பஞ்சராகாது, காற்றடிக்க தேவையில்லை: எதிர்காலத்தை ஆள போகும் டயர் இதுதான்...!

மிச்செலின் நிறுவனம், பஞ்சராகாத, காற்று நிரப்ப தேவையில்லாத, அப்டிஸ் என்ற புதிய ரக டயரை தயாரித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பஞ்சராகாது, காற்றடிக்க தேவையில்லை: எதிர்காலத்தை ஆள போகும் டயர் இதுதான்...!

பிரான்ஸ் நாட்டை மையமாக் கொண்டு இயங்கும் மிச்செலின் நிறுவனம், வாகனங்களுக்கு தேவையான டயர்களைத் தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. இதனை உறுதிபடுத்தும் வகையில், தற்போது இந்த நிறுவனம், பஞ்சராகாத, காற்று நிரப்ப தேவையில்லாத டயர் ஒன்றை கண்டுபிடித்துள்ளது.

பஞ்சராகாது, காற்றடிக்க தேவையில்லை: எதிர்காலத்தை ஆள போகும் டயர் இதுதான்...!

அப்டிஸ் (Uptis) என பெயரிடப்பட்டுள்ள இந்த டயரை ஜெனரல் மோட்டார்ஸ் (GM) நிறுவனத்துடன் இணைந்து, மிச்செலின் நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது. இந்த டயர் பஞ்சராகாத சிஸ்டத்தை (Uptis - Unique Punctureproof Tire System) கொண்டிருப்பதால், இதற்கு அப்டிஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பஞ்சராகாது, காற்றடிக்க தேவையில்லை: எதிர்காலத்தை ஆள போகும் டயர் இதுதான்...!

இந்த டயருக்கு காற்று நிரப்ப தேவையில்லாத காரணத்தால், இது பராமரிப்பு செலவில்லாத டயாராகவும் பார்க்கப்படுகிறது. தற்போது, மிச்செலின் நிறுவனம் இந்த அப்டிஸ் டயரை, முன் மாதிரி (prototype) மாடலாக அறிமுகம் செய்துள்ளது.

பஞ்சராகாது, காற்றடிக்க தேவையில்லை: எதிர்காலத்தை ஆள போகும் டயர் இதுதான்...!

இதுபோன்ற காற்று நிரப்ப தேவையில்லாத டயரை, மிச்செலின் நிறுவனம் கடந்த 2005ம் ஆண்டே ட்வீல் என்ற பெயரில் அறிமுகம் செய்தது. இதனைத்தான், தற்போது பலு தூக்கும் இயந்திரம், புல் வெட்டும் இயந்திரம் உள்ளிட்ட வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பஞ்சராகாது, காற்றடிக்க தேவையில்லை: எதிர்காலத்தை ஆள போகும் டயர் இதுதான்...!

இந்த நிலையில்தான், கார்களுக்கும் பயன்படுத்தும் வகையிலான காற்றில்லா டயரை மிச்செலின் நிறுவனம் ப்ரோட்டோடைப்பில் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த டயரில், வீல்களில் இருப்பதைப் போன்ற ஸ்போக்ஸ் அமைப்பு உள்ளது. இது வளைந்து, நெளியும் தன்மைக் கொண்டதாக இருக்கின்றது. இது கரடு, முரடான சாலையில் செல்லும்போது ஸ்மூத்தாக செல்ல ஏதுவாக அமையும்.

பஞ்சராகாது, காற்றடிக்க தேவையில்லை: எதிர்காலத்தை ஆள போகும் டயர் இதுதான்...!

இதன் வளைவு, நெளிவிற்கேற்ப டயரை, ரப்பர் மெட்டீரியரால் உருவாக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இது வீல் அமைப்பைக் கொண்ட டயராக இருக்கின்றது. ஆகையால், இந்த டயருக்கு பிரத்யேக வீல் வாங்க வேண்டிய அவசியமி இல்லை. இந்த வீலின் ஸ்போக்ஸ்கள் அலுமினியத்தாலும், பைபர் கிளாஸாலும் மிக உறுதியானதாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த டயர் கிழிந்து விடுமோ என்ற அச்சம் தேவையில்லை.

பஞ்சராகாது, காற்றடிக்க தேவையில்லை: எதிர்காலத்தை ஆள போகும் டயர் இதுதான்...!

மிச்செலின் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய டயரை, ஜிஎம் நிறுவனத்தின் எதிர்கால கார்களில் பயன்படுத்தப்பட உள்ளன. அவ்வாறு, வரும் 2024ம் ஆண்டில் வெளிவரும் ஜிஎம் நிறுவனத்தின் வாகனங்களில், அப்டிஸ் டயர் பொருத்தப்பட உள்ளன. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

பஞ்சராகாது, காற்றடிக்க தேவையில்லை: எதிர்காலத்தை ஆள போகும் டயர் இதுதான்...!

தற்போது, இந்த அப்டிஸ் ப்ரோட்டோ டைப் டயரினை செவர்லே எலக்ட்ரிக் காரில் சோதனை முறையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில், தற்போது அப்டிஸ் டயரின் பாதுகாப்பு குறித்த பல பரீட்சை தற்போது மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த பரிசோதனையைத் தொடர்ந்து, அப்டிஸ் டயர்களை மற்ற வாகனங்களில் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட உள்ளன.

பஞ்சராகாது, காற்றடிக்க தேவையில்லை: எதிர்காலத்தை ஆள போகும் டயர் இதுதான்...!

அப்டிஸ் ப்ரோட்டோடைப் டயர் அனைத்து பயணிகளின் வானங்களிலும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த அமைப்பு தானியங்கி மற்றும் அனைத்து எலக்ட்ரிக் கார்களிலும் பயன்படுத்தும் வகையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

பஞ்சராகாது, காற்றடிக்க தேவையில்லை: எதிர்காலத்தை ஆள போகும் டயர் இதுதான்...!

வாகனத்தின் இயக்க செயல்பாட்டில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது, டயர்கள்தான் இவற்றை பராமரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. அவ்வாறு, அவசரமாக கிளம்பும்போதுதான், டயர் பஞ்சர், காற்று குறைவாக இருப்பது, உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் கிளம்பும்.

பஞ்சராகாது, காற்றடிக்க தேவையில்லை: எதிர்காலத்தை ஆள போகும் டயர் இதுதான்...!

மீறி குறைவான காற்றுள்ள வாகனத்தை, அவசரத்திற்கு எடுத்துச் சென்றால் அப்போதுதான் பாதி வழியிலேயே பஞ்சர் ஆகிவிடும். இதுபோன்ற சூழல்களில் இருந்து விடுதலை கொடுக்கும் விதமாக மிச்செலின், அப்டிஸ் டயரை கண்டுபிடித்துள்ளது.

பஞ்சராகாது, காற்றடிக்க தேவையில்லை: எதிர்காலத்தை ஆள போகும் டயர் இதுதான்...!

இது கூடிய விரைவில் உலகில் உள்ள அனைத்த சாலைகளையும் கலக்கவதற்காக களமிறங்க இருக்கின்றது. மேலும், இது 2024 ஆண்டிற்கு பின்னர் அனைத்து வாகனங்களிலும் பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

5-12 படங்கள் எடுத்துகாட்டிற்காக மட்டும்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Michelin Unique Puncture Proof Tire System. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X