தம்மாதுண்டு இடம்... காரை சும்மா நிறுத்தி வைப்பதற்கு 10 கோடி ரூபாய் செலவு... காரணம் தெரிந்தால் ஆடிப்போயிருவீங்க

வாகனத்தை நிறுத்தி வைப்பதற்காக வீட்டு உரிமையாளர் ஒருவர் சுமார் 10 கோடி ரூபாயை செலவிட்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தம்மாதுண்டு இடம்... காரை சும்மா நிறுத்தி வைப்பதற்கு 10 கோடி ரூபாய் செலவு... காரணம் தெரிந்தால் ஆடிப்போயிருவீங்க

இந்தியா உள்பட அனைத்து நாடுகளில் வாகன பெருக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவை எடுத்து கொண்டால், ஒவ்வொரு மாதமும் இங்கு பல லட்சக்கணக்கான வாகனங்கள் விற்பனையாகி கொண்டுள்ளன. இதில், டூவீலர், கார்கள், பேருந்துகள் மற்றும் லாரிகள் என அனைத்து வகையான வாகனங்களும் அடக்கம்.

தம்மாதுண்டு இடம்... காரை சும்மா நிறுத்தி வைப்பதற்கு 10 கோடி ரூபாய் செலவு... காரணம் தெரிந்தால் ஆடிப்போயிருவீங்க

இந்த வாகன பெருக்கத்தால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிக கடுமையாக அதிகரித்துள்ளது. மேலும் வாகனங்களை நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களது வாகனங்களை வீடுகளுக்கு வெளியே பாதுகாப்பாற்ற முறையில் பலர் நிறுத்தி வைக்கின்றனர். இதன் காரணமாக மற்ற வாகனங்களின் போக்குவரத்தில் இடையூறு, வாகன திருட்டு என பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

தம்மாதுண்டு இடம்... காரை சும்மா நிறுத்தி வைப்பதற்கு 10 கோடி ரூபாய் செலவு... காரணம் தெரிந்தால் ஆடிப்போயிருவீங்க

இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்த நிலைமைதான் காணப்படுகிறது. குறிப்பாக ஹாங்காங்கில் வாகன நிறுத்திடத்திற்கு அதிக டிமாண்ட் இருந்து வருகிறது. இதை நிரூபிக்கும் வகையில், ஹாங்காங்கில் வாகன நிறுத்துமிடம் ஒன்று சுமார் 10 மில்லியன் ஹாங்காங் டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தம்மாதுண்டு இடம்... காரை சும்மா நிறுத்தி வைப்பதற்கு 10 கோடி ரூபாய் செலவு... காரணம் தெரிந்தால் ஆடிப்போயிருவீங்க

அமெரிக்க மதிப்பில் பார்த்தால் இது சுமார் 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். நமது இந்திய மதிப்பில் பார்த்தால், இதன் மதிப்பு சுமார் 9.43 கோடி ரூபாய்!!! ஹாங்காங்கின் பீக் பகுதியில் மவுண்ட் நிக்கோல்சன் டெவலப்மெண்ட் அமைந்துள்ளது. இது அல்ட்ரா-லக்ஸரி குடியிருப்பு ஆகும். இங்கு ஏராளமான வாகன நிறுத்துமிடங்கள் சமீபத்தில் விற்பனை செய்யப்பட்டன.

தம்மாதுண்டு இடம்... காரை சும்மா நிறுத்தி வைப்பதற்கு 10 கோடி ரூபாய் செலவு... காரணம் தெரிந்தால் ஆடிப்போயிருவீங்க

இந்த குடியிருப்பின் பேஸ் 2 மற்றும் 3-ல் உள்ள 29 வாகன நிறுத்துமிடங்களை கட்டுமான நிறுவனங்களான வார்ஃப் (ஹோல்டிங்ஸ்) மற்றும் நன் ஃபங் குழுமம் ஆகியவை விற்பனை செய்தன. டெண்டர் முறை மூலம் வீட்டு உரிமையாளர்களுக்கு இந்த வாகன நிறுத்துமிடங்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டன. இதில், ஒரு வாகன நிறுத்துமிடம்தான் 9.43 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

