பழைய வாகனங்களை அழிக்க பெரும் சலுகையை அறிவித்த மோடி அரசு... இப்படி ஒரு சலுகையை யார்தான் வேணாம்னு சொல்லுவா?

பழைய வாகன அழிப்பு கொள்கையின்கீழ் புதிய திட்டத்தை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பழைய வாகனங்களை அழிக்க பெரும் சலுகையை அறிவித்த மோடி அரசு... இப்படி ஒரு சலுகையை யார்தான் வேணாம்னு சொல்லுவா?

பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களால் சுற்றுபுறச் சூழல் அதிகம் மாசுறுவதைக் கருத்தில் அவற்றை பயன்பாட்டில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் ஒன்றிய அரசு களமிறங்கியுள்ளது. இதனடிப்படையில் பழைய வாகன அழிப்பு கொள்கை திட்டத்தை அண்மையில் அரசு வெளியிட்டிருந்தது.

பழைய வாகனங்களை அழிக்க பெரும் சலுகையை அறிவித்த மோடி அரசு... இப்படி ஒரு சலுகையை யார்தான் வேணாம்னு சொல்லுவா?

இதனையே ஒன்றிய அரசு பதுப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுப்பித்தலானது பழைய வாகன பயன்பாட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமையும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.

பழைய வாகனங்களை அழிக்க பெரும் சலுகையை அறிவித்த மோடி அரசு... இப்படி ஒரு சலுகையை யார்தான் வேணாம்னு சொல்லுவா?

பழைய வாகன அழிப்பு கொள்கை திட்டத்தின்கீழ் தங்களின் பழைய வாகனங்களை அழிக்கக் கொடுக்கும் வாகன உரிமைதாரர்களுக்கு சாலை வரியில் பெரும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தனிநபர் வாகனமாக இருப்பின் 25 சதவீதமும், வர்த்தக வாகனமாக இருப்பின் அதற்கு 15 சதவீதம் வரையிலும் சாலை வரி விலக்கு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய வாகனங்களை அழிக்க பெரும் சலுகையை அறிவித்த மோடி அரசு... இப்படி ஒரு சலுகையை யார்தான் வேணாம்னு சொல்லுவா?

வரி விலக்கானது புதிய வாகனத்தை வாங்கும்போது வழங்கப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. பழைய வாகன அழிப்பு கொள்கை 2021 அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்க வர இருக்கின்றது. இந்த நிலையில், அமைச்சகம் புதுப்பிக்கப்பட்ட பழைய வாகன அழிப்பை கொள்கை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பழைய வாகனங்களை அழிக்க பெரும் சலுகையை அறிவித்த மோடி அரசு... இப்படி ஒரு சலுகையை யார்தான் வேணாம்னு சொல்லுவா?

இதுகுறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள வரைவில் கூறியிருப்பதாவது, பழைய வாகனத்தை அழிப்போர்க்கு சான்று வழங்கப்படும். அதைக் கொண்டு புதிதாக பதிவு செய்யப்படும வாகனத்திற்கு 25 சதவீதம் வரை மோட்டார் வாகன வரியில் இருந்து சலுகைப் பெற முடியும்.

பழைய வாகனங்களை அழிக்க பெரும் சலுகையை அறிவித்த மோடி அரசு... இப்படி ஒரு சலுகையை யார்தான் வேணாம்னு சொல்லுவா?

வர்த்தக வாகனங்களுக்கு 15 சதவீதம் வரை வரி சலுகை வழங்கப்பட இருக்கின்றது. ஆனால், சாலை வரி குறைப்பு எவ்வாறு கணக்கிடப்படும் என்பது பற்றிய துள்ளியமான விவரத்தை அமைச்சகம் விளக்கவில்லை. இப்புதிய வரைவுகுறித்து பரிந்துரைகளை வழங்க அரசு அடுத்த மாதம் அழைப்பு விடுத்துள்ளது. இதன் பின்னர் தெளிவான மற்றும் இறுதி அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பழைய வாகனங்களை அழிக்க பெரும் சலுகையை அறிவித்த மோடி அரசு... இப்படி ஒரு சலுகையை யார்தான் வேணாம்னு சொல்லுவா?

ஒன்றிய அரசு பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்றும் விதமாக பழைய வாகன அழிப்பு கொள்கையை அறிவித்துள்ளது. இத்துடன், பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டிற்கு மாற்றாக மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது.

பழைய வாகனங்களை அழிக்க பெரும் சலுகையை அறிவித்த மோடி அரசு... இப்படி ஒரு சலுகையை யார்தான் வேணாம்னு சொல்லுவா?

இதற்காக ஃபேம்2 திட்டத்தின் வாயிலாக ஒன்றிய அரசு மானியம் வழங்கி வருகின்றது. இத்துடன், நாடு முழுவதும் மின் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பணியிலும் அரசு ஈடுபட்டு வருகின்றது. இதனடிப்படையில் அண்மையில் நாடு முழுவதும் முக்கிய பகுதிகளில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை உருவாக்க இருப்பதாக அண்மையில் ஒன்றிய அரசு அறிவித்தது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
MoRTH Issued New Draft Notification For Old Vehicle Scrappage Policy. Read In Tamil.
Story first published: Tuesday, July 27, 2021, 15:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X