இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..!

உலகின் மிக உயரமான கட்டிடம் என்று அழைக்கப்படும் புர்ஜ் கலிஃபாவையும் கடந்து உலகின் "நிஜ அயர்ன்" பறந்து புதிய உலக சாதனைப் படைத்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..!

மார்வல் தயாரிப்பில் வெளிவந்த மிக முக்கியமான படங்களில் 'அயர்ன் மேன்' திரைப்படமும் ஒன்று. இப்படத்தின் கதை அழிவின் விளிம்பில் இருக்கும் உலகத்தை சூப்பர் ஹீரோக்கள் தங்களின் அசாத்தியமான திறனைக் கொண்டு காப்பாற்றுவதை மையக் கருத்தாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். ஆகையால், இந்த படத்தில் ஆக்சன் மற்றும் த்ரில்லான சண்டைக் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது.

இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..!

அதேசமயம், இந்த படத்தில் யாரும் எதிர்பாராத அளவில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். அது நம்மை வேறொரு உலகத்திற்கே அழைத்து செல்லும். குறிப்பாக, படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்த தவறுவதில்லை. இதனாலயே, இப்படத்திற்கு சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். ஏன், சில வயது மூத்த காமிக்ஸ் விரும்பிகள்கூட இப்படத்திற்கு ரசிகராக இருக்கின்றனர்.

இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..!

அயர்ன்மேன் படத்தில் குறிப்பாக அனைவரையும் கவரும் வகையில் எஜமானனைத் தேடி வரும் பறக்கும் உடை இருக்கின்றது. இது, ஜெட் விமானங்களை விஞ்சும் வகையில் சூப்பர் ஹீரோவை அண்டத்தையும் தாண்டி அழைத்துச் செல்ல உதவும். அதுமட்டுமின்றி துப்பாக்கி, ரிமோட் மூலம் மற்ற எந்திரங்களைக் கட்டுபடுத்துதள் போன்ற அதித திறனை அது பெற்றிருக்கும்.

இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..!

இத்தகைய உடை நிஜ வாழ்க்கையில் இதுவரை கண்டிராத ஒன்றாக இருக்கின்றது. ஆனால், அதனை வின்ஸ் ரெஃபட் என்ற இளைஞர் மாற்றியமைத்துள்ளார். இவர், மனிதனை பறக்கச் செய்கின்ற உடையை வடிவமைத்து வெற்றிகரமாக பயன்படுத்தியும் காட்டியுள்ளார்.

இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..!

இதனால், இவர் அயர்ன் மேனைப் போல் 'ஜெட்மேன்' என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருகின்றார். இவர் வடிவமைத்த இந்த ஜெட் உடை மூலம் சுமார் 1,800 மீட்டர் (6 ஆயிரம் அடி) வரை பறந்து காட்டியுள்ளார். இதன்மூலம் அவர் புதிய உலக சாதனைப் படைத்துள்ளார்.

இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..!

இந்த நிகழ்வானது தற்போது நடைபெற்று வரும் எக்ஸ்போ 2020 துபாய் யுஏஇ-யில் நடைபெற்றிருக்கின்றது. இதுகுறித்த வீடியோ ஒன்றையும் அது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது.

அந்த வீடியோவில், ரெஃபட் விமானங்களுக்கு இணையான வேகத்தில் ஜெட் உடை மூலம் வானில் சீறிப் பாய்ந்து பறந்து செல்கின்றார். இதில், ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும். பாராகிளைடர் போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பறக்கும் உடையின் இரு முனையிலும் மினி ஜெட் எஞ்ஜின்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..!

அவையே ரெஃபட்டிற்கு விமானத்திற்கு இணையான பறக்கும் வேகத்தை வழங்கியது. அந்த இறக்கைகள் கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்டவை. இது எடைக் குறைவானது. ஆகையால், இது துளியளவும் மினி ஜெட் எஞ்ஜினின் திறனை குறைக்காது. இந்த எஞ்ஜின் மூலம் காற்றில் பறக்கவும், மீண்டும் பாதுகாப்பாக பாராசூட் உதவியின்றி தரையிறங்கவும் முடியும்.

இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..!

குறிப்பாக, இந்த எஞ்ஜின் மணிக்கு 250 மைல் (450) வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.

இத்தகைய ஓர் உடையை அணிந்துதான் துபாயின் மிகவும் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவையும் கடந்து ரெஃபட் தற்போது பறந்து சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஆண்டும் இதே குழுவினர் சொர்கத்தின் வாசல் என்றழைக்கப்படும் சீனாவின் மலைகள் நிறைந்த பகுதிகளில் பறந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தனர்.

இதையடுத்தே தற்போது துபாயின் அழகிய கடற்கரை பகுதியான கிரிஸ்டல் வாட்டர் பகுதியில் பறந்து புதிய உலக சாதனைப் படைத்துள்ளார்.

இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..!

இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் வாயிலாக இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும், பலர் ரெஃபட்டை ரியல் அயர்ன் மேன் என்று செல்லமாக வருகின்றனர்.

வின்ஸ் ரெஃபட் ஃபிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்தவர். இவர் இதற்கு முன்னதாக இதேபோன்று பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார்.

இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..!

இவர் தற்போது சாதனைப் படைத்திருப்பது சாதாரண வேகமல்ல, சற்று கவனம் சிதறினாலும் அவருடைய கழுத்து எலும்புகள் முறிய பலவாய்ப்புகள் இருக்கின்றன. இருப்பினும், மணிக்கு 400 கிமீ என்ற வேகத்தில் பறந்து சாதனைப் படைத்துள்ளார். இதன் காரணத்தினாலேயே அவரை இரும்பு மனிதர் அழைக்க ஆரம்பித்துள்ளனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Man Reaches 6000 Feet With Flying Suit Creates World Record. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X