இந்தியாவின் மிகவும் அபாயகரமான சாலைகள்: சிறப்புத் தொகுப்பு

இந்தியாவின் சாலை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வந்தாலும், அதன் சுவடு கூட தெரியாத அளவு சில சாலைகள் வாகன ஓட்டிகளுக்கும், பயணிகளுக்கும் ஆபத்தானவையாகவே இருந்து வருகின்றன.

மேலும், அந்த சாலைகளின் நில அமைப்பும், அதனை மேம்படுத்துவதற்குண்டான முயற்சிகளுக்கு தடைக்கற்களாகவே இருக்கின்றன. இந்தியாவில் வாகனங்களுக்கு மிகவும் அபாயகரமானதாக கருதப்படும் சாலைகளின் விபரத்தை ஸ்லைடரில் காணலாம்.

லே- மணாலி நெடுஞ்சாலை

லே- மணாலி நெடுஞ்சாலை

இந்தியாவின் மிக மோசமான தரை வழித்தடங்களில் ஒன்று லே- மணாலி இடையிலான பாதை. இமயமலை சிகரத்தின் மீது 479 கிமீ நீளத்துக்கு நீளும் இந்த சாலையில் ஒவ்வொரு பயணமும் வாகன ஓட்டிகளுக்கு பல ஆபத்துக்களை தருவதாகவே அமைகின்றன. சாகசப் பயணம் செல்பவர்களின் முதல் சாய்ஸ் இந்த சாலை. இந்த சாலையின் சில பகுதிகள் கடல்மட்டத்திலிருந்து 4.8 கிமீ உயரத்தில் அமைந்திருக்கின்றன. மணாலியிலிருந்து - லே பகுதியை அடைவதற்கு ஜீப்பில் ஒரு நாளும், பஸ்சில் இரண்டு நாட்களும் பிடிக்கும்.

ஷிப்கி லா

ஷிப்கி லா

இந்திய- சீன எல்லைப் பகுதியில் இந்த சாலை கடல்மட்டத்திலிருந்து 5,669மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 22ல் அமைந்துள்ளது. வாகன ஓட்டிகளுக்கு மிக சவாலான சாலைகளில் இதுவும் ஒன்று.

கிராண்ட் டிரங்க் ரோடு

கிராண்ட் டிரங்க் ரோடு

தெற்காசியாவின் மிக பழமையானதும், மிக நீளமான சாலைகளில் ஒன்று கிராண்ட் டிரங்க் ரோடு. தி ஜெனரல்ஸ் ரோடு என்று அழைக்கப்படும் இந்த சாலை 2,500கிமீ நீளம் கொண்டது. தெற்காசியாவையும், மத்திய ஆசிய நாடுகளையும் இணைக்கும் இந்த பாதை இந்தியாவின் கிழக்குப் பகுதியையும், மேற்குப் பகுதியையும் இணைக்கிறது. இந்த சாலையில் இருக்கும் மலைப்பாங்கான சாலைகள் மிகவும் அபாயரமானதாகவே இருந்து வருகின்றன.

கின்னாவர் ரோடு

கின்னாவர் ரோடு

இமாச்சலப் பிரதேசத்திலுள்ள சங்லா பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்திருக்கும் கின்னாவர் ரோடு மிகவும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. மலைக்குடைந்து அமைக்கப்பட்டிருக்கும் இந்த சாலையின் மேற்புறத்தில் மலை தொங்குவது போன்று இருப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு த்ரில்லான பயண அனுபவத்தையும், இயற்கை காட்சிகளை ரசித்துச் செல்வதற்கும் ஏற்ற சாலையாகவும் உள்ளது. அழகு இருக்கும் இடத்தில் ஆபத்துக்களும் அதிகம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

கொல்லிமலை

கொல்லிமலை

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொல்லிமலையின் கொண்டை ஊசி வளைவு சாலைகள் மிகவும் அபாயகரமான சாலைகளில் ஒன்றாக விளங்குகிறது. செங்குத்தான மலையையொட்டியிருக்கும் இந்த மலைச்சாலை வாகன ஓட்டிகளுக்கு சவால் தருவதாக இருக்கிறது. 46.7கிமீ நீளம் கொண்ட இந்த சாலையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

கீலாங் - கிஷ்த்வார் ரோடு

கீலாங் - கிஷ்த்வார் ரோடு

இமாச்சலப் பிரதேச மாநிலம், கிஷ்த்வார் மற்றும் கீலாங் பகுதிகளை இணைக்கும் இந்த சாலை மிகவும் அபாயகரமானதாக குறிப்பிடுகின்றனர். 233கிமீ நீளம் கொண்ட இந்த சாலையும் ஆபத்துக்களை நிறைந்தது.

ஜலோரி பாஸ்

ஜலோரி பாஸ்

இமாச்சலப் பிரதேச மாநிலம், குலு மாவட்டத்தில் அமைந்திருககும் ஜலோரி கணவாய் கடல்மட்டத்திலிருந்து 10,800 அடி உயரத்தில் அமைந்துள்ளது. டெல்லியிலிருந்து 600 கிமீ அமைந்திருக்கும் ஜலோரி கணவாயை இணைக்கும் சாலையும் ஆபத்துக்கள் அதிகம் கொண்ட இந்திய சாலைகளில் ஒன்று.

கர்துங்லா

கர்துங்லா

டல்மட்டத்திலிருந்து 17,582 அடி உயரத்தில் அமைந்திருக்கும் கர்துங்லா பகுதியிலுள்ள மிக குறுகிய சாலையும் அபாயகரமானதாகவே குறிப்பிடுகின்றனர். 1976ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த சாலை 1986ம் ஆண்டு வாகன போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.

மூணாறு

மூணாறு

அபாயகரமான வளைவுகள் கொண்ட மலைச்சாலைகளில் ஒன்றாக மூணாறு சாலையை குறிப்பிடுகின்றனர். மூணாறு மலைச்சாலை மோசமானதாக இருந்தாலும், கொத்தமங்கலம்- அடிமலை இடையிலான சாலையில் இயற்கையின் வனப்பை காண கண்கோடி வேண்டும்.

நேரல்- மதேரன்

நேரல்- மதேரன்

மராட்டிய மாநிலம், நேரல்- மதேரன் இடையிலான 108கிமீ தூரத்துக்கான மலைச்சாலையும் மிகவும் அபாயகரமான சாலைகளில் ஒன்று. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தது.

 
Most Read Articles

English summary
The most dangerous roads of India is discussed here.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X