Just In
- 1 min ago
ஜீப் காம்பஸ் அறிமுகமாகி அதற்குள் 5 வருஷம் ஆயிடுச்சா!! புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!
- 42 min ago
இந்தியாவின் கடைசி போலோ கார் டெலிவரி வழங்கப்பட்டது... சோகத்தில் மூழ்கிய ஃபோக்ஸ்வேகன் நிர்வாகம்!
- 1 hr ago
காலி பால்பாக்கெட்டிற்கு தள்ளுபடி விலையில் பெட்ரோல் / டீசல்... அசத்தும் தொழிலதிபர்...
- 3 hrs ago
விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!
Don't Miss!
- News
தமிழக பொறியியல் கலந்தாய்வு.. கல்லூரிகளில் 7 நாட்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் இடங்கள் காலி
- Sports
சிஎஸ்கே வீரர் அதிரடி.. 9 மாதத்திற்கு பிறகு டி20 விளையாடிய வில்லியம்சன்.. வெஸ்ட் இண்டீஸ்க்கு சோகம்
- Technology
நோ, நோ, தோற்ற இடத்திலேயே ஜெயிப்போம்., இது நல்ல பாடம்: ISRO வின் அடுத்த பிளான்!
- Movies
ரஜினி -ஷாருக் -சிவகார்த்திகேயன் மூணு பேரும் சந்திக்கப் போறாங்க.. எதுக்காக தெரியுமா?
- Finance
தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இது வாங்க சரியான நேரம் தான்!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
டீசல், எலெக்ட்ரிக், பயணிகள், சரக்கு என ரயில் இன்ஜின்களை எப்படி கண்டுபிடிப்பது? இவ்வளவு ஈஸியா ஒரு வழியா?
இந்தியாவில் இயக்கப்படும் ரயில் இன்ஜின்கள் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ரயில் இன்ஜினின் வகை மற்றும் திறன் இன்ஜினிலேயே எழுதப்பட்டிருக்கும் அதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் எனக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கியமான அத்தியாவசியமான போக்குவரத்து வசதியாகும். தினமும் லட்சக்கணக்கான மக்கள் இந்த ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். ரயில் போக்குவரத்து என்பதே ஒரு அதிசயம் தான். இங்குப் பல விஷயங்களில் குறியீடுகளால் குறிப்பிடப்படும். உதாரணமாக ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் ஒரு குறியீடு இருக்கிறது. ஒவ்வொரு ரயிலுக்கும் ஒரு எண் இருக்கிறது.

இது எல்லாம் பொதுவானது தான். ரயிலில் ரெகுலாக பயணிக்கும் நபர்களுக்கு எல்லாம் இது தெரிந்திருக்கும். ஆனால் ரயில் செயல்பாட்டிற்குப் பின்னால் பல குறியீடுகள் இருக்கிறது. பலருக்கு அதை பற்றி தெரியாது. இப்படியாக இந்த பதிவில் நாம் ரயில் இன்ஜின்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் WAP, WDP, WDG, போன்ற குறியீடுகளுக்கு என்ன அர்த்தம் அது ஏன் ரயில் இன்ஜினில் குறிப்பிடப்பட்டுள்ளது? விரிவாகக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவைப் பொருத்தவரை எலெக்ட்ரிக் இன்ஜின், டீசல் இன்ஜின், ஸ்டீம் இன்ஜின்,ஆகிய இன்ஜின்கள் இருக்கிறது. அதில் ஸ்டீம் இன்ஜின் இன்று பெரும்பாலும் பாரம்பரியமான ரயில் தடங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மற்ற இடங்களில் டீசல் அல்லது எலெக்ட்ரிக் இன்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் எலெக்டரிக் இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டாலும் மின் வசதி செய்யப்படாத வழித்தடங்களில் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ரயில் இன்ஜின்களில் எல்லோரும் தெளிவாகக் காணும் படி ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியில் தெளிவாக எழுதப்பட்டிருக்கும். உதாரணமாக WDM3A, WAM5, WAP4 என எழுதப்பட்டிருக்கும் இதற்கு எல்லாம் என்ன அர்த்தம்? இது எதைக் குறிக்கிறது? எனப் பார்க்கப்போகிறோம். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த குறியீடு ரயில் இன்ஜினின் வகைகளைக் குறிக்கிறது.இதை எப்படிப் புரிந்து கொள்வது எனக் காணலாம்

