எல்லாம் காதல் படுத்தும்பாடு... 25 ஆயிரம் கிலோ மீட்டர் காரில் பயணிக்கும் இளைஞர்... எதற்காக தெரியுமா?

இளைஞர் ஒருவர் காரில் 25 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எல்லாம் காதல் படுத்தும்பாடு... 25 ஆயிரம் கிலோ மீட்டர் காரில் பயணிக்கும் இளைஞர்... எதற்காக தெரியுமா?

ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு பயணிப்பது என்பது இன்றைய கால கட்டத்தில் மிகவும் எளிதான விஷயமாக மாறி விட்டது. காலை உணவை ஒரு நாட்டிலும், மதிய உணவை மற்றொரு நாட்டிலும், இரவு உணவை வேறொரு நாட்டிலும் சாப்பிடுபவர்களும் கூட இருக்கத்தான் செய்கின்றனர். அதிவேகத்தில் பறக்கும் விமானங்களுக்குதான் இதற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

எல்லாம் காதல் படுத்தும்பாடு... 25 ஆயிரம் கிலோ மீட்டர் காரில் பயணிக்கும் இளைஞர்... எதற்காக தெரியுமா?

ஆனால் மலேசியாவை சேர்ந்த என்கு முகமது ஹத்ரி என்கு ஹசன் கொஞ்சம் வித்தியாசமானவர். தற்போது இவர் மலேசியாவில் இருந்து ஜெர்மனிக்கு காரில் பயணம் செய்து வருகிறார். 25,000 கிலோ மீட்டர்களுக்கும் மேற்பட்ட பயணம் இது. நீண்ட தொலைவு என்பதால், ஹத்ரி விமானத்தை தேர்வு செய்திருக்கலாம். ஆனால் கார்தான் அவரின் தேர்வாக அமைந்துள்ளது.

எல்லாம் காதல் படுத்தும்பாடு... 25 ஆயிரம் கிலோ மீட்டர் காரில் பயணிக்கும் இளைஞர்... எதற்காக தெரியுமா?

ஹத்ரி கார் ஆர்வலர். கார் பயணங்கள் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். எனவேதான் அவர் காரை தேர்வு செய்துள்ளார். ஹத்ரி தனது கார் பயணத்தை கடந்த திங்கள் கிழமை தொடங்கினார். இந்த சூழலில் இன்று காலை (ஆகஸ்ட் 21) ஹத்ரி தாய்லாந்து எல்லைக்கு வந்தார். தொடர்ந்து சீனா, மங்கோலியா, லாத்வியா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை கடந்து அவர் ஜெர்மனிக்கு செல்கிறார்.

எல்லாம் காதல் படுத்தும்பாடு... 25 ஆயிரம் கிலோ மீட்டர் காரில் பயணிக்கும் இளைஞர்... எதற்காக தெரியுமா?

இந்த பயணத்தில் மொத்தம் 25 நாடுகளை அவர் கடந்து செல்லவுள்ளார். இதற்கு 3 மாதங்களுக்கு மேல் ஆகும். சரியாக சொல்வதென்றால், அவரது பயணம் 98 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஹத்ரியின் இந்த நெடும் பயணத்திற்கு அவரது தந்தை மிகவும் உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காதல் படுத்தும்பாடு... 25 ஆயிரம் கிலோ மீட்டர் காரில் பயணிக்கும் இளைஞர்... எதற்காக தெரியுமா?

ஹத்ரி பயணம் மேற்கொள்ள வேண்டிய வழித்தடங்களை திட்டமிட்டது அவரது தந்தைதான். காருக்கு எந்த அளவிற்கு பெட்ரோல் தேவைப்படும்? என்பதை கணக்கிட்டதும் அவர்தான். இதுபோல் பல வழிகளில் அவர் தன் மகனுக்கு உதவி செய்துள்ளார். பொதுவாக நீண்ட நேரம் பயணங்களை மேற்கொள்வது என்பது பலருக்கும் பிடித்தமான விஷயமாகதான் உள்ளது.

