பிறந்த நாள் பரிசாக விலையுயர்ந்த மெர்சிடிஸ் காரை வாங்கிய பிரபல நடிகர்!! யம்மாடியோவ், இதன் ஷோரூம் விலையே இவ்வளவா

பிறந்த நாள் பரிசாக நடிகர் துல்கர் சல்மான் விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். துல்கர் வாங்கியுள்ள இந்த மெர்சிடிஸ் வாகனத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பிறந்த நாள் பரிசாக விலையுயர்ந்த மெர்சிடிஸ் காரை வாங்கிய பிரபல நடிகர்!! யம்மாடியோவ், இதன் ஷோரூம் விலையே இவ்வளவா

மலையாள நடிகர் துல்கர் சல்மானை தெரியாதவர்களே இருக்க மாட்டீர்கள் என்று தான் நினைக்கிறேன். பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் என்ற அடையாளத்துடன் சினிமாக்குள் நுழைந்தாலும், அதன்பின் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்கி கொண்டவர்.

பிறந்த நாள் பரிசாக விலையுயர்ந்த மெர்சிடிஸ் காரை வாங்கிய பிரபல நடிகர்!! யம்மாடியோவ், இதன் ஷோரூம் விலையே இவ்வளவா

மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ள துல்கர் சல்மான் தனது 35வது பிறந்தநாளை சமீபத்தில் (ஜூலை 28) விமர்ச்சையாக கொண்டாடினார். ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் துல்கருக்கு இணைய வழியாக வாழ்த்துகளை தெரிவித்ததை பார்த்தோம்.

பிறந்த நாள் பரிசாக விலையுயர்ந்த மெர்சிடிஸ் காரை வாங்கிய பிரபல நடிகர்!! யம்மாடியோவ், இதன் ஷோரூம் விலையே இவ்வளவா

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புத்தம் புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 எஃப்.எல் காரை துல்கர் சல்மான் வாங்கியுள்ளார். இதனை மெர்சிடிஸ்-பென்ஸ் பிரிட்ஜ்வே மோட்டார்ஸ் நிறுவனமே அதன் சமூக வலைத்தள பக்கங்களில் படங்களுடன் உறுதிப்படுத்தியுள்ளது.

Image Courtesy: DQ car collection 369/Instagram

இந்த படங்களை வைத்து பார்க்கும்போது துல்கர் சல்மானின் புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 எஃப்.எல் வாகனம் அடர் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் வாகனங்கள் ரூ.1.62 கோடி என்கிற ஆரம்ப விலையிலேயே கிடைத்தாலும், துல்கர் வாங்கியுள்ள ஜி63 ஏஎம்ஜி மாடலின் விலை ரூ.2.42 கோடியாகும்.

பிறந்த நாள் பரிசாக விலையுயர்ந்த மெர்சிடிஸ் காரை வாங்கிய பிரபல நடிகர்!! யம்மாடியோவ், இதன் ஷோரூம் விலையே இவ்வளவா

இது எக்ஸ்-ஷோரூம் விலையே ஆகும், சாலை வரி, இன்ஸ்சூரன்ஸ் உள்ளிட்டவை எல்லாம் சேர்த்தால் எப்படியிருந்தாலும், ரூ.3 கோடியை கடந்துவிடும். இருப்பினும் துல்கர் சல்மான் மொத்தம் எவ்வளவு தொகையை செலுத்தி இந்த பென்ஸ் வாகனத்தை வாங்கியுள்ளார் என்பது குறித்த விபரம் இல்லை.

பிறந்த நாள் பரிசாக விலையுயர்ந்த மெர்சிடிஸ் காரை வாங்கிய பிரபல நடிகர்!! யம்மாடியோவ், இதன் ஷோரூம் விலையே இவ்வளவா

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆனால் துல்கர் சல்மான் வாங்கியுள்ள வேரியண்ட்டை பெட்ரோல் என்ஜின் மட்டுமே வாங்க முடியும் என டீலர்கள் தெரிவிக்கின்றனர்.

பிறந்த நாள் பரிசாக விலையுயர்ந்த மெர்சிடிஸ் காரை வாங்கிய பிரபல நடிகர்!! யம்மாடியோவ், இதன் ஷோரூம் விலையே இவ்வளவா

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 வாகனத்தில் 4.0 லிட்டர் வி8 பைடர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 6000 ஆர்பிஎம்-இல் 577 பிஎச்பி மற்றும் 2500 ஆர்பிஎம்-இல் 850 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் வழங்கும் மைலேஜ் அளவு 6.1 கிமீ ஆகும்.

பிறந்த நாள் பரிசாக விலையுயர்ந்த மெர்சிடிஸ் காரை வாங்கிய பிரபல நடிகர்!! யம்மாடியோவ், இதன் ஷோரூம் விலையே இவ்வளவா

டிரான்ஸ்மிஷன் தேர்வாக இந்த மெர்சிடிஸ் வாகனத்தில் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் (டார்க் கன்வெர்டர்) கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. 4-சக்கர ட்ரைவ் மற்றும் 2-சக்கர ட்ரைவ் என இரு விதமான தேர்விலும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 மாடல் கிடைக்கிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Dulquer Salmaan Bought Mercedes-Benz AMG G 63. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X