முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?

முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி உச்சகட்ட பாதுகாப்பின் கீழ் இருந்து வருகிறார். அவர் பயணிக்கும் காருக்கு முன்பும், பின்பும் ஏராளமான கார்கள் பாதுகாப்பிற்கு அணிவகுத்து வரும். முகேஷ் அம்பானி பொது சாலைகளில் பயணம் செய்யும்போது, அவரது பிரம்மாண்ட கான்வாயை நாம் பலமுறை பார்த்துள்ளோம்.

முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?

முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணிகளில், லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், பிஎம்டபிள்யூ எக்ஸ்5, ஃபோர்டு எண்டேவியர் மற்றும் டொயோட்டா பார்ச்சூனர் உள்ளிட்ட பல்வேறு கார்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் ஹோண்டா சிஆர்-வி போன்ற கார்களை கூட முகேஷ் அம்பானியின் கான்வாயில் பார்க்க முடிந்துள்ளது.

முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?

இந்த சூழலில், இன்ஸ்டாகிராமில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவின் மூலம், முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பிரிவினர், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி (Mercedes-Benz G63 AMG) கார்களை புதிதாக சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த வீடியோவில் மொத்தம் நான்கு மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி கார்களை காண முடிகிறது.

முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?

இந்திய சந்தையில் இவை ஒவ்வொன்றின் விலையும் சுமார் 3 கோடி ரூபாய் (ஆன் ரோடு) ஆகும். எனவே முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள விலை உயர்ந்த கார்களில் ஒன்றாக மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி கார்களை குறிப்பிடலாம். இந்த வீடியோவின் மற்றொரு ஹைலைட் டொயோட்டா வெல்ஃபயர்.

முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?

ஆம், டொயோட்டா வெல்ஃபயர் காரையும் இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. இதில், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரில், 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு வி8 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 576 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது. இந்த இன்ஜினுடன் 9 ஸ்பீடு ஏஎம்ஜி ஸ்பீடு-ஷிப்ட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டி விடும் திறனை இந்த கார் பெற்றுள்ளது. முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணிகளுக்கு தற்போது புதிய கார்கள் வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள சூழலில், முகேஷ் அம்பானி குடும்பத்தினர் மீண்டும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?

முகேஷ் அம்பானி குடும்பத்தினரிடம் ஏற்கனவே ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் உள்ளது. இது எஸ்யூவி ரக கார் ஆகும். இந்த சூழலில் இரண்டாவதாக ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை முகேஷ் அம்பானி குடும்பத்தினர் சமீபத்தில் புதிதாக வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பை நகரில் இருக்கும் முகேஷ் அம்பானியின் வீட்டில் இந்த கார் நிற்கும் வீடியோ சமீபத்தில் வெளியானது.

முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளிவந்துள்ள முதல் எஸ்யூவி கார் கல்லினன்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உலகின் பல்வேறு நாடுகளிலும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில், முகேஷ் அம்பானி மட்டுமல்லாது இன்னும் ஒரு சிலரிடமும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mercedes-Benz G63 AMGs Added To Mukesh Ambani’s Security Fleet - Here Are All the Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X