தம்மாதுண்டு இடம்... காரை சும்மா நிறுத்தி வைப்பதற்கு 10 கோடி ரூபாய் செலவு... காரணம் தெரிந்தால் ஆடிப்போயிருவீங்க

அனேகமாக இதுதான் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த வாகன நிறுத்துமிடமாக இருக்க கூடும் என்று நம்பப்படுகிறது. இந்த 134.5 சதுர அடி வாகன நிறுத்துமிடம், மவுண்ட் நிக்கோல்சன் டெவலப்மெண்ட் குடியிருப்பின் பேஸ்மெண்ட்டில் அமைந்துள்ளது. உலகில் இட நெருக்கடி மிகவும் அதிகம் கொண்ட பகுதிகளில் ஒன்றாக ஹாங்காங் அறியப்படுகிறது.

தம்மாதுண்டு இடம்... காரை சும்மா நிறுத்தி வைப்பதற்கு 10 கோடி ரூபாய் செலவு... காரணம் தெரிந்தால் ஆடிப்போயிருவீங்க

அங்கு வாழ்வதாகட்டும் அல்லது வாகனங்களை நிறுத்துவதாகட்டும் அதற்கு அதிக தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கும். இதனால் வாழ்வதற்கு மிகவும் அதிக செலவு ஆகும் பகுதிகளில் உலகிலேயே முதன்மையான ஒன்றாக ஹாங்காங் திகழ்கிறது. கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் தேவைப்படுவதால், அங்கு பலர் இவ்வாறு அதிக தொகையை செலவு செய்கின்றனர்.

தம்மாதுண்டு இடம்... காரை சும்மா நிறுத்தி வைப்பதற்கு 10 கோடி ரூபாய் செலவு... காரணம் தெரிந்தால் ஆடிப்போயிருவீங்க

ஒருவேளை முதலீடாக சிலர் இதனை செய்கிறார்களோ? என்று நீங்கள் நினைக்கலாம். அதாவது நல்ல விலை வரும்போது விற்பனை செய்வதற்காக வாங்குகிறார்களா? என்ற சந்தேகம் வருவது இயல்புதான். ஆனால் தங்களது சொந்த பயன்பாட்டிற்காகவே இவ்வாறு அதிக தொகைக்கு வாகன நிறுத்துமிடங்களை பலர் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தம்மாதுண்டு இடம்... காரை சும்மா நிறுத்தி வைப்பதற்கு 10 கோடி ரூபாய் செலவு... காரணம் தெரிந்தால் ஆடிப்போயிருவீங்க

இதற்கு முன்பாக உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த வாகன நிறுத்துமிடம் என்ற சாதனையும் இதே ஹாங்காங்கில்தான் படைக்கப்பட்டிருந்தது. கடந்த 2019ம் ஆண்டு ஹாங்காங்கில் ஒருவர் ஒரு வாகன நிறுத்துமிடத்தை 7.6 மில்லியன் ஹாங்காங் டாலர்களுக்கு வாங்கியிருந்தார். இந்திய மதிப்பில் இது தோராயமாக 7.16 கோடி ரூபாய் ஆகும்.

தம்மாதுண்டு இடம்... காரை சும்மா நிறுத்தி வைப்பதற்கு 10 கோடி ரூபாய் செலவு... காரணம் தெரிந்தால் ஆடிப்போயிருவீங்க

ஹாங்காங் மட்டுமின்றி இங்கிலாந்து போன்ற உலகின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது இதுபோல் மிகவும் அதிக விலைக்கு வாகன நிறுத்துமிடங்கள் விற்பனையாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வாகன பெருக்கத்தால் இதுபோன்ற பிரச்னைகளை தவிர்ப்பதற்கு, உலகின் பல்வேறு நாடுகளும் தற்போது பொது போக்குவரத்தை ஊக்குவித்து வருகின்றன.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Most Expensive Parking Spot Sold For Rs 9.43 Crore: Hong Kong Sets World Record. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X