காரின் எந்த பாகத்தை திருடினால் திருடர்களுக்கு செம லாபம் தெரியுமா? ரிஸ்க் இல்லாம அங்க மட்டும்தான் கை வைப்பாங்க!

கார்களை திருடும் திருடர்கள் காரின் எந்தெந்த பாகங்களை எல்லாம் அதிகம் திருடுகிறார்கள் தெரியுமா? இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

காரின் எந்த பாகத்தைத் திருடினால் திருடர்களுக்கு செம லாபம் தெரியுமா? ரிஸ்க் இல்லாம அங்க மட்டும்தான் கை வைப்பாங்க !

இந்த உலகில் மனிதன் நேரத்தில் அதிர்ச்சியிலும் சோகத்திலும் மூழ்குகிறான் என்றால் இரண்டே விஷயம் தான் ஒன்று நெருக்கிய நபரின் மரணம் மற்றொன்று நாம் பயன்படுத்தும் பொருளை யாரோ ஒருவர் திருடிக்கொண்டு போவது. திருட்டு என்பது பெரும்பாலும் விலை மதிப்பு மிக்க பொருட்களில்தான் நடக்கும். இப்படியாக நாம ஆசை ஆசையாக வாங்கி பயன்படுத்தி வரும் காரிலும் பல சந்தர்ப்பங்களில் திருட்டுகள் நடந்துள்ளன.

காரின் எந்த பாகத்தைத் திருடினால் திருடர்களுக்கு செம லாபம் தெரியுமா? ரிஸ்க் இல்லாம அங்க மட்டும்தான் கை வைப்பாங்க !

முக்கியமாக பொது இடத்தில் காரை பார்க் செய்துவிட்டுச் சென்று திரும்ப வரும்போது ஒட்டு மொத்த காரோ அல்லது காரின் உதிரிப் பாகங்களோ திருடப்பட்டிருக்கும். இப்படியாக காரில் எந்தெந்த உதிரிப் பாகங்கள் எல்லாம் அதிகமாகத் திருடப்படுகிறது. எந்தெந்த உதிரிப் பாகங்களை எல்லாம் திருடினால் திருடர்களுக்கு லாபம்? எந்த பாகங்கள் திருடப்பட்டால் உங்களுக்குச் செலவு அதிகம் ஆகும் என்பது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம்

காரின் எந்த பாகத்தைத் திருடினால் திருடர்களுக்கு செம லாபம் தெரியுமா? ரிஸ்க் இல்லாம அங்க மட்டும்தான் கை வைப்பாங்க !

டயர் மற்றும் அலாய்கள்

பொது இடத்தில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தால் அந்த காரின் டயர்களை திருடுவது தான் சுலபம். பொதுவாகப் பஞ்சர் போடுவது போல ஒருவர் வந்து உங்கள் காரின் டயர்களை அதன் அலாய்களோடு திருடிச்செல்லலாம். இவ்வாறாகத் திருடப்படும் பொருளை டயர் தனியாக, ட்யூப் தனியாக, அலாய் தனியாகப் பிரித்து பிரித்து செஹேண்ட் ஹேண்ட் மார்கெட்டில் விற்பனை செய்யலாம். இந்த பாகம் திருடப்பட்டால் ஒரு சராசரி காரில் ரூ25 ஆயிரம் ரூ50 ஆயிரம் வரை செலவு செய்யாமல் காரை நீங்கள் நகரத்த கூட முடியாது.

காரின் எந்த பாகத்தைத் திருடினால் திருடர்களுக்கு செம லாபம் தெரியுமா? ரிஸ்க் இல்லாம அங்க மட்டும்தான் கை வைப்பாங்க !

பெயர் பேட்ஜ்கள்

பொதுவாக கார்களில் கார் தயாரிப்பு நிறுவனத்தின் லோகா பேட்ஜ்களாக வழங்கப்பட்டிருக்கும். வெளி மார்கெட்டில் இந்த ஒரிஜினல் பேட்களுக்கும் நல்ல மதிப்பு இருக்கிறது. குறிப்பாக விலையுயர்ந்த வாகனங்களான பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஸ்கோடா ஆகிய நிறுவனங்களின் ஒரிஜினல் பேட்ஜ் நல்ல விலையில் வாங்கப்படும். இதே நேரம் பொதுவெளியில் இதைத் திருடுவதும் சுலபம் தான். அதனால் இந்த பெயர் பேட்ஜ்களும் அதிகம் திருடப்படுகிறது.

காரின் எந்த பாகத்தைத் திருடினால் திருடர்களுக்கு செம லாபம் தெரியுமா? ரிஸ்க் இல்லாம அங்க மட்டும்தான் கை வைப்பாங்க !

கேட்டலிட்டிக் கர்வெர்டர்கள்

இது காரின் எக்ஸாஸ்ட் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் விலை உயர்ந்த கார்களில் எமிஷன்களை கட்டுப்படுத்த இதைப் பயன்படுத்துவார்கள். இந்த கேட்டலிட்டிக் கர்வெர்டருக்குள் சிறிதளவு பிளாட்டினம், பிளாடினம், மற்றும் ரோடினம் ஆகிய பொருட்கள் இருக்கும். இதை விலை தங்கத்தை விட அதிகம். பொதுவாக இதைச் சாதாரண திருடர்கள் திருட மாட்டார்கள். ஆனால் ஆட்டொமொபைல் குறித்து அத்தனை விஷயங்களும் தெரிந்த நபரால் தான் இந்த திருட்டைச் செய்ய முடியும். இதுவும் பொது இடத்தில் கார் நிறுத்தப்பட்டிருந்தால் அதை ரிப்பேர் பார்ப்பது போலத் திருடுவது சுலபம்

காரின் எந்த பாகத்தைத் திருடினால் திருடர்களுக்கு செம லாபம் தெரியுமா? ரிஸ்க் இல்லாம அங்க மட்டும்தான் கை வைப்பாங்க !

