மாருதி சுசுகி காரை குத்தி தூக்கி பந்தாடிய காளை மாடு... வீடியோவை பாருங்க

மாருதி சுசுகி ஆல்டோ கே10 மாடல் காரை காளை மாடு ஒன்று தாக்கியுள்ளது பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காளை, காரை முட்டி தூக்கி வீசியுள்ள இந்த சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டு இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

மாருதி சுசுகி காரை குத்தி தூக்கி பந்தாடிய காளை மாடு... வீடியோவை பாருங்க

படத்தில் காட்டப்பட்டுள்ளதுபோல், டயர்-2 மற்றும் டயர்-3யை நோக்கியுள்ள மக்களின் பக்கம் காளை ஆல்டோ கே10 காரை தூக்கி வீசியுள்ளது. பொதுவாக மாடுகள் இதுபோன்று வாகனங்களை சேதப்படுத்துவது கிடையாது. ஆனால் சில நேரங்களில் மிருகங்கள் தங்களது கோபங்களை இவ்வாறு வெளிப்படுத்தி விடுகின்றன.

மாருதி சுசுகி காரை குத்தி தூக்கி பந்தாடிய காளை மாடு... வீடியோவை பாருங்க

சமீபத்தில் கூட கேரளாவில் இதுபோல தான் யானை ஒன்று மதம் பிடித்து அருகில் இருந்த ஆட்டோ ரிக்‌ஷா மற்றும் சில மோட்டார்சைக்கிள்களை பந்தாடியது. அதுபோல தான் இதுவும். என்ன இங்கு காளை மக்கள் அதிகம் கூடும் பகுதியில் இவ்வாறு அட்டகாசம் செய்துள்ளது.

மாருதி சுசுகி காரை குத்தி தூக்கி பந்தாடிய காளை மாடு... வீடியோவை பாருங்க

காளையின் வலிமையை வெளிக்காட்டும் விதமாக 'கர்நாடகாவில் எடிட்டிங் இல்லாத பாகுபலி வெர்சன்' என்கிற ஹாஸ்டேக்குடன் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வைரலாகி வரும் இந்த வீடியோவை இதுவரை மட்டுமே 1,700க்கும் அதிகமானோர் பகிர்ந்துள்ளனர்.

மாருதி சுசுகி காரை குத்தி தூக்கி பந்தாடிய காளை மாடு... வீடியோவை பாருங்க

பாதிப்பிற்குள்ளாகி உள்ள இந்த ஆல்டோ கே10 காரில் விலை கொடுத்து வாங்கிய பின்னர் பாதுகாப்பிற்காக பின்புறத்தில் பம்பர் புதியதாக பொருத்தியுள்ளனர். ஆனால் இந்த பம்பர் தான் காரை தூக்கி போட காளைக்கு உதவியாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

மாருதி சுசுகி காரை குத்தி தூக்கி பந்தாடிய காளை மாடு... வீடியோவை பாருங்க

இந்த பம்பரில் தனது கொம்புகளை நங்கூரம் போல் மாட்டி கொண்டு காளை தூக்கியதில் காரின் முன்புறத்தின் ஒரு பக்க ஹெட்லைட் மற்றும் அதை சுற்றியுள்ள மொத்த பாகங்களும் தரையில் மோதி முழுவதும் சேதமடைந்துவிட்டன. சுற்றி இருந்தவர்களும் கற்களை வீசுகின்றனர். அவர்களை எல்லாம் அது மதிப்பது போலவே இல்லை.

மாருதி சுசுகி காரை குத்தி தூக்கி பந்தாடிய காளை மாடு... வீடியோவை பாருங்க

கடைசி வரை கோபம் தணியாத காளை, காரின் வலது புறத்தில் முட்டி காரை தலைக்கீழாக புரட்டி போட பார்த்தது. ஆனால் நல்லவேளையாக அதற்குள் ஒருவர் அருகில் வந்து தண்ணீரை அதன் மீது ஊற்றவே ஒருவழியாக காரை விட்டு விலகி சென்றது. மிக குறுகிய காலத்திலேயே காரில் பெரிய சேதத்தை காளை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்வு பெங்களூரில் எங்கு நடந்தது என்பது சரியாக தெரியவில்லை.

மாருதி சுசுகி காரை குத்தி தூக்கி பந்தாடிய காளை மாடு... வீடியோவை பாருங்க

காளையால் சேதமடைந்துள்ள இந்த மாருதி சுசுகி ஆல்டோ கே10 மாடல் கார், 998சிசி-ல் மூன்று சிலிண்டர் அமைப்புகளுடன் அதிகப்பட்ச ஆற்றலாக 67 பிஎச்பி பவரையும் 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் 5 வேக நிலைகளை வழங்கக்கூடிய மேனுவல் கியர்பாக்ஸ் முன்புற சக்கரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆல்டோ கே10 கார் 765 கிலோகிராம் மட்டுமே இதன் எடை. இதனால் தான் காளையால் காரை மிக எளிதாக அதன் உயரத்திற்கு தூக்கி போட முடிந்துள்ளது.

காளை ஏன் இவ்வாறு முரட்டுத்தனமாக வாகனத்துடன் நடந்து கொண்டது என்பது தெரியவில்லை. இந்த சம்பவத்தில் காரின் முன்புறம் மற்றும் பின்புறம் மட்டுமே சேதமடைந்துள்ளது. மற்றபடி என்ஜின் உள்ளிட்ட பாகங்கள் பாதிக்கப்பட்டது போல் தெரியவில்லை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Angry Bull Attacks Maruti Suzuki Alto K10; Lifts The Car And Throws It With Ease
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X