உங்க காரில் இந்த சீட் இருந்தால் பெட்ரோல், டீசல் செலவு மிச்சம்... இவ்ளோ நாளா நமக்கு தெரியாம போச்சே...

உங்கள் காரில் கூல்டு சீட் இருந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

உங்க காரில் இந்த சீட் இருந்தால் பெட்ரோல், டீசல் செலவு மிச்சம்... இவ்ளோ நாளா நமக்கு தெரியாம போச்சே...

ஒரு சில முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் தற்போது கூல்டு சீட் (Cooled Seats) வசதியை வழங்கி வருகின்றன. பொதுவாக வெளிப்புறங்களில் இருக்கும் வெப்ப நிலையை விட, காரின் கேபினுக்குள் அதிக வெப்ப நிலை இருக்கும். அப்படிப்பட்ட சூழலில் காரை நீங்கள் நீண்ட நேரம் வெயிலில் நிறுத்தியிருந்தால், கேபின் அதிக சூடாகி விடும்.

உங்க காரில் இந்த சீட் இருந்தால் பெட்ரோல், டீசல் செலவு மிச்சம்... இவ்ளோ நாளா நமக்கு தெரியாம போச்சே...

அப்போது உங்களால் காரின் இருக்கையில் உட்காரவே முடியாது. வெப்பம் அனலாய் கொதிக்கும். எனினும் காரில் கூல்டு சீட் இருந்தால், இந்த பிரச்னையை எளிதாக சமாளிக்கலாம். இது மட்டுமல்லாது, கூல்டு சீட்கள் இன்னும் பல்வேறு நன்மைகளை உங்களுக்கு வழங்குகின்றன. அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் விரிவாக வழங்கியுள்ளோம்.

உங்க காரில் இந்த சீட் இருந்தால் பெட்ரோல், டீசல் செலவு மிச்சம்... இவ்ளோ நாளா நமக்கு தெரியாம போச்சே...

வியர்வை கறையை நினைத்து கவலைப்பட வேண்டாம்

சூடான இருக்கையில் நீங்கள் அமர்ந்திருந்தால், உங்கள் முதுகு பகுதியில் அதிகமாக வியர்த்து கொட்டி விடும். இதன் காரணமாக உங்கள் சட்டையின் பின் பகுதியில் கறை ஏற்படலாம். நீங்கள் முக்கியமான ஓரிடத்திற்கு செல்வதாக இருந்தால், இது உங்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். ஆனால் கூல்டு இருக்கைகள் இந்த பிரச்னையை தவிர்க்கின்றன. ஏனெனில் குளிர்ச்சியான காற்று நேரடியாக உங்கள் உடலுக்கு வரும்.

உங்க காரில் இந்த சீட் இருந்தால் பெட்ரோல், டீசல் செலவு மிச்சம்... இவ்ளோ நாளா நமக்கு தெரியாம போச்சே...

தனிப்பட்ட கண்ட்ரோல்கள்

உங்களுடைய காரில் வழக்கமான ஏர் கண்டிஷன் வசதி இருந்தால், காரில் அமர்ந்திருக்கும் அனைவரும் ஒரே அளவிலான குளிர்ச்சியைதான் அனுபவிக்க முடியும். ஆனால் கூல்டு சீட் வசதி இருந்தால், ஓட்டுனரும் மற்றும் பயணிகளும் தங்கள் தேவைக்கு ஏற்ப குளிர்ச்சியை அனுபவிக்க முடியும். தனிப்பட்ட கண்ட்ரோல்கள் இதற்கு உங்களை அனுமதிக்கின்றன.

உங்க காரில் இந்த சீட் இருந்தால் பெட்ரோல், டீசல் செலவு மிச்சம்... இவ்ளோ நாளா நமக்கு தெரியாம போச்சே...

எரிபொருள் சேமிப்பு

ஏர் கண்டிஷனர்கள் எரிபொருளை அதிகம் குடித்து விடும் என்பது நமக்கு தெரியும். ஆனால் உங்களது காரில் கூல்டு சீட் வசதி இருந்தால், குறிப்பிடத்தக்க அளவு எரிபொருளை சேமிக்க முடியும். வழக்கமான ஏசி-யை பயன்படுத்துவதால், எரிபொருள் சிக்கனம் 24 சதவீதம் வரை குறைந்து விட்டதாகவும், அதே நேரத்தில் கார்பன் உமிழ்வு இரு மடங்கு அதிகரித்து விட்டதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உங்க காரில் இந்த சீட் இருந்தால் பெட்ரோல், டீசல் செலவு மிச்சம்... இவ்ளோ நாளா நமக்கு தெரியாம போச்சே...

இந்தியா போன்ற நாடுகளுக்கு இது இரண்டுமே பிரச்னைதான். வாகனங்கள் நல்ல மைலேஜை வழங்கினால், இந்தியாவின் எரிபொருள் தேவை குறையும். இதன் விளைவாக கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்து, நாட்டிற்கு நன்மை ஏற்படும். அதே நேரத்தில் வாகனங்களால் சுற்றுச்சூழல் அதிகம் மாசுபடும் நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா உள்ளது. எனவே சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதும் முக்கியமான நன்மையே.

உங்க காரில் இந்த சீட் இருந்தால் பெட்ரோல், டீசல் செலவு மிச்சம்... இவ்ளோ நாளா நமக்கு தெரியாம போச்சே...

சௌகரியம்

எரிபொருளை சேமிக்கும் அதே நேரத்தில், நல்ல சௌகரியத்தையும் கூல்டு சீட்கள் வழங்கும். நாள் முழுக்க சூடான இருக்கையில் அமர்ந்திருந்து சோர்ந்து போய் விட்டீர்கள் என்றால், கூல்டு சீட்களுக்கு மாறுவது குறித்து நீங்கள் யோசிக்கலாம். இது உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் குளிர்ச்சியான பயணத்தை வழங்கும்.

உங்க காரில் இந்த சீட் இருந்தால் பெட்ரோல், டீசல் செலவு மிச்சம்... இவ்ளோ நாளா நமக்கு தெரியாம போச்சே...

இன்ஸ்டால் செய்ய முடியுமா?

சற்று விலை உயர்ந்த கார்களில்தான் கூல்டு சீட் வசதி வழங்கப்படுகிறது. ஒருவேளை உங்களுடைய காரில் கூல்டு சீட் வசதி இல்லாவிட்டால் கவலைப்பட வேண்டாம். உங்களிடம் உள்ள காரில் இந்த வசதியை நீங்கள் ஏற்படுத்தி கொள்ள முடியும். இந்த விஷயத்தில் அனுபவம் வாய்ந்த மெக்கானிக்கை நீங்கள் அணுகுவது நல்லது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Most Important Benefits Of Cooled Seats. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X