விவசாயிகள் போராட்டத்துக்கு கருத்து சொல்லுங்க... பிரபல நடிகரின் காரை மறித்து ரணகளப்படுத்திய மனிதர்...

பிரபல நடிகர் அஜய் தேவ்கனின் காரை ஒருவர் மறித்து கடுமையான வார்த்தைகளால் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விவசாயிகள் போராட்டத்துக்கு கருத்து சொல்லுங்க... பிரபல நடிகரின் காரை மறித்து ரணகளப்படுத்திய மனிதர்...

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரை, ஒருவர் பொது சாலையில் வலுக்கட்டாயமாக நிறுத்தியுள்ளார். இந்த சம்பவம் நடைபெற்றபோது, மும்பையின் பிலிம் சிட்டியில் ஷூட்டிங்கிற்காக அஜய் தேவ்கன் சென்று கொண்டிருந்தார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தற்போது போராட்டம் நடத்தி வருவது நமக்கு தெரிந்த ஒரு விஷயம்தான்.

விவசாயிகள் போராட்டத்துக்கு கருத்து சொல்லுங்க... பிரபல நடிகரின் காரை மறித்து ரணகளப்படுத்திய மனிதர்...

இந்த பிரச்னை தொடர்பாக அஜய் தேவ்கன் எதுவும் பேசவில்லை எனக்கூறி, அந்த நபர் இந்த காரியத்தை செய்ததாக கூறப்படுகிறது. அவரது பெயர் ராஜ்தீப் சிங் என்பது தெரியவந்துள்ளது. அஜய் தேவ்கனின் காரை நிறுத்தியவுடன், தனது செல்போனில் அவர் கேமராவை ஆன் செய்து கொண்டார். அதன்பின் விவசாயிகள் போராட்டம் பற்றி பேசுமாறு, அஜய் தேவ்கனை அவர் வற்புறுத்தினார்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் சொகுசு காரின் நிறை, குறைகள்... விரிவாக விளக்கும் வீடியோ!

விவசாயிகள் போராட்டத்துக்கு கருத்து சொல்லுங்க... பிரபல நடிகரின் காரை மறித்து ரணகளப்படுத்திய மனிதர்...

இந்த பிரச்னை தொடர்பாக உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என அவர் தெரிவித்தார். இதன் காரணமாக ராஜ்தீப் சிங்கை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் போராட்டத்துக்கு கருத்து சொல்லுங்க... பிரபல நடிகரின் காரை மறித்து ரணகளப்படுத்திய மனிதர்...

வீடியோவில் ராஜ்தீப் சிங் கூறியது பின்வருமாறு: இந்த மனிதர் பஞ்சாப்பிற்கு எதிராக இருக்கிறார். பஞ்சாப் அவருக்கு உணவு வழங்கியுள்ளது. அவரால் உணவை எப்படி ஜீரணிக்க முடிகிறது? நீங்கள் எப்படி பஞ்சாப்பிற்கு எதிராக இருக்க முடியும்? நீங்கள் வெட்கப்பட வேண்டும். என் மீது காரை ஏற்ற போகிறீர்களா? அவரால் ஏன் காரில் இருந்து இறங்கி வந்து பேச முடியவில்லை?

விவசாயிகள் போராட்டத்துக்கு கருத்து சொல்லுங்க... பிரபல நடிகரின் காரை மறித்து ரணகளப்படுத்திய மனிதர்...

மேற்கண்டவாறுதான் ராஜ்தீப் சிங் வீடியோவில் பேசியுள்ளார். இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஓட்டுனர் ஆவார். ஆனால் மும்பையில் வேலை செய்து வருகிறார். அவர் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அஜய் தேவ்கனின் காரை மறித்து நிறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜ்தீப் சிங்கின் கோவத்திற்கான சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை.

விவசாயிகள் போராட்டத்துக்கு கருத்து சொல்லுங்க... பிரபல நடிகரின் காரை மறித்து ரணகளப்படுத்திய மனிதர்...

ஆனால் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அஜய் தேவ்கன் எந்தவிதமான கருத்து தெரிவிக்காத காரணத்தால், அவர் இந்த காரியத்தை செய்திருப்பது போல் தெரிகிறது. தற்போது சமூக வலை தளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதன் கமெண்ட்களில் அஜய் தேவ்கனை பலர் விமர்சித்து வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டத்துக்கு கருத்து சொல்லுங்க... பிரபல நடிகரின் காரை மறித்து ரணகளப்படுத்திய மனிதர்...

இந்த பிரச்னை தொடர்பாக அஜய் தேவ்கன் பேசிகிறாரோ இல்லையோ, அவர் விலை உயர்ந்த கார்களுக்கு மிகப்பெரிய ரசிகராக உள்ளார். அவரது கராஜில் உள்ள விலை உயர்ந்த கார்களே அதற்கு சாட்சி. அஜய் தேவ்கனிடம் சொந்தமாக உள்ள கார்களில், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் மிகவும் முக்கியமானது. இது இந்தியாவில் கிடைக்கும் விலை உயர்ந்த சொகுசு எஸ்யூவி கார்களில் ஒன்றாகும்.

விவசாயிகள் போராட்டத்துக்கு கருத்து சொல்லுங்க... பிரபல நடிகரின் காரை மறித்து ரணகளப்படுத்திய மனிதர்...

இதுதவிர பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரும் அவரிடம் உள்ளது. மேற்கண்ட சம்பவம் நடைபெற்றபோது, அவர் இந்த காரைதான் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மஸராட்டி க்வாட்ரோபோர்ட்டே, பிஎம்டபிள்யூ இஸட்4 ஆகிய கார்களும் அஜய் தேவ்கனிடம் உள்ளது. அத்துடன் கஸ்டமைஸ் செய்யப்பட்ட வேனிட்டி வேனையும் அவர் வைத்துள்ளார்.

பெரும்பாலும் தனது கார்களை தானே ஓட்டுவதை அஜய் தேவ்கன் விரும்ப கூடியவர். ஆனால் மேற்கண்ட சம்பவம் நடைபெற்றபோது அவர் ஓட்டுனருடன் இருந்தார். அஜய் தேவ்கன் மட்டுமல்லாது, பாலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர் பலரும் மிகவும் விலை உயர்ந்த கார்கள் பலவற்றை சொந்தமாக வைத்துள்ளனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Man Blocks Bollywood Actor Ajay Devgn’s BMW X7 - Here Is The Reason. Read in Tamil
Story first published: Wednesday, March 3, 2021, 20:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X