டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்

ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று நிகழ்வு ஒன்றை, வரும் டிசம்பர் 25ம் தேதியன்று அரங்கேற்ற இந்தியா முடிவு செய்துள்ளது.

ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று நிகழ்வு ஒன்றை, வரும் டிசம்பர் 25ம் தேதியன்று அரங்கேற்ற இந்தியா முடிவு செய்துள்ளது. இந்தியாவின் இந்த திடீர் அதிரடி காரணமாக, எல்லையில் வாலாட்டி கொண்டிருக்கும் சீனா அஞ்சி நடுங்கி வருகிறது.

டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்... இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்...

பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும், இந்தியாவிற்கு எப்போதும் பயங்கரமான அச்சுறுத்தலை கொடுத்து கொண்டே இருக்கின்றன. வடக்கே உள்ள காஷ்மீர் மாநிலம் தங்களுக்கு சொந்தமானது என பாகிஸ்தான் பல ஆண்டுகளாக உரிமை கோரி வருகிறது.

டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்... இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்...

அதே நேரத்தில், வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகள் தங்களுக்கு சொந்தமானது என சீனா உரிமை கோருகிறது. ஆனால் இவ்விரு நாடுகளுக்கும் ஒரு பிடி மண்ணை கூட விட்டு கொடுத்து விடக்கூடாது என்பதில் இந்தியா மிகவும் உறுதியாக உள்ளது.

டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்... இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்...

ஆனால் அருணாச்சல பிரதேசத்தை ஆக்கிரமித்து விட வேண்டும் என சீனா துடியாய் துடித்து கொண்டுள்ளது. எப்படியாவது இந்த முயற்சியை வெற்றியடைய செய்து விட வேண்டும் என்பதற்காக, அருணாச்சல பிரதேச எல்லையில், அவ்வப்போது சீன ராணுவம் குவிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.

டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்... இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்...

எனவே போர் பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஒன்றாக அருணாச்சல பிரதேசம் திகழ்கிறது. ஒருவேளை திடீரென போர் மூண்டால், இந்திய ராணுவ வீரர்கள், உடனடியாக அருணாச்சல பிரதேச எல்லையை சென்றடைய முடியாத சூழல் நிலவி வந்தது.

டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்... இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்...

ஏனெனில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சாலை, பாலங்கள் போன்ற போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருந்தது. நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்ட இந்தியா, அருணாச்சல பிரதேச மாநிலத்தில் படிப்படியாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது.

டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்... இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்...

இதன் ஒரு பகுதியாக கட்டமைக்கப்பட்டதுதான் போகிபில் பாலம். இந்த பாலம் இந்தியாவின் மிக நீண்ட நாள் கனவு என்பது குறிப்பிடத்தக்கது. அசாம் மாநிலத்தின் திப்ரூகர் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பசிகாட் ஆகிய இரு நகரங்களையும் போகிபில் பாலம் இணைக்கிறது.

டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்... இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்...

போகிபில் பாலத்தின் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இது இரண்டு அடுக்குகளை கொண்டது என்பதுதான். ரயில் மற்றும் வாகனங்கள் என இரண்டும் சென்று வரும் வகையில், இரண்டு அடுக்குகளாக போகிபில் பாலம் கட்டப்பட்டுள்ளது.

டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்... இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்...

அதாவது பாலத்தின் மேல் பகுதியில், வாகனங்கள் சென்று வர ஏதுவாக 3 லேன்கள் கொண்ட சாலை உள்ளது. பாலத்தின் கீழ் பகுதியில், ரயில்கள் சென்று வர வசதியாக, டபுள் லைன் ரயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 4.94 கிலோ மீட்டர்கள்.

டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்... இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்...

ரயில் மற்றும் வாகனங்கள் என இரண்டும் சென்று வர ஏதுவாக கட்டமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான பாலம் என்ற பெருமையை போகிபில் பெறுகிறது. ஆசிய அளவில் பார்த்தால், சாலை, ரயில்வே தண்டவாளம் என இரண்டையும் கொண்ட 2வது மிக நீளமான பாலம் இது.

டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்... இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்...

ஸ்வீடன்-டென்மார்க் ஆகிய இரண்டு நாடுகளையும் இணைக்கும் வகையில், 7.8 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதன் டிசைனை அடிப்படையாக கொண்டுதான், போகிபில் பாலமும் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்... இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்...

இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த போகிபில் பாலம், பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா ஆற்றின் தண்ணீர் மட்டத்திற்கு 32 மீட்டர்களுக்கு மேலாக போகிபில் பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்... இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்...

ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பாலங்களில் ஒன்றாகவும் போகிபில் கருதப்படுகிறது. ஏனெனில், பதற்றம் ஏற்படும் பட்சத்தில், போகிபில் பாலத்தின் வழியாக, அருணாச்சல பிரதேச எல்லையை, இந்திய ராணுவம் வெகு விரைவாக சென்றடைய முடியும்.

டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்... இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்...

அத்துடன் ராணுவ தளவாடங்களையும் உடனடியாக கொண்டு செல்ல முடியும். இதன்மூலமாக அருணாச்சல பிரதேச எல்லையில் சீனாவின் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். எனவேதான் போகிபில் பாலம், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்... இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்...

