பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து டயர்களா!! பிரபல டயர் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மூவ்...

முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான மிச்செலின் டயர்கள் நிறுவனம் டயர்களை தயாரிப்பதற்கு பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகளை பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து டயர்களா!! பிரபல டயர் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மூவ்...

கடந்த 2021 பிப்ரவரி மாதத்தில் மிச்செலின் நிறுவனம் வருகிற 2030ஆம் ஆண்டிற்குள் டயர்கள் தயாரிப்பிற்கு மொத்த மூல பொருட்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்திருந்தது.

பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து டயர்களா!! பிரபல டயர் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மூவ்...

மேலும் அடுத்த இருபது வருடங்களில், அதாவது 2050க்குள் இந்த 40 சதவீதத்தை 100 சதவீதமாக மாற்றவும் திட்டமிட்டிருப்பதாக கூறியிருந்தது. இதற்காக மிச்செலின் டயர்கள் நிறுவனம், கார்பியோஸ் என்ற பிரெஞ்சு நாட்டை சேர்ந்த உயிர் வேதியியல் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து டயர்களா!! பிரபல டயர் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மூவ்...

கார்பியோஸ், பிளாஸ்டிக்கை நொதி மறுசுழற்சி செயல்முறையின் மூலம் டி-பாலிமரைஸ் செய்யக்கூடிய தொழிற்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இந்த செயல்முறை, பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி டயர்களை உருவாக்க மிச்செலி நிறுவனத்திற்கு உதவியாக இருக்கும்.

பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து டயர்களா!! பிரபல டயர் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மூவ்...

பிளாஸ்டிக் கழிவுகளிலேயே குறிப்பாக, ஒரு முறை மட்டுமே பயன்படக்கூடிய பாலிஎதிலீன் டெரெப்தாலேட் பிளாஸ்டிக்குகள் மிச்செலின் டயர்களின் மூலப்பொருளாக பயன்படுத்தப்பட உள்ளன. இந்த டி-பாலிமரைஸ் செயல்முறையில் 100 சதவீத பிளாஸ்டிக் கழிவுகளும் பயன்படக்கூடியவை.

பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து டயர்களா!! பிரபல டயர் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மூவ்...

இவை அதிக உறுதி தன்மை கொண்ட இழைகளாக மாற்றப்பட்டு டயர்கள் செய்ய பயன்படுத்தப்படும். உறுதியான இழைகள் என்பதால், இவை எளிதில் உடைப்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.

பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து டயர்களா!! பிரபல டயர் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மூவ்...

இதுகுறித்து மிச்செலினின் பாலிமர் ஆராய்ச்சி பிரிவின் இயக்குனர் நிக்கோலஸ் சீபோத் கூறுகையில், டயர்கள் தயாரிப்பிற்காக மறுசுழற்சி செய்யப்பட்ட தொழிற்நுட்ப இழைகளை முதன்முதலில் தயாரித்து பரிசோதித்ததில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து டயர்களா!! பிரபல டயர் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மூவ்...

இந்த வலுவூட்டப்பட்ட இழைகள் வண்ண பாட்டில்களில் இருந்து எடுக்கப்பட்டு, எங்களது கூட்டணி நிறுவனமான கார்பியோஸின் நொதி தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி மறுசுழற்சி செய்யப்பட்டன என கூறினார்.

பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து டயர்களா!! பிரபல டயர் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மூவ்...

800,000 டன் பிளாஸ்டிக் இழைகளை பயன்படுத்தி ஒவ்வொரு வருடமும் சுமார் 1.6 பில்லியன் கார் டயர்கள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. டயர்களை உருவாக்க கிட்டத்தட்ட 3 பில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்ய முடியும் என மிச்செலின் தெரிவித்துள்ளது.

Most Read Articles

English summary
Michelin To Use Plastic Bottles To Manufacture Tyres.
Story first published: Thursday, May 13, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X