போர் முனையில் பயன்படுத்தப்படும் ராணுவ வாகனம் திடீரென சாதாரண வீதிகளில் வலம் வந்ததால் பரபரப்பு..

போர் முனைகளில் பயன்படுத்தப்படும் அதிநவீன ராணுவ வாகனம், திடீரென சாதாரண வீதிகளில் வலம் வந்ததால், பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Arun

இந்தியாவில் என்எஸ்ஜி எனப்படும் தேசிய பாதுகாப்பு படை (NSG-National Security Guards) மற்றும் சிஐஎஸ்எப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் (CISF-Central Industrial Security Force), ரெனால்ட் ஷெர்பா லைட் கவச வாகனத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

போர் முனையில் பயன்படுத்தப்படும் ராணுவ வாகனம் திடீரென சாதாரண வீதிகளில் வலம் வந்ததால் பரபரப்பு..

புல்லட் புரூப் ராணுவ வாகனமான ரெனால்ட் ஷெர்பா லைட், 10 கிலோ ஆர்டிஎக்ஸ் வகை குண்டு வெடிப்பை கூட தாங்கும் வல்லமை வாய்ந்தது. ரெனால்ட் டிரக்ஸ் டிபன்ஸ் (Renault Trucks Defense) நிறுவனம், ஷெர்பா லைட் ராணுவ வாகனத்தை உற்பத்தி செய்து வருகிறது.

போர் முனையில் பயன்படுத்தப்படும் ராணுவ வாகனம் திடீரென சாதாரண வீதிகளில் வலம் வந்ததால் பரபரப்பு..

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் கார் போன்ற பயணிகள் வாகனங்களை மட்டுமே தயார் செய்கிறது என பலர் நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் ரெனால்ட் டிரக்ஸ் டிபன்ஸ் என்ற பெயரில், பல்வேறு நாட்டின் பாதுகாப்பு படைகளுக்கு, ராணுவ வாகனங்களையும் கூட ரெனால்ட் தயாரித்து வழங்கி வருகிறது.

போர் முனையில் பயன்படுத்தப்படும் ராணுவ வாகனம் திடீரென சாதாரண வீதிகளில் வலம் வந்ததால் பரபரப்பு..

ரெனால்ட் ஷெர்பா லைட் ராணுவ வாகனம், போர் முனைகளில்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர அசாதாரண சூழ்நிலைகளில் மேற்கொள்ளப்படும் ரோந்து பணிகளுக்கும் கூட ரெனால்ட் ஷெர்பா லைட் ராணுவ வாகனத்தை வீரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

போர் முனையில் பயன்படுத்தப்படும் ராணுவ வாகனம் திடீரென சாதாரண வீதிகளில் வலம் வந்ததால் பரபரப்பு..

இந்தியாவில் என்எஸ்ஜி கமாண்டோக்கள் மட்டுமல்லாது, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களும் ரெனால்ட் ஷெர்பா லைட் ராணுவ வாகனத்தை பயன்படுத்துகின்றனர். காஷ்மீர் மாநிலத்தில் அவ்வப்போது ஏற்படும் கிளர்ச்சிகளை கட்டுப்படுத்தும் பணியிலும் இந்த வாகனம் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

போர் முனையில் பயன்படுத்தப்படும் ராணுவ வாகனம் திடீரென சாதாரண வீதிகளில் வலம் வந்ததால் பரபரப்பு..

பார்க்கவே கம்பீரமாக தோற்றமளிக்கும் ரெனால்ட் ஷெர்பா லைட் ராணுவ வாகனம், டெல்லியில் உள்ள விமான நிலையத்திலும் கூட பாதுகாப்பிற்காக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டே, ஒரே ஒரு ரெனால்ட் ஷெர்பா லைட் ராணுவ வாகனம் மட்டும் அங்கு நிலை நிறுத்தப்பட்டு விட்டது.

போர் முனையில் பயன்படுத்தப்படும் ராணுவ வாகனம் திடீரென சாதாரண வீதிகளில் வலம் வந்ததால் பரபரப்பு..

