6 மாதத்தில் சுங்கச் சாவடிகள் எல்லாம் மூடப்படும்... அமைச்சர் நிதின் கட்கரியின் "பளீர்" பதில்

மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் அடுத்த 6 மாதத்தில் சுங்கச்சாவடிகள் எல்லாம் நீக்கப்பட்டு வேறு விதமாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் எனக் காணலாம் வாருங்கள்.

6 மாதத்தில் சுங்கச் சாவடிகள் எல்லாம் மூடப்படும்... அமைச்சர் நிதின் கட்டாரியின்

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு முக்கியமான நகரங்கள் எல்லாம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரு வாகனம் பயணம் செய்ய வேண்டும் என்றால் இந்த நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் பணம் செலுத்த வேண்டும்.

6 மாதத்தில் சுங்கச் சாவடிகள் எல்லாம் மூடப்படும்... அமைச்சர் நிதின் கட்டாரியின்

அந்த சாலையில் பயணிப்பதற்கான வரி அது. இது கடந்த 2019ம் ஆண்டு வரை பணமாகச் செலுத்த வேண்டியநிலை இருந்தது. பின்னர் சுங்கச்சாவடிகளில் டிஜிட்டல் முறையில் வசூலிக்கும் ஃபாஸ்ட்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டது. வாகனங்கள் இந்த ஃபாஸ்ட் டேக் கார்டுகளை பெற்றுக்கொண்டு அதை வாகனங்களில் பொருத்திக்கொண்டு வாகனத்தைக் கொண்டு டோல்கேட்டை கடந்தால் போதும் தானாகப் பணம் கழிக்கப்பட்டு விடும்.

6 மாதத்தில் சுங்கச் சாவடிகள் எல்லாம் மூடப்படும்... அமைச்சர் நிதின் கட்டாரியின்

இதற்காக அந்த பாஸ்ட் டேக் கார்டை ரீசார்ஜ் செய்தால் போதும் அதில் உள்ள பணம் தானாகக் கழிந்துவிடும். தற்போது வரை இந்தியாவில் இந்த நடைமுறைதான் அமலில் இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி இந்திய அரசு ஜிபிஎஸ் முறையிலான சுங்க கட்டண வசூல் முறையைக் கொண்டு வருவது குறித்து ஆய்வு நடந்து வருவதாகக் கூறியிருந்தார்.

6 மாதத்தில் சுங்கச் சாவடிகள் எல்லாம் மூடப்படும்... அமைச்சர் நிதின் கட்டாரியின்

இது குறித்து ராஜ்யசபாவில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த நிதின் கட்காரி, மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் தற்போது சாட்டிலைட் பேஸ்டு டோல் சிஸ்டத்தை கட்டமைத்து வருகின்றனர். இதன் மூலம் நெடுஞ்சாலையை ஒரு வாகனம் பயன்படுத்தினால் அந்த வாகனத்தின் உரிமையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகப் பணத்தைக் கழிக்கும் திட்டத்தைக் கட்டமைத்து வருகின்றனர் எனக் கூறினார்.

6 மாதத்தில் சுங்கச் சாவடிகள் எல்லாம் மூடப்படும்... அமைச்சர் நிதின் கட்டாரியின்

ஆனால் இதை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருக்கிறது. இதனால் இதே நேரத்தில் வல்லுநர்கள் நெடுஞ்சாலைகளில் கேமராக்களை அமைத்து அதில் வாகனப் பதிவு எண்களைக் கண்காணித்து அதன் தரவுகளை வைத்து டோல்கட்டணம் விதிப்பது குறித்த ஆய்விலும் ஈடுபட்டுள்ளனர். மத்திய போக்குவரத்துத் துறை இதற்காக ஒரு சில விதிமுறைகளை வகுத்துள்ளது.

6 மாதத்தில் சுங்கச் சாவடிகள் எல்லாம் மூடப்படும்... அமைச்சர் நிதின் கட்டாரியின்

அந்த விதிமுறைகளுக்குட்பட்டு எந்த தொழிற்நட்பம் செயல்படுகிறதோ அந்த தொழிற்நுட்பத்தை இறுதியாக்கி அதை இந்தியா முழுவதும் செயல்படுத்த வைக்க முடிவுசெய்யப்படும் எனக் கூறினார். மேலும் இந்த இரண்டு முறைகளில் எந்த முறை என இன்னும் ஒரு மாதத்தில் முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.

6 மாதத்தில் சுங்கச் சாவடிகள் எல்லாம் மூடப்படும்... அமைச்சர் நிதின் கட்டாரியின்

முடிவு செய்யப்படும் தொழிற்நுட்பத்தை செயல்முறைப்படுத்தப் பாராளுமன்ற அனுமதி பெறப்பட்டு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு அடுத்த 6 மாதத்தில் அதைச் செயல்படுத்துவதற்கான பணிகள் துவங்கப்படும் என்றும், அதன்படி இந்தியாவில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் சுங்கச்சாவடிகள் எல்லாம் அகற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

6 மாதத்தில் சுங்கச் சாவடிகள் எல்லாம் மூடப்படும்... அமைச்சர் நிதின் கட்டாரியின்

தற்போது இந்தியாவில் ஒரு நாளுக்கு சுங்கச்சாவடி கட்டணம் மட்டும் ரூ120 கோடி வசூலாகிறது. இதுவரை இந்தியாவில் 5.56 கோடி வாகனங்களுக்கு பாஸ்ட்டேக் கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பாஸ்ட் டேக் கார்டுகள் எல்லாம் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனம் நிற்பதைத் தவிர்க்க இந்த முறை கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் அமைச்சரின் பதிலின்படி இன்னும் 6 மாதத்தில் இதற்கும் வேலையில்லாமல் போய்விடும்.

6 மாதத்தில் சுங்கச் சாவடிகள் எல்லாம் மூடப்படும்... அமைச்சர் நிதின் கட்டாரியின்

கூட்டம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பாஸ்ட்டேக் முறை கொண்டு வரப்பட்டது.ஆனால் இன்னும் பல சுங்கச்சாவடிகளில் பாஸ்ட்டேக் முறையிலுமே நீண்ட வரிசை நின்று கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் தான் இதற்கு மாற்றாக தற்போது இந்த இரண்டு தொழிற்நுட்பங்களை ஆய்வு செய்து வருகிறது. 6 மாதத்தில் இந்த காட்சிகள் மாறும் என எதிர்பார்க்கலாம்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Morth plans to abolish toll plazas in 6 months says Nitin Gadkari
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X