இவ்ளோ நாளா வெறும் ஸ்டைல்னு தப்பா நெனச்சுட்டோமே... காரின் மேற்கூரையில் இந்த கம்பி எதுக்காக இருக்கு தெரியுமா?

காரின் மேற்கூரையில் எதற்காக ரூஃப் ரெயில்கள் வழங்கப்படுகின்றன? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இவ்ளோ நாளா வெறும் ஸ்டைல்னு தப்பா நெனச்சுட்டோமே... காரின் மேற்கூரையில் இந்த கம்பி எதுக்காக இருக்கு தெரியுமா?

ஒரு சில கார்களின் மேற்கூரையில் கம்பி போன்ற 'ரெயில்கள்' (Rails) இணைக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்க முடியும். மேற்கூரையின் பக்கவாட்டில், அதாவது இரண்டு பக்கமும் இந்த ரெயில்கள் பொருத்தப்பட்டிருக்கும். குறிப்பாக க்ராஸ்ஓவர் மற்றும் எஸ்யூவி ரக கார்களின் மேற்கூரையில் இந்த ரெயில்களை அதிகமாக பார்க்கலாம்.

இவ்ளோ நாளா வெறும் ஸ்டைல்னு தப்பா நெனச்சுட்டோமே... காரின் மேற்கூரையில் இந்த கம்பி எதுக்காக இருக்கு தெரியுமா?

இதற்கு 'ரூஃப் ரெயில்கள்' (Roof Rails) என்று பெயர். காரின் மேற்கூரையில் லக்கேஜை வைத்து எடுத்து செல்வதற்கு ரூஃப் ரெயில்கள் பயன்படுகின்றன. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் ரூஃப் ரெயில்கள் வழங்கப்படுவது தற்போது ஒரு 'ட்ரெண்ட்' ஆக மாறி வருகிறது. ரூஃப் ரெயில்களின் நன்மைகள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

இவ்ளோ நாளா வெறும் ஸ்டைல்னு தப்பா நெனச்சுட்டோமே... காரின் மேற்கூரையில் இந்த கம்பி எதுக்காக இருக்கு தெரியுமா?

நீங்கள் காரில் அடிக்கடி தொலைதூர பயணங்களை மேற்கொள்பவர் என்றால், ரூஃப் ரெயில்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காரின் பின்னால் இருக்கும் 'பூட்' (Boot) பகுதியில் வைக்க முடியாத லக்கேஜ்களை ரூஃப் ரெயில் மூலம் காரின் மேற்கூரையில் வைத்து கொள்ளலாம். ஒரு சில கார்களில் இருக்கைகளை மடக்கி வைத்து கொள்ள கூடிய வசதி இருக்கும்.

இவ்ளோ நாளா வெறும் ஸ்டைல்னு தப்பா நெனச்சுட்டோமே... காரின் மேற்கூரையில் இந்த கம்பி எதுக்காக இருக்கு தெரியுமா?

நீங்கள் இருக்கைகளை மடக்கி வைத்து கொண்டால். காரின் 'பூட் ஸ்பேஸ்' (Boot Space) அதிகரிக்கும். அதாவது காரில் லக்கேஜ்களை வைப்பதற்கான இட வசதி உயரும். ஆனால் அனைத்து இருக்கைகளும் உயர்த்தப்பட்ட நிலையில் இருந்தால், அதாவது அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் அமர்ந்திருந்தால், பூட் ஸ்பேஸ் மிகவும் குறைவாகவே இருக்கும்.

இவ்ளோ நாளா வெறும் ஸ்டைல்னு தப்பா நெனச்சுட்டோமே... காரின் மேற்கூரையில் இந்த கம்பி எதுக்காக இருக்கு தெரியுமா?

அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் ரூஃப் ரெயில்களை பயன்படுத்தி, லக்கேஜ்களை காரின் மேற்கூரையில் வைத்து கொண்டு பயணம் செய்ய முடியும். அத்துடன் அடிக்கடி சாகச பயணங்களை மேற்கொள்பவர்களுக்கும் ரூஃப் ரெயில்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆஃப் ரோடு பயணங்களை மேற்கொள்பவர்களை 'கேம்ப்' (Camp) அமைத்து தங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இவ்ளோ நாளா வெறும் ஸ்டைல்னு தப்பா நெனச்சுட்டோமே... காரின் மேற்கூரையில் இந்த கம்பி எதுக்காக இருக்கு தெரியுமா?

