மாலை நேரம் வேண்டவே வேண்டாம்! இந்த ரகசியங்கள் தெரிந்தால் இனி காலை நேரத்தில் மட்டும்தான் விமானத்தில் போவீங்க

விமானத்தில் பயணம் செய்வதற்கு காலை நேரம்தான் சிறந்தது. அது ஏன்? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாலை நேரம் வேண்டவே வேண்டாம்! இந்த ரகசியங்கள் தெரிந்தால் இனி காலை நேரத்தில் மட்டும்தான் விமானத்தில் போவீங்க

நம்மில் பலரும் பேருந்துகள் மூலமான தொலை தூர பயணங்களை பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் மேற்கொள்கிறோம். ஆனால் விமான பயணங்களை பொறுத்தவரை காலை நேரங்களில் மேற்கொள்வதே சிறந்தது. அது ஏன்? என்பதற்கான பல்வேறு காரணங்களை இந்த செய்தியில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

மாலை நேரம் வேண்டவே வேண்டாம்! இந்த ரகசியங்கள் தெரிந்தால் இனி காலை நேரத்தில் மட்டும்தான் விமானத்தில் போவீங்க

காலையில் விமான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால், அதிகாலையிலேயே எழுந்திருக்க வேண்டும். இது உங்களுக்கு கொஞ்சம் கடினமான விஷயமாக இருக்கலாம். எனினும் காலை நேரத்தில் விமான பயணங்களை மேற்கொள்வதால் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

மாலை நேரம் வேண்டவே வேண்டாம்! இந்த ரகசியங்கள் தெரிந்தால் இனி காலை நேரத்தில் மட்டும்தான் விமானத்தில் போவீங்க

மதியம் மற்றும் மாலை நேர விமானங்களுடன் ஒப்பிடும்போது காலை நேர விமானங்கள் தாமதமாவதற்கான வாய்ப்புகள் குறைவு என ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக நீங்கள் தாமதங்களை தவிர்க்க விரும்பினால், காலை 8 மணிக்கு முன்பு உள்ள விமானங்களில் பயணிப்பது நல்லது எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மாலை நேரம் வேண்டவே வேண்டாம்! இந்த ரகசியங்கள் தெரிந்தால் இனி காலை நேரத்தில் மட்டும்தான் விமானத்தில் போவீங்க

அதன் பிறகு விமானங்கள் தாமதமாக தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக மாலை 6 மணி போன்ற சமயங்களில் விமானங்களின் புறப்பாடு தாமதம் ஆவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது. எனவே தாமதம் மூலம் உங்கள் பொன்னான நேரம் வீணாகாமல் தவிர்க்க வேண்டுமென்றால், விமான பயணங்களை காலை நேரத்தில் மேற்கொள்வதுதான் சிறந்தது.

மாலை நேரம் வேண்டவே வேண்டாம்! இந்த ரகசியங்கள் தெரிந்தால் இனி காலை நேரத்தில் மட்டும்தான் விமானத்தில் போவீங்க

அத்துடன் முந்தைய விமானங்கள் அனைத்தும் இரவு நேரத்தில் லேண்ட் ஆகியிருக்கும் என்பதால், காலை நேரத்தில் வான் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் காலைக்கு பிறகு விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக டேக்-ஆஃப் ஆக தொடங்கும்.

மாலை நேரம் வேண்டவே வேண்டாம்! இந்த ரகசியங்கள் தெரிந்தால் இனி காலை நேரத்தில் மட்டும்தான் விமானத்தில் போவீங்க

அப்போது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள், விமானங்களின் புறப்பாடு மற்றும் லேண்டிங்கை தாமதப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதுதவிர அதிகாலை நேரத்தில் புறப்படும் விமானங்கள் டர்புலென்ஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மாலை நேரம் வேண்டவே வேண்டாம்! இந்த ரகசியங்கள் தெரிந்தால் இனி காலை நேரத்தில் மட்டும்தான் விமானத்தில் போவீங்க

பெரும்பாலும் இடி மற்றும் அதன் விளைவாக உண்டாகும் நிலையற்ற காற்று ஆகியவை மதிய நேரத்தில்தான் ஏற்படும் என கூறுகின்றனர். அத்துடன் கூட்ட நெரிசலில் நிற்க முடியாது என கூறுபவர்களுக்கும் காலை நேரம்தான் உகந்தது. ஏனெனில் காலை நேரத்தில் விமான நிலையங்கள் பொதுவாக கூட்ட நெரிசல் இல்லாமல் இருக்கும்.

மாலை நேரம் வேண்டவே வேண்டாம்! இந்த ரகசியங்கள் தெரிந்தால் இனி காலை நேரத்தில் மட்டும்தான் விமானத்தில் போவீங்க

மேலும் சில விமான நிறுவனங்கள் காலை நேரத்தில் உள்ள தங்களது முதல் விமானத்தின் டிக்கெட்டை ஓரளவு குறைவான விலையில் வழங்குகின்றன. அதாவது காலைக்கு பின்னர் இருக்கும் விமானங்களின் டிக்கெட் கட்டணத்துடன் ஒப்பிடும்போது, காலை நேரத்தில் உள்ள விமானங்களின் டிக்கெட் கட்டணம் குறைவாக இருக்கும்.

மாலை நேரம் வேண்டவே வேண்டாம்! இந்த ரகசியங்கள் தெரிந்தால் இனி காலை நேரத்தில் மட்டும்தான் விமானத்தில் போவீங்க

பெரும்பாலான பயணிகள் காலை நேரத்தில் தூக்கம் கெடக்கூடாது என நினைத்து, அந்த நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்கின்றனர். இதன் காரணமாகவே காலை நேரத்தில் விமான நிறுவனங்கள் குறைவான விலையில் டிக்கெட்களை விற்பனை செய்கின்றனர். இதுபோன்ற காரணங்களால்தான் விமான பயணங்களை காலையில் மேற்கொள்வது நல்லது என கூறுகிறோம்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Most Important Benefits Of Early Morning Flights. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X