இந்த குறியீட்டின் முதல் எழுத்து எந்த வகை தண்டவாளத்திற்காகப் பயன்படுத்தப்படும் இன்ஜின் என்பதைக் குறிக்கும். இந்தியாவில் நேரோ கேஜ் தண்டவாளம் இருந்தது பின்னர் அது மீட்டர் கேஜாக மாற்றப்பட்டது. பின்னர் அது பிராடு கேஜ் தண்டவாளமாக மாற்றப்பட்டது. தற்போது இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் பிராட கேஜ் தண்டவாளங்கள் தான் இருக்கிறது.

இந்த குறியீட்டில் முதல் எழுத்து இதில் எந்த தன்வாளத்திற்கான இன்ஜின் என்பதைக் குறிக்கிறது. அதன் பட்டியலை கீழே காணலாம்
W- பிராடு (அ) வைடு கேஜ்
Y - மீட்டர் கேஜ்
Z அல்லது N- நேரோ கேஜ்
இன்று இந்தியாவில் நேரோகேஜ்களே இல்லை எனச் சொல்லி விடலாம். மீட்டர்கேஜ் வெகு சில இடங்களில் இருக்கிறது. பெரும்பாலும் பிராடு கேஜ் தண்டவாளங்களாக மாறிவிட்டது.

இரண்டாவது இலக்கத்தைப் பொருத்தவரை எந்த வகையான இன்ஜின் என்பதைக் குறிக்கிறது. உதாரணமாக எந்த எரிபொருள் அல்லது சக்தி இன்ஜின் இயங்குகிறது என்பதைக் குறிக்கிறது. இரண்டாவது இலக்கத்தைக் குறிக்கும் பட்டியலைக் கீழே காணலாம்

D - டீசல் இன்ஜின்
C - DC ஓவர் ஹெட் எலெக்ட்ரிக் இன்ஜின்
A - AC ஓவர் ஹெட் எலெக்ட்ரிக் இன்ஜின்
CA - AC மற்றும் DC ஓவர் ஹெட் என இரண்டிலும் இயங்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் இன்ஜின்
B - பேட்டரி பவரில் இயங்கும் இன்ஜின் (இந்தியாவில் இந்த வகை இன்ஜின் மிக அரிது)

அடுத்தாக மூன்றாவது இலக்கம். இந்த மூன்றாவது இலக்கம் என்பது எந்த பயன்பாட்டிற்காக இந்த இன்ஜின் உருவாக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது. அந்த பயன்பாட்டு வகை பட்டியலைக் கீழே காணலாம்

P - பயணிகள் ரயில் பயன்பாட்டிற்கான இன்ஜின்
G - சரக்கு ரயில் பயன்பாட்டிற்கான இன்ஜின்
M - சரக்கு மற்றும் பயணிகள் என இரண்டின் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படும் இன்ஜின்
S - சன்டிங் இன்ஜின் (ரயில் ஷெட்களில் மற்ற பெட்டிகளை இழுத்து வரக் கொண்டு செல்ல பயன்படுத்தப்படுவது இன்று பயன்பாட்டில் இல்லை)
U - தனியாக இன்ஜின் என இல்லாமல் நேரடியாக எலெக்டரிக் பவரை வைத்து ரயிலை இயக்கும் திறன் கொண்டவை (Multiple Unit)
R - தனியாக இன்ஜின் இல்லாமல் நேரடியாக எலெக்டரிக்கில் இயங்கும் அதே நேரத்தில் ரயில் பெட்டிகளுடனே இணைக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும் (Rail Car)