ரெனால்ட் ஷெர்பா ராணுவ வாகனத்தில், 5.56 / 7.62 / 12.7 எம்எம் வெப்பன் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ராணுவ வீரர்களால் நேரடியாக மட்டுமின்றி, ரிமோட் மூலமாகவும் இதனை இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். இந்த வாகனத்தில், 4-5 ராணுவ வீரர்கள் பயணம் செய்ய முடியும்.

போர் முனையில் பயன்படுத்தப்படும் ராணுவ வாகனம் திடீரென சாதாரண வீதிகளில் வலம் வந்ததால் பரபரப்பு..

இது மட்டுமல்லாமல், ரெனால்ட் ஷெர்பா ராணுவ வாகனத்திற்கு வெளியே அதிசெயல்திறன் வாய்ந்த 3 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. உள்ளே இருக்கும் ராணுவ வீரர்கள், சுற்றுப்புற பகுதிகளின் 360 டிகிரி வியூவை, இந்த கேமராக்கள் மூலமாக தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

போர் முனையில் பயன்படுத்தப்படும் ராணுவ வாகனம் திடீரென சாதாரண வீதிகளில் வலம் வந்ததால் பரபரப்பு..

ரெனால்ட் ஷெர்பா ராணுவ வாகனத்தில், 4.76 லிட்டர், 4 சிலிண்டர், டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின், அதிகபட்சமாக 215 பிஎச்பி பவர் மற்றும் 800 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.

போர் முனையில் பயன்படுத்தப்படும் ராணுவ வாகனம் திடீரென சாதாரண வீதிகளில் வலம் வந்ததால் பரபரப்பு..

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 110 கிலோ மீட்டர்கள். இதன் எரிபொருள் டேங்கை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 1,000 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும். ரெனால்ட் ஷெர்பா ராணுவ வாகனத்தின் மொத்த எடை 11 டன்கள். அதாவது சுமார் 11 ஆயிரம் கிலோ.

போர் முனையில் பயன்படுத்தப்படும் ராணுவ வாகனம் திடீரென சாதாரண வீதிகளில் வலம் வந்ததால் பரபரப்பு..

4×4 சிஸ்டம், ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ், ஏர் கண்டிஷனிங் உள்ளிட்ட வசதிகளும், ரெனால்ட் ஷெர்பா லைட் ராணுவ வாகனத்தில் இடம்பெற்றுள்ளன. ஹைட்ராலிக் பவர் ஸ்டியரிங், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் ஏபிஎஸ் (ABS) வசதிகளையும், ரெனால்ட் ஷெர்பா ராணுவ வாகனம் பெற்றுள்ளது.

போர் முனையில் பயன்படுத்தப்படும் ராணுவ வாகனம் திடீரென சாதாரண வீதிகளில் வலம் வந்ததால் பரபரப்பு..

இந்த சூழலில், என்எஸ்ஜி கமாண்டோக்கள் பயன்படுத்தும் ரெனால்ட் ஷெர்பா லைட் Armoured Personal Carrier (APC) வாகனம், மும்பை வீதிகளில் திடீரென வலம் வந்ததை சமீபத்தில் பார்க்க முடிந்தது. இதன் முன்பாக வேறு வாகனங்கள் எல்லாம் மிக மிக சிறியதாகதான் காட்சியளிக்கும்.

போர் முனையில் பயன்படுத்தப்படும் ராணுவ வாகனம் திடீரென சாதாரண வீதிகளில் வலம் வந்ததால் பரபரப்பு..

கார்களும், டூவீலர்களும் நிரம்பிய சாலைகளையே பார்த்து பார்த்து பழகி போன பொதுமக்கள், சாதாரண வீதிகளில் திடீரென வலம் வந்த ராணுவ வாகனத்தால், பரபரப்படைந்தனர். ஆனால் இதற்கான உறுதியான காரணம் எதுவும் வெளியாகவில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Military Vehicle Caught on Public Road. Read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X