தல அஜீத்துக்கே சவால் விடுவாங்க போல... ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டிய பிரபல நடிகை... யார்னு தெரியுதா?

பிரபல நடிகை ஒருவர் ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தல அஜீத்துக்கே சவால் விடுவாங்க போல... ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டிய பிரபல நடிகை... யார்னு தெரியுதா?

தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்ததன் மூலம், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில், தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்திருப்பவர் மாளவிகா மோகனன். அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்தாலும், தனது சமூக வலை தள பக்கங்களில் மாளவிகா மோகனன் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தல அஜீத்துக்கே சவால் விடுவாங்க போல... ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டிய பிரபல நடிகை... யார்னு தெரியுதா?

குறிப்பாக மாளவிகா மோகனனுக்கு மோட்டார்சைக்கிள்களை ஓட்டுவது என்றால் மிகவும் பிடிக்கும். அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களுக்கு இது நன்றாகவே தெரியும். இந்த சூழலில் ராயல் என்பீல்டு பைக்கில் அமர்ந்திருக்கும் ஒரு சில புதிய புகைப்படங்களை மாளவிகா மோகனன் தற்போது வெளியிட்டுள்ளார்.

தல அஜீத்துக்கே சவால் விடுவாங்க போல... ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டிய பிரபல நடிகை... யார்னு தெரியுதா?

மாளவிகா மோகனன் அமர்ந்திருக்கும் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் குறித்த தகவல்களை அவரது ரசிகர்கள் பலர் தற்போது இணையத்தில் தீவிரமாக தேட தொடங்கியுள்ளனர். இது ராயல் என்பீல்டு நிறுவனத்தில் இருந்து இந்திய சந்தைக்கு புதிதாக வந்துள்ள மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) மோட்டார்சைக்கிள் ஆகும்.

தல அஜீத்துக்கே சவால் விடுவாங்க போல... ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டிய பிரபல நடிகை... யார்னு தெரியுதா?

கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம்தான் ராயல் என்பீல்டு நிறுவனம் மீட்டியோர் 350 பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்தியாவில் இந்த பைக்கின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வரும் நிலையில், ஐரோப்பா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சந்தைகளிலும், ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தல அஜீத்துக்கே சவால் விடுவாங்க போல... ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டிய பிரபல நடிகை... யார்னு தெரியுதா?

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் ஆரம்ப விலை 1.84 லட்ச ரூபாயாக உள்ளது. அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 1.99 லட்ச ரூபாய் ஆகும். இது எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது. ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா என மொத்தம் மூன்று வேரியண்ட்களில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 கிடைக்கும்.

தல அஜீத்துக்கே சவால் விடுவாங்க போல... ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டிய பிரபல நடிகை... யார்னு தெரியுதா?

இதில், மாளவிகா மோகனன் ஓட்டியது சூப்பர்நோவா வேரியண்ட்டை போல் தெரிகிறது. ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கில், 349 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20.4 ஹெச்பி பவர் மற்றும் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. இந்த பைக்கில் ராயல் என்பீல்டு நிறுவனம் 5 ஸ்பீடு கியர்பாக்ஸை வழங்கியுள்ளது.

தல அஜீத்துக்கே சவால் விடுவாங்க போல... ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டிய பிரபல நடிகை... யார்னு தெரியுதா?

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் முக்கியமான ஹைலைட்டே ட்ரிப்பர் நேவிகேஷன் வசதிதான். இந்த வசதியை பெற்ற முதல் ராயல் என்பீல்டு பைக் என்ற பெருமை மீட்டியோர் 350க்கு உள்ளது. டர்ன் பை டர்ன் நேவிகேஷனை வாடிக்கையாளர்களுக்கு வழங்க கூடிய இந்த வசதியை ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது தனது மற்ற பைக்குகளிலும் வழங்க தொடங்கியுள்ளது.

தல அஜீத்துக்கே சவால் விடுவாங்க போல... ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டிய பிரபல நடிகை... யார்னு தெரியுதா?

இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் முக்கியமான போட்டியாளராக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 திகழ்கிறது. இதுவும் கூட சந்தைக்கு புதிதாக வந்துள்ள பைக்தான். ஹோண்டாவின் பிரீமியம் பிக்விங் டீலர்ஷிப்கள் வாயிலாக மட்டும், ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Master Actress Malavika Mohanan Rides Royal Enfield Meteor 350 - Viral Pics. Read in Tamil
Story first published: Saturday, April 10, 2021, 20:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X