அடுத்தாக 4 மற்றும் 5வது இலக்கம் இன்ஜினின் திறனை குறிப்பிடுவதாகும். 4வது இலக்கம் நிச்சயமாக எண்ணில் தான் இருக்கும் இதுவும்3 என்று தான் துவங்கும். இதற்கு அர்த்தம் எத்தனை ஆயிரம் குதிரைத்திறன் கொண்ட இன்ஜின் என்பது குறிப்பது. உதாரணமாக 3 என குறிப்பிடப்பட்டிருந்தால் அது 3000-4000 வரையிலான குதிரை திறனைக் கொண்டது. 5 என குறிப்பிடப்பட்டிருந்தால் அது 5000-6000 குதிரை திறனைக் கொண்டது.

5வது இலக்கம் கட்டாயமாக இருக்க வேண்டிய இலக்கம் இல்லை. இது தேவைப்படும் இன்ஜின்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும். இதுவும் இன்ஜினின் குதிரை திறனைக் குறிப்பிடுவது தான். மிகச்சரியாக இதைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படும்.

இதில் A என்பது 100 குதிரை திறனைக் குறிக்கும், B என்பது 200 குதிரை திறனை குறிக்கும், C என்பது 300 குதிரை திறனைக் குறிக்கும். 4 மற்றும் 5வது இலக்கத்தைச் சேர்த்து இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக 3A என குறிப்பிடப்பட்டிருந்தால் அதை 3100 குதிரை திறன் கொண்ட இன்ஜின் என்றும் 5C என்றால் 5300 குதிரைத் திறன் கொண்ட இன்ஜின் எனக் கணக்கிடலாம்.

இந்த குதிரை திறன் என்பது டீசலில் இயங்கும் இன்ஜின்களுக்கு தான் அதுவே எலெக்ரிக்கில் இயங்கும் இன்ஜின்களுக்கு 4வது இலக்கம் அதன் சிரீஸை குறிப்பிடுகிறது. எலெக்ட்ரிக் இன்ஜினில் சிரீஸ்கள் அது தயாரிக்கப்பட்ட நிறுவனங்களைப் பொருத்து பிரிக்கப்பட்டது.

இப்பொழுது மொத்தமாகச் சேர்ந்து ஒரு இன்ஜினின் வகையை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் எனப் பார்க்கலாம். உதாரணமாக ஒரு இன்ஜினில் WDM3A என எழுதப்பட்டிருந்தால் அது பிராடு கேஜில் பயன்படுத்தப்படும், டீசலில் இயங்கும், பயணிகள் மற்றும் சரக்கு என இரண்டிற்கும் பயன்படும் இன்ஜின் இது 3100 குதிரை திறனை வெளிப்படுத்தும் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதுவே WAP7 என இருந்தால் அதை நாம் பிராடு கேஜ்ஜில் இயங்கும் ஏசி எலெக்டரிக் இன்ஜின், பயணிகள் ரயிலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் சிரீஸ் 7 எனப் புரிந்து கொள்ள வேண்டும். இது இந்திய ரயில்வேயில் இயங்கும் அனைத்து வகையான இன்ஜின்களிலும் எழுதப்பட்டிருக்கும். ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் இந்த குறியீட்டு எண் எழுதப்பட்டிருக்கும். அதை வைத்து அது என்ன வகையான இன்ஜின் எனத் தெரிந்து கொள்ள முடியும்.
-
இன்னும் பத்தே நாள்தான் இருக்கு... எல்லாருக்கும் பிடிச்ச மாருதி ஆல்டோ கே10 திரும்ப வருது... டாடா கார் தாங்குமா?
-
ஹோண்டா சிபி350ஆர்எஸ் செம்ம போட்டியா இருக்கும்... ராயல் என்பீல்டு ஹண்டர் 350 சந்தையில் தாக்குப்பிடிக்குமா?
-
வெளியானது அதிரடி உத்தரவு... இனி வண்டிகளை நிப்பாட்டி காசு வசூல் பண்ண முடியாது... போலீசுக்கு செக் வெச்சுட்டாங்க!