போகிபில் பாலமானது, 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எடையை தாங்கும் வல்லமை கொண்டது. எனவே இந்தியாவின் அர்ஜூன் எம்கே II போன்ற பெரிய பெரிய ராணுவ டாங்கிகளையும், போகிபில் பாலம் வழியாக எளிதாக கொண்டு செல்ல முடியும்.

டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்... இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்...

இதுதவிர போகிபில் பாலத்தின் மூலமாக மக்களுக்கு நேரடியாகவும் பல்வேறு பயன்கள் ஏற்படும். பயணம் செய்யும் நேரம் மற்றும் பயணிக்கும் தொலைவு ஆகியவை வெகுவாக குறைவதுடன், பொருளாதார ரீதியிலான நன்மைகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்... இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்...

போகிபில் பாலமானது, ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி இந்தியாவின் மிக நீண்ட நாள் கனவாகும். கடந்த 1997ம் ஆண்டு, தேவகவுடா பிரதமராக இருந்த கால கட்டத்தில், போகிபில் பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்... இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்...

ஆனால் வாஜ்பாய் பிரதமராக இருந்த 2002ம் ஆண்டில்தான், போகிபில் பாலத்தை கட்டமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதன்பின் பாலத்தை கட்டி முடிக்க பல்வேறு காலக்கெடுக்கள் நிர்ணயிக்கப்பட்டன. ஆனால் ஒருபோதும் அது நிறைவேறவில்லை.

டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்... இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்...

அடிக்கல் நாட்டப்பட்ட 1997ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 21 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஒரு வழியாக தற்போது போகிபில் பாலப்பணி நிறைவடைந்து விட்டது. போகிபில் பாலத்தை, பிரதமர் மோடி வரும் 25ம் தேதி திறந்து வைக்க இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்... இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்...

கிறிஸ்துமஸ் பரிசாக போகிபில் பாலம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. போகிபில் பாலத்தை கட்டி முடிக்க 1,767 கோடி ரூபாய்தான் செலவாகும் என முதலில் மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பாலத்தை கட்டி முடிக்க 5,800 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.

டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்... இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்...

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுக்களை கடந்து கொண்டே வந்ததுதான் இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. என்றாலும் தற்போது போகிபில் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்திருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்... இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்...

குறிப்பாக அசாம், அருணாச்சல பிரதேச மக்கள் பெரு மகிழ்ச்சியடைந்துள்ளனர். போகிபில் பாலத்தை, வரும் 25ம் தேதி, பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ள சூழலில், அசாம் முதல் அமைச்சர் சர்பானந்தா சோனோவால், பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உயரதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.

டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்... இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்...

முன்னதாக அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களை இணைக்கும் வகையில், டோலா-சாடியா ஆகிய நகரங்களுக்கு இடையே, லோஹித் என்ற ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்றை இந்தியா கட்டியுள்ளது. லோஹித் என்பது பிரம்மபுத்திராவின் முக்கியமான துணை ஆறுகளில் ஒன்றாகும்.

டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்... இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்...

டோலா-சாடியா பாலத்தின் மொத்த நீளம் 9.15 கிலோ மீட்டர்கள். தற்போதைய நிலையில் இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப்பாலம் என்ற பெருமையை டோலா-சாடியா பாலம்தான் தன் கைவசம் வைத்துள்ளது. ராணுவ முக்கியத்துவம் கருதியே இந்த பாலமும் கட்டப்பட்டுள்ளது.

டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்... இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்...

டோலா-சாடியா பாலமானது, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதே அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களை இணைக்கும் வகையில், வரும் 25ம் தேதி போகிபில் பாலமும் திறக்கப்படவுள்ளது.

டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்... இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்...

ரயில், வாகனங்கள் என இரண்டும் சென்று வர வசதியாக கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான பாலம் என்ற பெருமையை இது பெறுகிறது. இந்த சூழலில், அசாம் மாநிலத்தின் துப்ரி-மேகாலயா மாநிலத்தின் புல்பரி நகரங்களையும் இணைக்கும் வகையில், மற்றொரு பாலம் ஒன்றையும் இந்தியா கட்டவுள்ளது.

டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்... இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்...

பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்படவுள்ள இந்த பாலத்தின் நீளம் 19.3 கிலோ மீட்டர்கள். தற்போதைய நிலையில், டோலா-சாடியா பாலத்திடம் உள்ள, இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப்பாலம் என்ற பெருமையை, இன்னும் சில ஆண்டுகளில் துப்ரி-புல்பரி பாலம் கைப்பற்றவுள்ளது.

டிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்... இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்...

அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் இந்தியா இவ்வாறு திடீரென உள்கட்டமைப்பு வசதிகளை வரிசையாக மேம்படுத்தி கொண்டே வருவது சீனாவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: MB Studios 17

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Modi To Inaugurate India's Longest Rail-Cum-Road Bridge Bogibeel On December 25. Read in Tamil
Story first published: Wednesday, December 12, 2018, 13:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X