பக்கா மாஸ்... பிரதமர் மோடிக்கு போட்டியாக மம்தா பானர்ஜி செய்யும் அதிரடி... என்னவென்று தெரியுமா?

பிரதமர் மோடிக்கு போட்டியாக மம்தா பானர்ஜி, அவரின் மாநிலத்தில் அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கின்றார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பக்கா மாஸ்... பிரதமர் மோடிக்கு போட்டியாக மம்தா பானர்ஜி செய்யும் அதிரடி... என்னவென்று தெரியுமா?

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் சுற்றுச்சூழலை அதிகம் மாசுபடுத்தி வருகின்றன. எனவே அதற்கு பதிலாக மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. அதாவது எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி போன்ற வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகிறது. இவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதவை.

பக்கா மாஸ்... பிரதமர் மோடிக்கு போட்டியாக மம்தா பானர்ஜி செய்யும் அதிரடி... என்னவென்று தெரியுமா?

இந்தியாவின் சுற்றுச்சூழலை காக்கும் விதமாக, எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில், பிரதமர் நரேந்திர மோடி மிகவும் தீவிரமாக உள்ளார். இதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் சேர்த்து மற்றொரு நன்மையும் கிடைக்கும்.

பக்கா மாஸ்... பிரதமர் மோடிக்கு போட்டியாக மம்தா பானர்ஜி செய்யும் அதிரடி... என்னவென்று தெரியுமா?

பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் அளவு எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பின் மூலம் குறையும். இதனால் நாட்டின் பொருளாதாரமும் பாதுகாக்கப்படும். எனவேதான் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விஷயத்தில் மத்திய அரசு ஆர்வமாக உள்ளது.

பக்கா மாஸ்... பிரதமர் மோடிக்கு போட்டியாக மம்தா பானர்ஜி செய்யும் அதிரடி... என்னவென்று தெரியுமா?

மத்திய அரசு மட்டுமல்லாது பல்வேறு மாநில அரசுகளும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விஷயத்தில் மிகவும் தீவிரமாக உள்ளன. இதில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று கொண்டுள்ள மேற்கு வங்க மாநிலமும் ஒன்று.

பக்கா மாஸ்... பிரதமர் மோடிக்கு போட்டியாக மம்தா பானர்ஜி செய்யும் அதிரடி... என்னவென்று தெரியுமா?

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் ஏற்கனவே 80 மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொல்கத்தா நகரில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் எலெக்ட்ரிக் பஸ்களுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே கொல்கத்தா நகரில் கூடுதலாக 70 எலெக்ட்ரிக் பஸ்களை அறிமுகம் செய்ய மேற்கு வங்க மாநில போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

பக்கா மாஸ்... பிரதமர் மோடிக்கு போட்டியாக மம்தா பானர்ஜி செய்யும் அதிரடி... என்னவென்று தெரியுமா?

இந்த 70 புதிய மின்சார பஸ்களும் வரும் 2020ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படும். இதன் மூலமாக கொல்கத்தா நகரில் இயங்கும் எலெக்ட்ரிக் பஸ்களின் மொத்த எண்ணிக்கை 150ஆக உயரும். இது தவிர கொல்கத்தா மாநகரில், சுற்றுச்சூலுக்கு பாதிப்பு இல்லாத சிஎன்ஜி பஸ்களையும் மேற்கு வங்க அரசு முதல் முறையாக இயக்க திட்டமிட்டுள்ளது.

பக்கா மாஸ்... பிரதமர் மோடிக்கு போட்டியாக மம்தா பானர்ஜி செய்யும் அதிரடி... என்னவென்று தெரியுமா?

70 புதிய எலெக்ட்ரிக் பஸ்களை போலவே, புதிய சிஎன்ஜி பஸ்களும் அடுத்த ஆண்டு மார்ச் முதல் கொல்கத்தா நகரில் இயக்கப்படும். இதற்காக கஸ்பா பஸ் டெப்போவில், ரீ-ஃபில்லிங் ஸ்டேஷனை மேற்கு வங்க மாநில போக்குவரத்து துறை அமைத்து வருகிறது. போக்குவரத்து துறை அமைச்சர் சுபெண்டு ஆதிகாரி இந்த தகவல்களை சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

பக்கா மாஸ்... பிரதமர் மோடிக்கு போட்டியாக மம்தா பானர்ஜி செய்யும் அதிரடி... என்னவென்று தெரியுமா?

இதுகுறித்து அவர் கூறுகையில், ''அடுத்த ஆண்டு மார்ச் மாதம், கொல்கத்தா நகரில், 10 சிஎன்ஜி பேருந்துகளை போக்குவரத்து துறை அறிமுகம் செய்யும். ஆனால் கொல்கத்தா நகரில் ரீ-ஃபில்லிங் கட்டமைப்பு வசதிகள் இல்லை. எனவே கஸ்பா பஸ் டெப்போவில் ரீ-ஃபில்லிங் ஸ்டேஷனை கட்டமைத்து வருகிறோம். இதற்காக கெயில் உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.

பக்கா மாஸ்... பிரதமர் மோடிக்கு போட்டியாக மம்தா பானர்ஜி செய்யும் அதிரடி... என்னவென்று தெரியுமா?

கொல்கத்தாவில் வருங்காலத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பேருந்துகளை இன்னும் அதிகளவில் அறிமுகம் செய்யும் திட்டம் எங்களிடம் உள்ளது'' என்றார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ''கொல்கத்தாவில் பல்வேறு வழித்தடங்களில் ஏற்கனவே 80 மின்சார பஸ்கள் இயங்கி கொண்டுள்ளன. மிகப்பெரும் வரவேற்பை இது பெற்றுள்ளது.

பக்கா மாஸ்... பிரதமர் மோடிக்கு போட்டியாக மம்தா பானர்ஜி செய்யும் அதிரடி... என்னவென்று தெரியுமா?

எனவே கூடுதலாக 70 எலெக்ட்ரிக் பஸ்களை அறிமுகம் செய்யவுள்ளோம். இதன் மூலம் மொத்த எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கை 150ஆக உயரும். கொல்கத்தா நகரில் தற்போது 55 சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளன. எனினும் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை உயர்த்தும் பணிகளை போக்குவரத்து துறை செய்து வருகிறது'' என்றார்.

பக்கா மாஸ்... பிரதமர் மோடிக்கு போட்டியாக மம்தா பானர்ஜி செய்யும் அதிரடி... என்னவென்று தெரியுமா?

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி பேருந்துகளை அதிக அளவில் அறிமுகம் செய்ய முயலும் மேற்கு வங்க மாநில அரசின் முயற்சி பாராட்டுக்குரியது. பிரதமர் நரேந்திர மோடியும், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் உண்மையில் பல்வேறு விஷயங்களில் எதிரெதிர் கருத்துக்களை கொண்டவர்கள்.

பக்கா மாஸ்... பிரதமர் மோடிக்கு போட்டியாக மம்தா பானர்ஜி செய்யும் அதிரடி... என்னவென்று தெரியுமா?

ஆனால் பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்தும் விஷயத்தில், அவர்கள் இருவரும் ஒன்றுபடுகின்றனர். இவ்வாறு அனைவரும் போட்டி போட்டு கொண்டு பொதுபோக்குவரத்து முறையை எலெக்ட்ரிக் மயமாக மாற்றினால் நாட்டிற்குதான் நல்லது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
 
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mamata Banerjee Government To Introduce 10 CNG Buses, 70 Electric Buses In Kolkata. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X