தமிழகம்தான் டாப் நம்பர் 1... ரொம்ப பெருமை படாதீங்க பாஸ்... எதுலனு தெரிஞ்சா மனசு நொந்துபோய்டுவீங்க..!

தமிழகத்தைப் பற்றி ஷாக்களிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

தமிழகம்தான் டாப் நம்பர் 1... ரொம்ப பெருமை படாதீங்க பாஸ்... எதுலனு தெரிஞ்சா மனசு நொந்துபோய்டுவீங்க..!

விபத்து, போக்குவரத்து மற்றும் சாலை ஆகியவற்றைச் சார்ந்து இயங்கும் துறைகளுக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தக்கூடிய வார்த்தையே இது. வாகன ஓட்டிகளின் கவன குறைவு மற்றும் விதிமீறல்கள் ஆகியவையே விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. இவற்றைக் கட்டுப்படுத்த அரசும், போக்குவரத்துத்துறைச் சார்ந்தவர்களும் புதிய புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

தமிழகம்தான் டாப் நம்பர் 1... ரொம்ப பெருமை படாதீங்க பாஸ்... எதுலனு தெரிஞ்சா மனசு நொந்துபோய்டுவீங்க..!

இருப்பினும் எந்த மாற்றமும் இல்லாமல் விபத்துகளின் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் நாள் தோறும் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் விபத்து அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இதனால் இறப்போரின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் கூடிக் கொண்டே சென்றுக் கொண்டிருக்கின்றது.

தமிழகம்தான் டாப் நம்பர் 1... ரொம்ப பெருமை படாதீங்க பாஸ்... எதுலனு தெரிஞ்சா மனசு நொந்துபோய்டுவீங்க..!

இதனால், உலகளவில் அதிகம் விபத்துகள் அரங்கேறும் நாடுகளின் பட்டியலில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. இந்த நிலையில் நாட்டில் எந்த மாநிலத்தில் விபத்துகள் அதிகம் அரங்கேறுகின்றன என்ற பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம்தான் டாப் நம்பர் 1... ரொம்ப பெருமை படாதீங்க பாஸ்... எதுலனு தெரிஞ்சா மனசு நொந்துபோய்டுவீங்க..!

இதில், அதிர்ச்சி என்னவென்றால் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகம் விபத்துகள் நடைபெறும் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. போக்குவரத்தை சுலபமாக்க அரசு சார்பில் எட்டு வழிசாலை, நான்கு வழி சாலை பல்வேறு சாலை விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றநிலையில் தமிழகம் இந்த இடத்தைப் பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம்தான் டாப் நம்பர் 1... ரொம்ப பெருமை படாதீங்க பாஸ்... எதுலனு தெரிஞ்சா மனசு நொந்துபோய்டுவீங்க..!

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் 2015 இல் இருந்து 2019 ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகம் விபத்து நடைபெறும் பகுதிகளாக 5,489 இடங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில், 748 இடங்கள் தமிழகத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகம்தான் டாப் நம்பர் 1... ரொம்ப பெருமை படாதீங்க பாஸ்... எதுலனு தெரிஞ்சா மனசு நொந்துபோய்டுவீங்க..!

நாட்டின் பிற மாநிலங்களைக் காட்டிலும் இது அதிக எண்ணிக்கையாகும். இதேபோன்று நாட்டில் அதிகம் விபத்துகளைச் சந்ததிக்கும் யூனியன் பிரதேசமாக டெல்லி இருக்கின்றது. இங்கு ஒட்டுமொத்த 113 விபத்து பகுதிகள் கண்டறியப்பட்டிருக்கின்றது. இந்த தரவுகள் அனைத்தும் மாநிலங்களிடத்தில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம்தான் டாப் நம்பர் 1... ரொம்ப பெருமை படாதீங்க பாஸ்... எதுலனு தெரிஞ்சா மனசு நொந்துபோய்டுவீங்க..!

விபத்து பகுதி எவ்வாறு கண்டறியப்படுகின்றது?

தேசிய நெடுஞ்சாலையின் குறிப்பிட்ட பகுதியில் தொடர்ச்சியாக விபத்து அரங்கேறினாலோ அல்லது குறிப்பிட்ட அந்த இடத்தில் மட்டும் விபத்தின் காரணமாக 10க்கும் அதிகமான உயிரிழப்பு நேர்ந்தாலோ அந்த இடம் விபத்துப்பகுதியாக குறிக்கப்படுகின்றது. இவ்வாறே கணக்கிடக்கப்பட்டதன் மூலம் கண்டறியப்பட்ட இடங்களே தமிழகத்தின் அந்த 748 பகுதிகள் ஆகும்.

தமிழகம்தான் டாப் நம்பர் 1... ரொம்ப பெருமை படாதீங்க பாஸ்... எதுலனு தெரிஞ்சா மனசு நொந்துபோய்டுவீங்க..!

அதேசமயம், தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஒவ்வொரு 500 மீட்டருக்கும் குறைந்தது 5 விபத்துகள் நடைபெற்றிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மாநிலங்கள் சில தற்போது வழங்கியிருக்கும் புள்ளி விவரங்கள் தவறான என்ற சர்ச்சையும் எழும்பியுள்ளது.

தமிழகம்தான் டாப் நம்பர் 1... ரொம்ப பெருமை படாதீங்க பாஸ்... எதுலனு தெரிஞ்சா மனசு நொந்துபோய்டுவீங்க..!

ஏனெனில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒட்டுமொத்தமாகவே வெறும் 25 பகுதிகள் மட்டுமே விபத்து பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இதேபோன்று, ஹரியானாவில் 23 பகுதிகளும், பீஹாரில் 92 பகுதிகளும் விபத்து அதிகம் நடைபெறும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசுகள் வழங்கிய இந்த தகவல் ஏற்புடையதாக இல்லை என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகம்தான் டாப் நம்பர் 1... ரொம்ப பெருமை படாதீங்க பாஸ்... எதுலனு தெரிஞ்சா மனசு நொந்துபோய்டுவீங்க..!

அந்த மாநிலங்களின் காவல்துறை வழங்கிய இந்த தரவுகளில் முரண்பாடு இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், வழக்கு பதிவை மட்டுமே வைத்து காவல்துறை இந்த தரவுகளை வழங்கியிருக்கலாம் எனவும் அவர்கள் யூகித்திருக்கின்றனர். ஆகையால், மீண்டும் சரியான தரவுகள் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தமிழகம்தான் டாப் நம்பர் 1... ரொம்ப பெருமை படாதீங்க பாஸ்... எதுலனு தெரிஞ்சா மனசு நொந்துபோய்டுவீங்க..!

தற்போது வெளியாகியிருக்கும் இந்த பட்டியலில் தமிழகம் மட்டுமின்றி மேற்கு வங்கம், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் அதிகம் விபத்துகள் அரங்கேறும் பகுதிகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. ஆகையால், சாலை பாதுகாப்பை அதிகரிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுக்க இருப்பதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Most Accidents On National Highways: TamilNadu Tops..!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X