கேரளாவில் முதல் ஆள்... மோகன்லால் வாங்கிய பிரம்மாண்ட சொகுசு கார்... விலை எவ்வளவு தெரியுமா?

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பிரம்மாண்ட சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கேரளாவில் முதல் ஆள்... மோகன்லால் வாங்கிய பிரம்மாண்ட சொகுசு கார்... விலை எவ்வளவு தெரியுமா?

சினிமா நடிகர், நடிகைகள் என்றாலே விலை உயர்ந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை வாங்கி குவிப்பது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் ஒரு சிலர் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே அந்த வாகனத்தை வாங்கி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த வகையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் விலை உயர்ந்த கார் ஒன்றை தற்போது வாங்கியுள்ளார்.

கேரளாவில் முதல் ஆள்... மோகன்லால் வாங்கிய பிரம்மாண்ட சொகுசு கார்... விலை எவ்வளவு தெரியுமா?

டொயோட்டா வெல்ஃபயர் (Toyota Vellfire) காரை பற்றிதான் இங்கே நாங்கள் பேசி கொண்டுள்ளோம். இந்திய மார்க்கெட்டில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை நிற வெல்ஃபயர் காரை மோகன்லால் டெலிவரி எடுத்துள்ளார்.

கேரளாவில் முதல் ஆள்... மோகன்லால் வாங்கிய பிரம்மாண்ட சொகுசு கார்... விலை எவ்வளவு தெரியுமா?

இதன்மூலம் கேரளாவில் டொயோட்டா வெல்ஃபயர் காரை டெலிவரி எடுத்த முதல் நபர்களில் ஒருவராக அவர் பெருமை பெற்றுள்ளார். டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு காரின் விலை 79.5 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்). இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகப்பெரிய கார்களில் ஒன்று என்பதுடன், சொகுசு மற்றும் விசாலாமான இடவசதி கொண்ட கார் என்ற பெருமைகளையும் வெல்ஃபயர் பெற்றுள்ளது.

கேரளாவில் முதல் ஆள்... மோகன்லால் வாங்கிய பிரம்மாண்ட சொகுசு கார்... விலை எவ்வளவு தெரியுமா?

அப்படிப்பட்ட காரைதான் மோகன்லால் டெலிவரி எடுத்துள்ளார். வெல்ஃபயர் காரின் அறிமுக நிகழ்ச்சியில், அடுத்த 3 மாதங்களுக்கான ஸ்டாக் விற்பனையாகி விட்டதாக டொயோட்டா அறிவித்தது. டொயோட்டா வெல்ஃபயர் கார் சிபியூ (CBU) வழியில் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி ஒரு மாதத்திற்கு டொயோட்டா நிறுவனம் 60 வெல்ஃபயர் கார்களை இறக்குமதி செய்கிறது.

கேரளாவில் முதல் ஆள்... மோகன்லால் வாங்கிய பிரம்மாண்ட சொகுசு கார்... விலை எவ்வளவு தெரியுமா?

அந்த வகையில் பார்த்தால், சுமார் 180 வெல்ஃபயர் கார்கள் ஏற்கனவே விற்பனையாகி விட்டன. இந்தியாவில் டொயோட்டா வெல்ஃபயர் காரின் முக்கிய போட்டியாளராக மெர்சிடிஸ் வி க்ளாஸ் (Mercedes V Class) உள்ளது. இந்த கார் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

கேரளாவில் முதல் ஆள்... மோகன்லால் வாங்கிய பிரம்மாண்ட சொகுசு கார்... விலை எவ்வளவு தெரியுமா?

டொயோட்டா வெல்ஃபயர் காரில், 7 பேர் சௌகரியமாக பயணம் செய்ய முடியும். இதன் மத்திய வரிசையில், 2 பைலட் இருக்கைகளும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் வெண்டிலேட்டட் இருக்கைகள், ஆம்பியண்ட் லைட்டிங், டபுள் சன் ரூஃப் மற்றும் மூன்று-ஸோன் ஆட்டோமெட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் ஆகிய வசதிகளும் டொயோட்டா வெல்ஃபயர் காரில் வழங்கப்பட்டுள்ளன.

கேரளாவில் முதல் ஆள்... மோகன்லால் வாங்கிய பிரம்மாண்ட சொகுசு கார்... விலை எவ்வளவு தெரியுமா?

சொகுசு வசதிகளை போலவே, டொயோட்டா வெல்ஃபயர் காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமில்லை. இதில், 7 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், வெய்கில் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், கார்னரிங் லேம்ப்ஸ் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. டொயோட்டா வெல்ஃபயர் காரில், 2.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் முதல் ஆள்... மோகன்லால் வாங்கிய பிரம்மாண்ட சொகுசு கார்... விலை எவ்வளவு தெரியுமா?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 179 எச்பி பவரை உருவாக்க கூடியது. நீண்ட தூர பயணங்கள் என்றாலும் கூட, டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு காரில், அலுப்பு தட்டாமல் பயணிக்க முடியும். இந்த பிரம்மாண்ட கார் சாலையில் செல்லும்போது கண்டிப்பாக அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்னும் பல்வேறு பிரபலங்கள் இந்த காரை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mohanlal Buys Toyota Vellfire Worth Rs.79.5 Lakhs. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X