Just In
- 10 min ago
அப்படிபோடு... மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி முதல் லாட் இந்தியாவில் விற்று தீர்ந்தது!
- 1 hr ago
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- 2 hrs ago
ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?
- 2 hrs ago
2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!
Don't Miss!
- Finance
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிக நிறுத்தம்.. எண்ணெய் நிறுவனங்கள் திடீர் முடிவு..!
- News
"ரொம்ப கஷ்டப்பட்டோம்.." கொரோனா தடுப்பூசி பணியை துவங்கியபோது.. நாக்கு தழுதழுத்து, கண்கள் பனித்த மோடி!
- Movies
அடடா.. வனிதா வீட்டுல திரும்பவும் விசேஷமாம்.. போட்டோவுடன் ஹேப்பி போஸ்ட்!
- Lifestyle
உங்க மனைவிகிட்ட இந்த வித்தியாசங்கள் தெரிஞ்சா அவங்க உங்கள சந்தேகப்பட தொடங்கிட்டாங்கனு அர்த்தமாம்...!
- Sports
அவ்ளோ ஈஸியா விட்டுற மாட்டோம்.. ஆஸி.வை சுருட்டிய 2 தமிழக வீரர்கள்!
- Education
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
3 லிட்டருக்கு மேல் ஒரு துளிகூட பெட்ரோல் வாங்க முடியாது..! இந்த அவலநிலை எங்கு தெரியுமா?..
மூன்று லிட்டருக்கு மேல் ஒரு துளிகூட பெட்ரோல் வழங்கக்கூடாது என திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது. இது எந்த மாநிலத்தில், ஏன் இந்த சூழ்நிலை என்பது பற்றிய விரிவான தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை விண்ணைத் தொடுமளவிற்கு உயர்ந்து வருகின்றது. ஏற்கனவே கொரோனா வைரசால் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வரும் மக்களுக்கு கூடுதல் சுமையை வழங்கும் வகையில் நாளுக்கு ஒரு புதிய உச்சத்தை அது எட்டி வருகின்றது.

இதனால் அத்தியாவசிய விலை உயர்வதுடன், தற்போது கணிசமாக பயன்பாட்டில் இருக்கும் தனியார் வாகனங்களின் வாடகை கட்டணத்தையும் உயர செய்கின்றது. இவ்வாறு எரிபொருள் சார்ந்து சர்ச்சையான விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கையில் எரிபொருள் சேமித்து வைக்கும் செயலுக்கு இந்தியாவின் குறிப்பிட்ட மாநில அரசு ஒன்று தடை விதித்துள்ளது.

முதலமைச்சர் சோரம்தாங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணி கட்சி ஆளுகை செய்து வரும் மிசோரம் மாநிலத்தின்தான் இந்த அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மிசோரம் அரசின் இந்த அதிரடி அறிவிப்பிற்கும் கொரோனா வைரஸ் மட்டுமே காரணமாக உள்ளது.

நாட்டில் கொரோனா வைரசால் ஏற்பட்ட மற்றும் ஏற்பட்டு வரும் இழப்புகள் ஏராளம். இந்த வைரசால் கடந்த நான்கு மாதங்களுக்கும் அதிகமாக பொதுமுடக்கம் நீடித்து வருகின்றது. வரலாறு காணாத பொது முடக்கத்தால் நாட்டின் அனைத்துத்துறையும் பல ஆண்டுகள் பின்னோக்கி நகர்ந்திருக்கின்றது.

மேலும், பின்னடைவில் இருந்த மீள முடியாமல் அவைத் திணறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, வைரஸ் காரணமாக நீடித்து வரும் பொதுமுடக்கத்தினால் வாகன போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியிருக்கின்றது. மிசோரம் மாநிலத்தில் இந்த நிலை சற்றுக்கூடுதலாகவேக் காணப்படுகின்றது.

மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வெளிமாநில வாகனங்கள் உள்நுழைவதற்கு கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தின் எல்லையில் சரக்கு வாகனங்கள் தேக்கமடைந்து காணப்படுகின்றன.

மேலும், அனைத்து வாகனங்களும் வழக்கத்திற்கு மாறாக ஆமை வேகத்தில் நகரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், மாநிலத்திற்கு எரிபொருள் கொண்டு வரும் வாகனங்களும் சிக்கியிருப்பதாக கூறப்படுகின்றது.

இவற்றின் வருகை தடைப்பட்டிருக்கின்ற காரணத்தினால் பங்குகளில் எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாக உயர்ந்துள்ளது. இது கடந்த சில நாட்களாக தலைவிரித்தாடத் தொடங்கியிருக்கின்றது. எனவே, இதனைச் சமாளிக்கும் விதமாக பேரல் மற்றும் சேமிப்பு கேன்களில் எரிபொருள் விநியோகிப்பதற்கு மிசோரம் அரசு தடை விதித்துள்ளது.

இதுமட்டுமின்றி, வாகனங்களில் எத்தனை லிட்டர் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்ற அளவீட்டையும் அது நிர்ணயித்துள்ளது. இதன்படி, ஸ்கூட்டர்களுக்கு 3 லிட்டர்கள் என்றும், பைக்குகளுக்கு 5 லிட்டர் என்ற அளவையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கார் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு நிரப்படும் எரிபொருளின் அளவையும் அது வெளியிட்டுள்ளது.

கார் மற்றும் இலகு ரக வாகனங்களுக்கு 10 லிட்டரும், மேக்ஸிகேப், பிக்-அப் டிரக், மினி டிரக் போன்ற சற்று பெரிய வாகனங்களுக்கு 20 லிட்டரும், பேருந்து மற்றும் பெரிய ரக வாகனங்களுக்கு 100 லிட்டர் வரையிலும் எரிபொருள் வழங்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேசமயம், அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு விருப்பம் போல் எரிபொருளை நிரப்பலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவை, இலக்கை நோக்கி செல்வது மட்டுமின்றி திரும்பி வரும் வருவதற்காகவும் எரிபொருளை நிரப்பிக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

ஆனால், எந்த நிறுவனமும் பெட்ரோல் அல்லது டீசல் ஆகியவற்றை பெரிய டிரம் மற்றும் கேன்களில் சேமித்து வைக்கக் கூடாது திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் திடீரென அதிகரித்துள்ள எரிபொருள் தட்டுப்பட்டால் குறிப்பிட்ட சில இடங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது.

மேலும், இன்றைய நிலவரப்படி பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் தங்களிடம் பெட்ரோல் இல்லை என கூறி அதிகாலையிலேயே வாசல் கதவை மூடிவிட்டதாக கூறப்படுகின்றது. வரலாறு காணாத விலை உயர்வுக்கு இடையில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மக்களை மேலும் அதிர்ச்சியுறச் செய்திருக்கின்றன இந்த பெட்ரோல், டீசல். இதனால், மக்கள் எதைக் கண்டு கவலைப்படுவது என திணறி வருகின்றனர்.