அடுத்த படத்தில் ஜாவா பைக்கை ஓட்ட போகிறார்... போட்டோ மூலம் கிடைத்த தகவலால் ரசிகர்கள் உற்சாகம்...

பிரபல நடிகர் தனது அடுத்த திரைப்படத்தில் ஜாவா பைக்கை பயன்படுத்தவுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அடுத்த படத்தில் ஜாவா பைக்கை ஓட்ட போகிறார்... போட்டோ மூலம் கிடைத்த தகவலால் ரசிகர்கள் உற்சாகம்...

தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ் சுகுமாறன், தனது அடுத்த திரைப்படத்தில் மிகவும் பிரபலமான ஜாவா 42 (Jawa Forty Two) மோட்டார்சைக்கிளை பயன்படுத்தவுள்ளார். அவரது அடுத்த திரைப்படத்திற்கு 'கோல்டு கேஸ்' (Cold Case) என பெயரிடப்பட்டுள்ளது.

அடுத்த படத்தில் ஜாவா பைக்கை ஓட்ட போகிறார்... போட்டோ மூலம் கிடைத்த தகவலால் ரசிகர்கள் உற்சாகம்...

ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் வழங்கப்பட்டதையடுத்து, கோல்டு கேஸ் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மாதம் தொடங்கின. இந்த சூழலில், கோல்டு கேஸ் திரைப்படத்தின் புதிய புகைப்படம் ஒன்றை, பிருத்விராஜ் சுகுமாறன் சமூக வலை தளங்களில் பகிர்ந்துள்ளார். இதில், ஜாவா 42 பைக்கின் மீது அவர் அமர்ந்திருப்பதை காண முடிகிறது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

அடுத்த படத்தில் ஜாவா பைக்கை ஓட்ட போகிறார்... போட்டோ மூலம் கிடைத்த தகவலால் ரசிகர்கள் உற்சாகம்...

இந்தியாவின் மஹிந்திரா நிறுவனத்திற்கு சொந்தமான கிளாசிக் லெஜண்ட்ஸ், ஜாவா மோட்டார்சைக்கிள்களை மிக நீண்ட இடைவெளிக்கு பின் இந்திய சந்தைக்கு மீண்டும் கொண்டு வந்தது. அப்படி ஜாவா மீண்டும் இந்தியாவிற்கு வந்தபோது அறிமுகம் செய்யப்பட்ட முதல் இரண்டு பைக்குகளில், ஜாவா 42 மோட்டார்சைக்கிளும் ஒன்றாகும்.

அடுத்த படத்தில் ஜாவா பைக்கை ஓட்ட போகிறார்... போட்டோ மூலம் கிடைத்த தகவலால் ரசிகர்கள் உற்சாகம்...

ஜாவா நிறுவனத்தின் லைன்-அப்பில் ஜாவா 42 எண்ட்ரி-லெவல் மாடல் ஆகும். இந்திய சந்தையில் 1.65 லட்ச ரூபாய் முதல் 1.74 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் ஜாவா 42 மோட்டார்சைக்கிள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது டெல்லி, எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஜாவா 42 பைக்கில், 293 சிசி, சிங்கிள்-சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், லிக்யூட்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த படத்தில் ஜாவா பைக்கை ஓட்ட போகிறார்... போட்டோ மூலம் கிடைத்த தகவலால் ரசிகர்கள் உற்சாகம்...

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 26 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. இது பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. ஜாவா 42 மோட்டார்சைக்கிளின் எடை 172 கிலோ ஆகும்.

அடுத்த படத்தில் ஜாவா பைக்கை ஓட்ட போகிறார்... போட்டோ மூலம் கிடைத்த தகவலால் ரசிகர்கள் உற்சாகம்...

இந்த பைக்கின் இருக்கை உயரம் 765 மிமீ. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் உடன் ஜாவா 42 போட்டியிட்டு வருகிறது. இதுதவிர ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மற்றும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 ஆகிய மோட்டார்சைக்கிள்களுக்கும் ஜாவா 42 மாற்றாக இருக்கும். மீட்டியோர் 350 பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

அடுத்த படத்தில் ஜாவா பைக்கை ஓட்ட போகிறார்... போட்டோ மூலம் கிடைத்த தகவலால் ரசிகர்கள் உற்சாகம்...

அதேபோல் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளும் சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தைக்கு புதிதாக வந்துள்ள இந்த 2 மோட்டார்சைக்கிள்களும் சிறப்பான முன்பதிவுகளை பெற்று வருகின்றன. அதே சமயம் ஜாவா 42 மோட்டார்சைக்கிளும் விற்பனைக்கு வந்தபோது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்த படத்தில் ஜாவா பைக்கை ஓட்ட போகிறார்... போட்டோ மூலம் கிடைத்த தகவலால் ரசிகர்கள் உற்சாகம்...

ஆனால் பைக்குகளை டெலிவரி செய்வதில் பெரும் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் ஆவலுடன் காத்திருந்த வாடிக்கையாளர்கள் பலர், முன்பதிவுகளை ரத்து செய்து விட்டு ராயல் என்பீல்டு உள்ளிட்ட மற்ற நிறுவனங்களின் பைக்குகளுக்கு மாறியது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் பிருத்விராஜ் தனது அடுத்த படத்தில் ஜாவா பைக்கை பயன்படுத்த இருப்பது ஜாவா ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Malayalam Cinema Actor Prithviraj To Ride The Jawa Forty Two In His Next Movie - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X