அலட்சியம் காட்டிய டீலருக்கு தக்க பாடம் புகட்டிய நீதிமன்றம்... மகிழ்ச்சியில் காரின் உரிமையாளர்...!

கார் சர்வீஸ் செய்வதில் அலட்சியம் காட்டி மாருதி சுஸுகி நிர்வாகம் மற்றும் அதன் ஹைதராபாத் டீலரான வருன் மோட்டார்ஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் தக்க பாடம் புகட்டும் வகையில், அம்மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை இந்த பதிவில் காணலாம்.

அலட்சியம் காட்டிய டீலர் மற்றும் மாருதி சுஸுகி-க்கு தக்க பாடம் புகட்டிய நீதிமன்றம்... மகிழ்ச்சியில் காரின் உரிமையாளர்....

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் ரெட்டி. இவர் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆல்டோ 800 காரை பயன்படுத்தி வருகின்றார். இதனை, அதேபகுதியில் இயங்கிவரும் வருன் மோட்டார்ஸ் என்ற மாருதி சுஸுகி டீலரிடம், கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் வாங்கியுள்ளார்.

அலட்சியம் காட்டிய டீலர் மற்றும் மாருதி சுஸுகி-க்கு தக்க பாடம் புகட்டிய நீதிமன்றம்... மகிழ்ச்சியில் காரின் உரிமையாளர்....

அப்போது, ஆல்டோ 800 காரின் சில பகுதிகள் சேதமடைந்திருந்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு, வின்ட் ஷீல்டில் க்ராக், வலது பக்கத்தின் பின்புற கதவில் உடைப்பு மற்றும் அதிகளவிலான சப்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் அந்த காரில் இருந்துள்ளன. மேலும், காரின் ஹாரனும் சரிவர வேலை செய்யவில்லை. இதன்காரணமாக, வருன் மோட்டார்ஸை, சுதர்சன் அணுகியுள்ளார்.

அலட்சியம் காட்டிய டீலர் மற்றும் மாருதி சுஸுகி-க்கு தக்க பாடம் புகட்டிய நீதிமன்றம்... மகிழ்ச்சியில் காரின் உரிமையாளர்....

அப்போது, அவரை, மாருதி சஸுகி நிறுவனத்தின் சர்வீஸ் சென்டரை அணுகும்படி, ஷோரூம் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனை கடைபிடிக்கும் விதமாக, அவர் காரை எடுத்துக்கொண்டு, சர்வீஸ் சென்டரில் ஒப்படைத்துள்ளார். அங்கு, ஆல்டோ 800 காரில் ஏற்பட்ட கோளாறுகள் தீர்வு செய்யப்பட்டதாக கூறி சுதர்சனிடம் மீண்டும் கார் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், காரின் ஹாரனும்ம் வேலை செய்யவில்லை, அவர் அளித்த புகார்களுக்கும் தீர்வுக் காணப்படவில்லை.

அலட்சியம் காட்டிய டீலர் மற்றும் மாருதி சுஸுகி-க்கு தக்க பாடம் புகட்டிய நீதிமன்றம்... மகிழ்ச்சியில் காரின் உரிமையாளர்....

ஆகையால், சுதர்சன் எப்போதும் காரை குறைந்த வேகத்திலேயே இயக்கி வந்துள்ளார். அதேபோன்று, காரை சர்வீஸுக்கு விடும்போது, அதிகளவில் கார் எரிபொருளை உறிஞ்சுவதாகவும் அவர் புகார் தெரிவித்திருந்துள்ளார். அதையும், அவர்கள் சீர் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதுபோன்ற, பல்வேறு காரணங்களால் அவர், ஆல்டோ காரை மிக குறைவான வேகத்திலேயே இயக்கி வந்துள்ளார்.

அலட்சியம் காட்டிய டீலர் மற்றும் மாருதி சுஸுகி-க்கு தக்க பாடம் புகட்டிய நீதிமன்றம்... மகிழ்ச்சியில் காரின் உரிமையாளர்....

இருப்பினும், சரிவர இயங்காத ஹாரனாலும், மிக குறைவான வேகத்தாலும், சுதர்சனின் ஆல்டோ கார் ஒரு முறை விபத்தைச் சந்தித்துள்ளது. இதனால், மன உலைச்சலைடந்த அவர், இதுகுறித்த அம்மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார். இதன் மீதான விசாரணை நடைபெற்று வந்தநிலையில், அண்மையில் அது இறுதிக் கட்டத்தை எட்டியது.

அலட்சியம் காட்டிய டீலர் மற்றும் மாருதி சுஸுகி-க்கு தக்க பாடம் புகட்டிய நீதிமன்றம்... மகிழ்ச்சியில் காரின் உரிமையாளர்....

இந்நிலையில், அதற்கான தீர்ப்பும் தற்போது வெளியாகியுள்ளது. மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் மற்றும் வருன் மோட்டார்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும், காரின் உரிமையாளர் சுதர்சனுக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடாக வழங்க அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.

அலட்சியம் காட்டிய டீலர் மற்றும் மாருதி சுஸுகி-க்கு தக்க பாடம் புகட்டிய நீதிமன்றம்... மகிழ்ச்சியில் காரின் உரிமையாளர்....

சுதர்சன் தெரிவித்த அனைத்து புகார்களுக்கும், தீர்வு காணப்பட்டுவிட்டதாக மாருதி சுஸுகி நிர்வாகமும், வருன் மோட்டார்ஸ் நிர்வாகமும் கூறின. மேலும், நிவர்த்தி செய்யப்பட்ட புகார்களுக்கு நிவாரணம் வழங்கு எப்படி என இரு நிர்வாகங்களும் மறுப்பு தெரிவித்தது. ஆனாலும், மாவட்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.

அலட்சியம் காட்டிய டீலர் மற்றும் மாருதி சுஸுகி-க்கு தக்க பாடம் புகட்டிய நீதிமன்றம்... மகிழ்ச்சியில் காரின் உரிமையாளர்....

வாகனங்களில் ஹாரன் வேலை செய்யாமல்போவது, மிகப்பெரிய ஆபத்தான சூழலை ஏற்படுத்தும். சுதர்சனின் கார் விபத்தில் சிக்க, வேலை செய்யாத ஹாரனே முக்கியமாக காரணமாக இருக்கின்றது. ஆகையால், மாருதி சுஸுகி மற்றும் வருன் மோட்டார்ஸ் நிறுவனங்களின் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்து, இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Source: TOI

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Maruti Suzuki Alto Owner Gets Rs. 1 Lakh As Compensation From Dealer. Read In Tamil.
Story first published: Tuesday, June 18, 2019, 16:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X