ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்கள்- கோர விபத்தின் வைரல் வீடியோ: இணையதள வாசிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை!

பெங்களூரு ஏர்போர்ட் சாலையில் நிகழ்ந்ததாகக் கூறி வைரலாகி வரும் பெரும் விபத்தின் வீடியோவைப் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்கள்- கோர விபத்தின் வைரல் வீடியோ: இணையதள வாசிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை!

சமூக வலைதளங்களில் சமூகத்திற்கு தேவையான பல நல்ல விஷயங்கள் பரப்பட்டு வந்த நிலைமை மாறி, தற்போது பொய்யான வதந்திகள் அதிகம் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க அரசும், காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் வதந்திகளுக்கு முற்று புள்ள வைக்க முடியாமல் அவர்கள் பெரும் சிக்கலைச் சந்தித்து வருகின்றனர்.

ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்கள்- கோர விபத்தின் வைரல் வீடியோ: இணையதள வாசிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை!

அவ்வாறு, கடந்த வியாழனன்று பெங்களூருவில் பெரும் விபத்து ஏற்பட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், குறைந்தது 20க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகி இருந்தன.

ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்கள்- கோர விபத்தின் வைரல் வீடியோ: இணையதள வாசிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்த பெரும் விபத்தானது பெங்களூருவின் ஏர்போர்ட் சாலையில் நடைபெற்றதாகவும், இதில் பலர் பயங்கரமாக காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் நேற்று பரவ ஆரம்பித்தது.

ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்கள்- கோர விபத்தின் வைரல் வீடியோ: இணையதள வாசிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இதையறிந்த செய்தியாளர்கள் இதுகுறித்து பெங்களூரு மாநகர போலீஸாரைத் தொடர்புக்கொண்டு போசிய போது, "தற்போது வைரலாகி வரும் இந்த பெரும் விபத்தின் வீடியோ, பொய்யானது. இந்த விபத்து நடந்து பல நாட்கள் கடந்துவிட்டன. இதுபோன்று வதந்திகளை பரப்ப வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

மேலும், இதுபோன்ற வதந்தகிளைப் பரப்புவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் பெங்களூரு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்கள்- கோர விபத்தின் வைரல் வீடியோ: இணையதள வாசிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை!

சமீபகாலமாக, சமூக வலைதளங்களில் இதுபோன்று வதந்திகள் பரவி வருவதை நாம் கண்டிருப்போம். அவ்வாறு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதப்படையைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவன் மத்திய ரிசர்வ் படைவீரர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தினான். இதில், 40க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர்.

ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்கள்- கோர விபத்தின் வைரல் வீடியோ: இணையதள வாசிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் புல்வாமா பகுதியில் இறந்ததாகக் கூறி சிலரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்தது. அந்த புகைப்படங்களை வைத்து பேனர் அடித்த பொதுமக்கள் அவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்கள்- கோர விபத்தின் வைரல் வீடியோ: இணையதள வாசிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை!

ஆனால், அவர்கள் அஞ்சலி செலுத்தியது மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த வீரர்களுக்கு அல்ல, ஏனென்றால் அந்த பேனரில் இருந்தது ஈழத் தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த விடுதலைப் புலிகளின் படை வீரர்களின் புகைப்படம்.

ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்கள்- கோர விபத்தின் வைரல் வீடியோ: இணையதள வாசிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்த புகைப்படத்தை, சில சமூக வலைதள வாசிகள் மத்திய ரிசர்வ் படை வீரர்களின் புகைப்படம் எனக்கூறி சமூக வலைதளத்தில் வைரலாக்கினார்கள். இதையறியாத மக்கள் அதனைப் பேனர் அடித்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதுகுறித்து சமீபத்தில் செய்திகள் ஒளிப்பரப்பட்டது.

ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்கள்- கோர விபத்தின் வைரல் வீடியோ: இணையதள வாசிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இவ்வாறு சமூக வலைதளவாசிகள் வரம்புமீறி பொய்யான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இதுசெயல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக சைபர் கிரைம் போலீஸார் அவ்வப்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இதுகுறித்து சிறிதும் கவலைப்படாத சமூகவலைதள வாசிகள் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்பி வருகின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Massive Accident On Airport Road In Bangalore-Viral Video. Read In Tamil.
Story first published: Friday, February 22, 2019, 12:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X