இந்தியாவின் தங்க மனிதர்கள் இவர்கள் தான்: ஏன் இவர்களை தங்க மனிதர்கள் என்று கூறுகிறார்கள்...?

இந்தியாவின் தங்க மனிதர்கள் என்று மஹராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களை அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள். அவர்களை ஏன் அவ்வாறு மக்கள் அழைக்கின்றனர் என்ற தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவின் தங்க மனிதர்கள் இவர்கள் தான்: ஏன் இவர்களை தங்க மனிதர்கள் என்று கூறகிறார்கள்...?

உலகிலேயே தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இதற்கு காரணம் இந்தியர்கள் தங்க ஆபரணங்கள் மீது கொண்டுள்ள தீராத மோகமே காரணம். அந்தவகையில், இந்தியாவில் உள்ள சாதாரண மனிதர்களிடத்திலும் தங்கத்தின் புழக்கம் அதிகமாக காணப்படுகிறது.

ஐஎம்எப் என்று அழைக்கப்படும் சர்வதேச நிதி நிறுவனம் மற்றும் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்சு உள்ளிட்ட நாடுகளிடம் தங்கம் இருப்பு அதிகமாக இருக்கிறது. இதையடுத்து, தங்கத்தை அதிகம் கையிருப்பு வைத்திருக்கும் நாடாக இந்தியா இருக்கிறது.

இந்தியாவின் தங்க மனிதர்கள் இவர்கள் தான்: ஏன் இவர்களை தங்க மனிதர்கள் என்று கூறகிறார்கள்...?

ஏழை முதல் பணக்காரர்கள் வரை தங்களது பணத்தை தங்கத்தின்மீது முதலீடு செய்கிறார்கள். இதில், பெரும்பாலான ஏழை மக்கள், தங்களுடைய பணி ஓய்வு மற்றும் எதிர்கால சேமிப்பிற்காக தங்கத்தின்மீது பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். ஆனால், செல்வந்தர்கள் அவ்வாறு இல்லாமல், தங்களது பணத்தை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கிலும், பிற்காலத்தில் தொழில் மீது பணத்தைச் செலுத்தவும் இவ்வாறு முதலீட்டில் ஈடுபடுகின்றனர்.

இந்தியாவின் தங்க மனிதர்கள் இவர்கள் தான்: ஏன் இவர்களை தங்க மனிதர்கள் என்று கூறகிறார்கள்...?

இந்த நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம், புனே-வில் உள்ள இரு இளைஞர்களை அப்பகுதி மக்கள், தங்க மனிதர்கள் என அழைத்து வருகிறார்கள். அவ்வாறு, புனேவின் சின்ச்வாட்-இல் உள்ள பிம்ப்ரி என்ற பகுதியில் வசித்து வரும் சன்னி வாக்சாவு மற்றும் சச்சின் ஆகிய இருவரைத் தான் இவ்வாறு மக்கள் அழைக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் தங்கத்தின் மீது வைத்துள்ள தீராத காதல்.

இந்தியாவின் தங்க மனிதர்கள் இவர்கள் தான்: ஏன் இவர்களை தங்க மனிதர்கள் என்று கூறகிறார்கள்...?

சன்னி தங்கத்தின் மீது வைத்துள்ள காதல் காரணமாக, கழுத்து நிறைய தங்க சங்கிலியையும், தங்க கடிகாரத்தையும் அணிந்து அந்த நகரத்தை வளம் வருகிறார். மேலும், அவர் பயன்படுத்தும் விலையுயரந்த சொகுசு கார்களுக்கு தங்க விராப்பர்களை ஓட்டியுள்ளார். இதனால்தான் அவர்களை அப்பகுதி மக்கள் 'கோல்டன் காய்ஸ்' என்ற புனைப் பெயரை வைத்துள்ளனர். இதுதான், அவர்களின் கார் சாலையில் செல்லும்போது தனியாக தெரியப்படுத்தி மிகவும் பிரபலமாக்கியது. ஆனால், இவர்களின் கார்கள் மீது பூசப்பட்டிருப்பதாக கோல்டன் ஸ்டிக்கர் மட்டும் தான், அவை தங்க பிளேட்டுகள் அல்ல.

இந்தியாவின் தங்க மனிதர்கள் இவர்கள் தான்: ஏன் இவர்களை தங்க மனிதர்கள் என்று கூறகிறார்கள்...?

இதேபோன்று, சச்சினும், தனது விலையுயர்ந்த கார்கள் மீது தங்க விராப்பர்களை ஒட்டியுள்ளார். இவர்கள் இருவரும் நண்பர்கள் எனக் கூறப்படுகிறது. மேலும், சச்சின் சினிமாத் திரைப்படங்களுக்கு பைனான்ஸ் விடும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சன்னியும் மும்பையின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

இந்தியாவின் தங்க மனிதர்கள் இவர்கள் தான்: ஏன் இவர்களை தங்க மனிதர்கள் என்று கூறகிறார்கள்...?