எல்லாம் காதல் படுத்தும்பாடு... 25 ஆயிரம் கிலோ மீட்டர் காரில் பயணிக்கும் இளைஞர்... எதற்காக தெரியுமா?

குறிப்பாக கார் மற்றும் மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள் அவ்வப்போது ஹாயாக டூர் சென்று விட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் ஹத்ரி தற்போது மேற்கொண்டுள்ள பயணத்தின் பின்னணியில் சுவாரஸ்யமான காரணம் ஒன்று அடங்கியுள்ளது. ஆம், அவர் தனது காதலியை கரம் பிடிப்பதற்காகதான் காரில் ஜெர்மனிக்கு சென்று கொண்டுள்ளார்.

எல்லாம் காதல் படுத்தும்பாடு... 25 ஆயிரம் கிலோ மீட்டர் காரில் பயணிக்கும் இளைஞர்... எதற்காக தெரியுமா?

வருங்கால மனைவிக்காக இதை செய்து காட்ட வேண்டும் என ஹத்ரி விரும்புகிறார். அவர் காரை தேர்ந்து எடுத்ததற்கு காரணம் இதுவே. ஹத்ரி தனது வருங்கால மனைவியை கடந்த 2007ம் ஆண்டு ஜெர்மனியில் சந்தித்தார். விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். அவர்களுடைய திருமணத்திற்கு நாமும் நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.

எல்லாம் காதல் படுத்தும்பாடு... 25 ஆயிரம் கிலோ மீட்டர் காரில் பயணிக்கும் இளைஞர்... எதற்காக தெரியுமா?

பொதுவாக கார்களில் தொலை தூர பயணங்களை துவங்கும் முன்பு வழித்தடம் உள்ளிட்ட விஷயங்களை நன்கு திட்டமிட்டு கொள்ளுங்கள். பயணத்தின் நடுவே உங்களுக்கு இடையூறு ஏற்படுவதை இதன் மூலம் தவிர்க்கலாம். காருக்கு மட்டுமல்லாது உங்களுக்கும் ப்யூயல் தேவை. எனவே கூடுமான வரை ஆரோக்கியமான உணவுகளை பயணத்தின்போது கொண்டு செல்லுங்கள்.

எல்லாம் காதல் படுத்தும்பாடு... 25 ஆயிரம் கிலோ மீட்டர் காரில் பயணிக்கும் இளைஞர்... எதற்காக தெரியுமா?

நீண்ட தூர பயணங்களின்போது உங்களுக்கு ஓய்வு அவசியம். எனவே குறிப்பிட்ட இடைவெளியில் கட்டாயம் ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். அசதி, கவனக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் விபத்து ஏற்படுவதை இதன் மூலம் தவிர்க்க முடியும். அதேபோல் நீங்கள் ஹோட்டலில் தங்க வேண்டியதாக இருந்தால் முன் கூட்டியே முன்பதிவு செய்து விடுங்கள்.

எல்லாம் காதல் படுத்தும்பாடு... 25 ஆயிரம் கிலோ மீட்டர் காரில் பயணிக்கும் இளைஞர்... எதற்காக தெரியுமா?

இல்லாவிட்டால் கடைசி நேரத்தில் நீங்கள் அலைக்கழிக்கப்படுவீர்கள். அதேபோல் பயணத்தை தொடங்கும் முன்பாக ஒரு முறைக்கு இரு முறை உங்கள் காரை நன்கு பரிசோதித்து கொள்ளுங்கள். நடுவழியில் கார் மக்கர் செய்தால், தேவையற்ற மன உளைச்சலுக்கு நீங்கள் ஆளாக நேரிடும். அத்துடன் கால விரயமும் ஏற்படும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

Source: hayashi86/Facebook

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Malaysian Youngster Travels More Than 25,000 Kilometre By Car To Germany: Here Is Why. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X