஹிந்திராவின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள படங்களில் நைரோபி போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்கார்பியோ சிங்கிள் கேப் பிக்அப் ட்ரக்குகள் அந்த மாநகர போலீஸார் துறைக்கு உண்டான பெயிண்ட்டில் இருப்பதை காண முடிகிறது. போலீஸாரின் பயன்பாட்டிற்காக இந்த மஹிந்திரா பிக்அப் ட்ரக்குகள் அடர் நீலம் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன.

ரோந்து பணிக்காக மஹிந்திரா ஸ்கார்பியோவை வாங்கியுள்ள வெளிநாட்டு போலீஸார்!! தரமான வாகனமென புகழாரம்!

அதேநேரம் இந்த வாகனங்களின் பக்கவாட்டு பகுதிகளில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களையும் காண முடிகிறது. ஓட்டுனரின் கேபின் பளிச்சிடும் வகையில் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுனர் கேபினுக்கு பின்னால், பயணிகளை அழைத்து செல்வதற்காக, நீக்கக்கூடிய மென்மையான மேற்கூரை வழங்கப்பட்டுள்ளது.

ரோந்து பணிக்காக மஹிந்திரா ஸ்கார்பியோவை வாங்கியுள்ள வெளிநாட்டு போலீஸார்!! தரமான வாகனமென புகழாரம்!

இந்த ஸ்கார்பியோ சிங்கிள் கேப் பிக்அப் ட்ரக் வாகனங்களை நைரோபி நகர போலீஸாருக்கு குத்தகைக்கு மட்டுமே விடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் மூலமாக கென்யாவில் அரசாங்க சேவைகளுக்காக வாகனங்களை குத்தகைக்கு விடுவதை முதன்முதலாக மஹிந்திரா அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து நைரோபி நகர முதன்மை போக்குவரத்து அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், "புதிய வாகனங்களை பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

ரோந்து பணிக்காக மஹிந்திரா ஸ்கார்பியோவை வாங்கியுள்ள வெளிநாட்டு போலீஸார்!! தரமான வாகனமென புகழாரம்!

மஹிந்திரா ஸ்கார்பியோ ஒரு உறுதியான வாகனம். இந்த வாகனங்களில் நாங்கள் சேவை செய்ய எதிர்நோக்குகிறோம்" என்றார். இவர் கூறுவதை போல் ஸ்கார்பியோ இந்திய சந்தையிலும் மிக ஆற்றல்மிக்க எஸ்யூவி வாகனங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இதற்கு, நம் நாட்டு சந்தையில் இந்த மாடலின் வயது தான் சாட்சியாகும். ஏனெனில் இந்தியாவில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்கார்பியோ வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ரோந்து பணிக்காக மஹிந்திரா ஸ்கார்பியோவை வாங்கியுள்ள வெளிநாட்டு போலீஸார்!! தரமான வாகனமென புகழாரம்!

இத்தகைய ஸ்கார்பியோ மாடல் எஸ்யூவி மற்றும் பிக்அப் ட்ரக் என இரு விதமான வடிவங்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்தியாவில் ஸ்கார்பியோ பிக்அப் ட்ரக் வாகனங்கள் அதிகளவில் போலீஸாரின் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருவதை பார்த்திருப்பீர்கள். மஹிந்திரா ஸ்கார்பியோ சிங்கிள் கேப் பிக்அப் ட்ரக்கில் 2.2 லிட்டர் டர்போ-டீசல் எம்ஹாவ்க் என்ஜின் பொருத்தப்படுகிறது.

ரோந்து பணிக்காக மஹிந்திரா ஸ்கார்பியோவை வாங்கியுள்ள வெளிநாட்டு போலீஸார்!! தரமான வாகனமென புகழாரம்!

அதிகப்பட்சமாக 3,750 ஆர்பிஎம்-இல் 140 பிஎஸ் மற்றும் 1,500- 2,800 ஆர்பிஎம்-இல் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ-டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. இந்தியாவில் 4x2 மற்றும் 4x4 கட்டமைப்புகளில் இந்த மஹிந்திரா ஸ்கார்பியோ பிக்அப் ட்ரக் வாகனம் விற்கப்படுகிறது.

ரோந்து பணிக்காக மஹிந்திரா ஸ்கார்பியோவை வாங்கியுள்ள வெளிநாட்டு போலீஸார்!! தரமான வாகனமென புகழாரம்!

இந்திய சந்தையில் இம்பெரியோ, பொலிரோ கேம்பர் போன்ற பக்கா பிக்அப் ட்ரக் வாகனங்களை மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.80 லட்சத்தில் இருந்து ரூ.7.76 லட்சம் வரையில் உள்ளன. ஸ்டாண்டர்ட் ஸ்கார்பியோ எஸ்யூவி மாடலின் விலை ரூ.12.81 லட்சங்களில் இருந்து ரூ.17.66 லட்சங்கள் வரையில் உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mahindra scorpio joint fleet of nairobi police anand mahindra shares images details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X