இவர்கள் இருவரும் தங்களின் விலையுயர்ந்த ஜாகுவார் மற்றும் ஆடி கார்கள் மீது தங்க நிறத்தில் இருக்கும் கோல்டன் விராப்பர்களை, பெரும் பொருட் செலவில் ஒட்டியுள்ளனர். மேலும், இவர்கள் சாலையில் செல்லும்போது மற்ற வாகனங்கள், தங்கள் வாகனங்கள்மீது மோதி, தங்க விராப்பரை சேதப்படுத்தக் கூடாது என்பதற்காக, எப்போதும் கூடுதல் கார்களுடன் கான்வாயாக செல்லுகின்றனர். அதவாது, இவர்கள் கோல்டன் விராப்பர் கார்கள் செல்லும்போது, முன் மற்றும் பின் பக்கங்களில் அவர்களின் மற்ற சில கார்களை அழைத்துச் செல்லுகின்றனர்.

இந்தியாவின் தங்க மனிதர்கள் இவர்கள் தான்: ஏன் இவர்களை தங்க மனிதர்கள் என்று கூறகிறார்கள்...?

ஆடி க்யூ7

இவர்களின் கேரேஜில் இருக்கும் லேட்டஸ்ட் கோல்ட் விராப் கார்களில் ஆடி க்யூ7 ஒன்றாக உள்ளது. இந்க மாடல் காரை ஆடி நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு அறிமுகம் செய்தது. ஜெர்மன் பிராண்டில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடலில் ஆடியின் க்யூ7 காரும் ஒன்று. இது, 3.0 லிட்டர் டீசல் எஞ்ஜினைக் கொண்டு இயங்குகிறது. மேலும், இந்த காரில் 7 ஸ்பீடு ஆடோமேடிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் தங்க மனிதர்கள் இவர்கள் தான்: ஏன் இவர்களை தங்க மனிதர்கள் என்று கூறகிறார்கள்...?

ஜாகுவார் எக்ஸ்எப்

ஆடியைத் தொடர்ந்து ஜாகுவார் எக்ஸ்எப் காருக்கு இவர்கள் தங்க விராப்பர் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர். 50 லட்சம் மதிப்புள்ள இந்த செடான் ரக காரை கடந்த 2017ம் ஆண்டு தான் சன்னி வாங்கியுள்ளார். இந்த காரின் வீல் உட்பட அனைத்து பாகங்களிலும் தங்க விராப்பர் ஒட்டப்பட்டுள்ளது. ஜாகுவாரின் எக்ஸ்எப் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜினைக் கொண்டதாக விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால், இவர்கள் வைத்திருக்கும் எந்த ரகம் என்பது முழுமையாக தெரியவில்லை.

இந்தியாவின் தங்க மனிதர்கள் இவர்கள் தான்: ஏன் இவர்களை தங்க மனிதர்கள் என்று கூறகிறார்கள்...?

மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வருகிறது. இந்த கார் கடந்த 2012ம் ஆண்டிலிருந்து இந்திய கார் சந்தையில் விற்பனையாகி வருகிறது. இந்த மாடல் காருக்கும் கோல்டன் விராப்பர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த காரை மீட்டிங் மற்றும் சில நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே சன்னி பயன்படுத்தி வருகிறார்.

இந்தியாவின் தங்க மனிதர்கள் இவர்கள் தான்: ஏன் இவர்களை தங்க மனிதர்கள் என்று கூறகிறார்கள்...?

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக்

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான எஸ்யூவி மாடல்களில் ஒன்று லேண்ட் ரோவரின் ரேஞ்ச் ரோவர் வோக். இந்த காரை பல முக்கிய பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த காருக்கும் இவர்கள் தங்க விராப்பரைப் பூசி பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் பயன்படுத்தும் இந்த எல்332 லேண்ட் காரானது எஸ்யூவின் முந்தைய ஜெனரேஷன் மாடலாகும்.

இந்தியாவின் தங்க மனிதர்கள் இவர்கள் தான்: ஏன் இவர்களை தங்க மனிதர்கள் என்று கூறகிறார்கள்...?

ஆடி ஏ3

இந்திய சந்தைக்குள் நுழைந்த ஜெர்மன் பிராண்டின் முதல் செடான் ரக காராக இது இருக்கிறது. மேலும், இந்தியாவில் பேஸ்-லிஃப்ட் மடாலில் வந்த கார் என்பதற்காக சன்னி இதனை வாங்கியுள்ளார். மேலும், இந்த காருக்கும் தங்க விராப்பர் ஒட்டைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவின் தங்க மனிதர்கள் இவர்கள் தான்: ஏன் இவர்களை தங்க மனிதர்கள் என்று கூறகிறார்கள்...?

இவ்வாறு இவர்கள் இருவரும் வாங்கும் ஒவ்வொரு காருக்கும் தங்க விராப்பரை ஒட்டி பயன்படுத்தி வருகின்றனர். இதனால், இவர்கள் கார் சாலையில் செல்லும்போது தனித்துவமாக தெரிவது மட்டுமின்றி, கோல்டன் காய்ஸ் செல்கிறார்கள் என்பதை மக்கள் எளிதாக தெரிந்துக்கொள்கிறார்கள். இதுவே இந்த நண்பர்கள் இருவரும் பிரபலமாக காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Meet India's 'Gold Man' and his 'Gold Cars'. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X