சைடு கண்ணாடி

பொதுவாக சைடு கண்ணாடிகள் அதிக விலை இருக்காது. ஆனால் ஆங்காங்கே பொது இடத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் சைடு கண்ணாடிகள் திருடப்பட்டுள்ளன. இதை ஒரு ஜாலிக்காக திருடுபவர்கள், அல்லது நமக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர்கள் இதைத் திருடுவார்கள். இந்த பொருள் திருடப்பட்டால் கார் உரிமையாளருக்கு மற்ற பொருட்களைக் காட்டிலும் செலவு குறைவு தான்.

காரின் எந்த பாகத்தைத் திருடினால் திருடர்களுக்கு செம லாபம் தெரியுமா? ரிஸ்க் இல்லாம அங்க மட்டும்தான் கை வைப்பாங்க !

காரின் பேட்டரி

ஒரு கார் பொது வெளியில் நீண்ட நாட்களாக நின்று கொண்டிருப்பதை ஒரு திருடன் கவனித்துவிட்டான் என்றால் அவன் கவனம் முதலில் அந்த காரில் பேட்டரிக்கு தான் செல்லும் ஒரு நாள் யாரும் பார்க்காத நேரம் பார்த்த காரை ரிப்பேர் பார்ப்பது போல் காரின் பேனட்டை திறந்து அதில் உள்ள பேட்டரியை எளிதாகத் திருடிச்செல்ல முடியும். இதைத் திருடர்கள் பட்ட பகலில் கூடச் செய்யலாம் சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் காரின் உரிமையாளர் மட்டும் இல்லை என்றால் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது.

காரின் எந்த பாகத்தைத் திருடினால் திருடர்களுக்கு செம லாபம் தெரியுமா? ரிஸ்க் இல்லாம அங்க மட்டும்தான் கை வைப்பாங்க !

வீல் கேப்கள்

இன்று பெரும்பாலான அலாய் வீல் இல்லாத கார்களில் வீல் கேப்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது பெரும்பாலும் எளிதாகக் கழட்டி மாட்டும் படி தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். திருடர்கள் பொது இடத்தில் நிறுத்தப்பட்ட காரின் வீல் கேப்கள் புதிதாக இருந்தால் அதைக் கழட்டிப் பாதி விற்பனை செய்ய யோசித்து அதை யாரும் பார்க்காத நேரத்தில் கழட்டி வந்துவிடுவார்கள். இந்த திருட்டும் பல இடங்களில் மிகச் சாதாரணமாக நடப்பது தான்.

காரின் எந்த பாகத்தைத் திருடினால் திருடர்களுக்கு செம லாபம் தெரியுமா? ரிஸ்க் இல்லாம அங்க மட்டும்தான் கை வைப்பாங்க !

மியூசிக் சிஸ்டம்

கார்கள் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தால் அந்த காருக்குள் இருந்து திருடர்கள் முதலில் திருடும் பொருள் மியூசிக் சிஸ்டம் தான். இதற்குத் தான் மார்கெட்டில் செம டிமாண்ட் உள்ளது.எந்த மியூசிக் சிஸ்டமாக இருந்தாலும் மார்கெட்டில்நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம். அதனால் பெரும்பாலும் திருடர்கள் தனியாக இருக்கும் காரை திறக்க முடிந்தால் முதலில் அதில் உள்ள மியூசிக் சிஸ்டத்தை ஸ்பீக்கருடன் சேர்ந்து திருடத்தான் முயற்சி செய்வார்கள். பல திருடர்களுக்கு இது சக்சஸ் ஆகியும் உள்ளது.

காரின் எந்த பாகத்தைத் திருடினால் திருடர்களுக்கு செம லாபம் தெரியுமா? ரிஸ்க் இல்லாம அங்க மட்டும்தான் கை வைப்பாங்க !

காரின் இன்ஜின்/ கார்

இன்று ஒரு இடத்தில் நிற்கும் காரை திருடுவது குறைந்துவிட்டது. கார்களில் ஜிபிஎஸ் கருவிகள் இருப்பதால் மார்டடிக்கொள்வோம் எனப் பயந்து திருடர்கள் ஒட்டு மொத்த காரை திருடுவதைத் தவிர்க்கின்றனர். ஆனால் காரின் இன்ஜின் திருடுவது நடக்கிறது. இது மிகச் சாதாரண விஷயம் அல்ல ஒரே ஒரு நபரால் இதைத் திருட முடியாது. சில கூட்டாகச் சேர்ந்து திருட முடியும். ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் இரவு நேரங்களில் இவ்வாறான திருட்டுகள் நடைபெறும். ஒரு காரின் இன்ஜின் திருடப்பட்டுவிட்டால் அவ்வளவு தான் காரே திருட்டுப் போனதற்குச் சமம் தான் இன்ஃஜின் மட்டும் திருடப்பட்டால் அதை எண்ணை வைத்து மீண்டும் இன்ஜினை திரும்பப் பெறுவது என்பதெல்லாம் நடக்காத ஒரு விஷயம்.

Most Read Articles
English summary
Most Stolen Car Parts by thieves without big risk
Story first published: Thursday, July 28, 2022, 18:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X