இதற்கு தேவையான பொருட்களை ரூஃப் ரெயில் மூலம் காரின் மேற்கூரையில் வைத்து கொண்டு செல்லலாம். இந்தியாவில் தற்போது நிறைய கார்கள் ரூஃப் ரெயில்கள் உடன் வருகின்றன. ரூஃப் ரெயில்கள் இல்லாமலும் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் தேவைப்படும்பட்சத்தில் காரில் நீங்கள் ரூஃப் ரெயில்களை பொருத்தி கொள்ள முடியும்.

இவ்ளோ நாளா வெறும் ஸ்டைல்னு தப்பா நெனச்சுட்டோமே... காரின் மேற்கூரையில் இந்த கம்பி எதுக்காக இருக்கு தெரியுமா?

ஆனால் பனரோமிக் சன்ரூஃப் உள்ள கார்களுக்கு ரூஃப் ரெயில்கள் பொருத்தமாக இருக்காது என்கின்றனர். விலை உயர்ந்த ஒரு சில கார்களில் இன்னமும் கூட பனரோமிக் சன்ரூஃப் வழங்கப்படாமல் இருப்பதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ரூஃப் ரெயில்கள் மிகவும் அவசியம் என்பதால், பனரோமிக் சன்ரூஃப் தவிர்க்கப்படுகிறது.

இவ்ளோ நாளா வெறும் ஸ்டைல்னு தப்பா நெனச்சுட்டோமே... காரின் மேற்கூரையில் இந்த கம்பி எதுக்காக இருக்கு தெரியுமா?

எனினும் அழகிற்காக காரில் ரூஃப் ரெயில் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் தாராளமாக பொருத்தி கொள்ளலாம். ரூஃப் ரெயில்கள் உங்களுக்கு நிச்சயம் பலன் அளிக்க கூடியதாக இருக்கும். காரில் அதிக லக்கேஜ்களை கொண்டு செல்ல வேண்டும் என நீங்கள் விரும்பினால், ரூஃப் ரெயில்கள்தான் உங்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று.

இவ்ளோ நாளா வெறும் ஸ்டைல்னு தப்பா நெனச்சுட்டோமே... காரின் மேற்கூரையில் இந்த கம்பி எதுக்காக இருக்கு தெரியுமா?

அதேபோல் மற்றவர்களின் பார்வைக்கு காரை கவர்ச்சியாக காட்ட வேண்டும் என விரும்புபவர்களுக்கும் ரூஃப் ரெயில்கள் ஏற்றவை. ஆனால் ரூஃப் ரெயில்கள் பொருத்தலாமா? அல்லது வேண்டாமா? என்பது அவரவர்களின் ரசனையை பொறுத்து மாறுபடும். ரூஃப் ரெயில்கள் மூலம் மற்றொரு முக்கியமான நன்மையும் உங்களுக்கு கிடைக்கும்.

இவ்ளோ நாளா வெறும் ஸ்டைல்னு தப்பா நெனச்சுட்டோமே... காரின் மேற்கூரையில் இந்த கம்பி எதுக்காக இருக்கு தெரியுமா?

காரின் எடையை பேலன்ஸ் செய்வதற்கு டிரைவருக்கு உதவி செய்வதுதான் ரூஃப் ரெயில்களின் மிக முக்கியமான மற்றொரு நன்மை. குறிப்பிட்ட எடையை காரின் மேற்கூரையில் வைப்பதற்கு உதவி செய்வதன் மூலம் காரின் எடையை டிரைவர் சரியாக பேலன்ஸ் செய்யும் விஷயத்தில் ரூஃப் ரெயில்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

இவ்ளோ நாளா வெறும் ஸ்டைல்னு தப்பா நெனச்சுட்டோமே... காரின் மேற்கூரையில் இந்த கம்பி எதுக்காக இருக்கு தெரியுமா?

குறைவான விலையில் இன்று நிறைய ரூஃப் ரெயில்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் அதிக எடையை அடிக்கடி கொண்டு செல்ல கூடியவர்கள் விலையை பொருட்படுத்தாமல், தரத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்குவது அவசியம். குறைவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக தரமற்ற ரூஃப் ரெயில்களை வாங்கினால் பிரச்னைகள் ஏற்படலாம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Most important benefits of car roof rails
Story first published: Saturday, October 23, 2021, 15:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X