ஒன்னே கால் லட்சம் தண்டம் கட்டிய வாகன ஓட்டி! காரணத்தை கேட்டு எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கறாங்க

வாகன ஓட்டி ஒருவர் 1.25 லட்ச ரூபாய் அபராதம் கட்டியிருப்பதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

ஒன்னே கால் லட்சம் தண்டம் கட்டிய வாகன ஓட்டி! காரணத்தை கேட்டு எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கறாங்க

கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலகின் பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்தன. எனினும் இரண்டு, மூன்று மாதங்கள் கடந்த பின்னர், ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு சில பகுதிகளில் தற்போது மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

ஒன்னே கால் லட்சம் தண்டம் கட்டிய வாகன ஓட்டி! காரணத்தை கேட்டு எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கறாங்க

இதில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணமும் ஒன்று. ஆஸ்திரேலியாவின் முக்கியமான நகரங்களில் ஒன்றான மெல்போர்ன், விக்டோரியா மாகாணத்தில்தான் உள்ளது. இம்மாகாணத்தில் திடீரென கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால், சமீபத்தில் மீண்டும் அதிரடியாக லாக்டவுன் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

ஒன்னே கால் லட்சம் தண்டம் கட்டிய வாகன ஓட்டி! காரணத்தை கேட்டு எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கறாங்க

எனவே பொது மக்கள் கூடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகள் இருக்கும்பட்சத்தில், தங்கள் வீடுகளுக்கு அருகில் இருக்கும் வசதிகளைதான் மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கறாராக உத்தரவிட்டுள்ளனர். அனைத்து நேரங்களிலும் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டும் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒன்னே கால் லட்சம் தண்டம் கட்டிய வாகன ஓட்டி! காரணத்தை கேட்டு எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கறாங்க

தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களை வீடுகளுக்கு உள்ளேயே இருக்க வைப்பதில் அதிகாரிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். தேவையில்லாத காரணங்களுக்காக மக்கள் வெளியே வரும் போக்கு அங்கு அதிகமாக காணப்படுகிறது.

ஒன்னே கால் லட்சம் தண்டம் கட்டிய வாகன ஓட்டி! காரணத்தை கேட்டு எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கறாங்க

பட்டர் சிக்கன் (Butter Chicken) வாங்குவதற்காக எல்லாம் மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்கின்றனர். ஆம், உண்மைதான். மெல்போர்ன் நகரில், பட்டர் சிக்கனை ஆசைப்பட்டு வாங்க போய் வாகன ஓட்டி ஒருவர் சிக்கலில் சிக்கி கொண்டுள்ளார். தற்போது இந்த செய்திதான் உலகம் முழுக்க இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒன்னே கால் லட்சம் தண்டம் கட்டிய வாகன ஓட்டி! காரணத்தை கேட்டு எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கறாங்க

மெல்போர்ன் நகரில் இருந்து மேற்கு திசையில் சுமார் 32 கிலோ மீட்டர் தொலைவில் வெர்ரிபீ என்னும் பகுதி உள்ளது. இது மெல்போர்னின் புறநகர் பகுதிகளில் ஒன்றாகும். இந்த பகுதியை சேர்ந்த ஒருவர் லாக்டவுன் அமலில் இருக்கும் நிலையிலும், பட்டர் சிக்கன் வாங்குவதற்காக, 32 கிலோ மீட்டர் தூரம் வாகனத்தை ஓட்டிக்கொண்டு மெல்போர்ன் வந்தார்.

ஒன்னே கால் லட்சம் தண்டம் கட்டிய வாகன ஓட்டி! காரணத்தை கேட்டு எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கறாங்க

எனினும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம் அவர் சிக்கி கொண்டார். ஊரடங்கை மதிக்காமல், பட்டர் சிக்கன் வாங்குவதற்கு வாகனத்தை ஓட்டி வந்த அவருக்கு காவல் துறையினர் 1,652 அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்தனர். இது இந்திய மதிப்பில் தோராயமாக 1.25 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்னே கால் லட்சம் தண்டம் கட்டிய வாகன ஓட்டி! காரணத்தை கேட்டு எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கறாங்க

ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராத தொகைகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். இதனை தற்போது நெட்டிசன்கள் பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர். ஒரு பிளேட் பட்டர் சிக்கனுக்காக செலவழிக்கப்பட்ட அதிகபட்ச தொகை இதுதான் என இணையத்தில் பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

ஒன்னே கால் லட்சம் தண்டம் கட்டிய வாகன ஓட்டி! காரணத்தை கேட்டு எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கறாங்க

ஆஸ்திரேலியாவை போன்றே இந்தியாவிலும் ஊரடங்கை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனை மீறி தேவையில்லாமல் இயக்கப்பட்ட வாகனங்களை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர்.

ஒன்னே கால் லட்சம் தண்டம் கட்டிய வாகன ஓட்டி! காரணத்தை கேட்டு எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கறாங்க

ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக தமிழகத்தில் மட்டும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகளை அரசு வழங்கியுள்ளது. ஆனால் பொது போக்குவரத்து இன்னும் சீராகவில்லை.

ஒன்னே கால் லட்சம் தண்டம் கட்டிய வாகன ஓட்டி! காரணத்தை கேட்டு எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கறாங்க

அத்துடன் தனியார் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் நீடித்து வருகின்றன. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையிலும் கூட, தேவையில்லாமல் இயக்கப்படும் வாகனங்களை காவல் துறையினர் இன்னமும் பறிமுதல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Man Drives 32 Kms For Butter Chicken, Pays Rs.1.25 Lakh Fine For Violating Covid-19 Lockdown. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X