ப்ளஸ்-2 தேர்வு எழுதும் முன் 300 கிமீ ஸ்கூட்டர் ஓட்டிய மாணவி... நடந்ததை கேட்டு மனம் நொறுங்கிய மக்கள்

ப்ளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவியின் வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்கள் வெளியாகி, அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ப்ளஸ்-2 தேர்வு எழுதும் முன் 300 கிமீ ஸ்கூட்டர் ஓட்டிய மாணவி... நடந்ததை கேட்டு மனம் நொறுங்கிய மக்கள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது வெகுவாக தளர்த்தப்பட்டு விட்டது. கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளிலும் பேருந்து, ஆட்டோ மற்றும் டாக்ஸி உள்ளிட்ட வாகனங்கள் இயங்கி வருகின்றன. மக்கள் தங்களின் சொந்த வாகனங்களை பயன்படுத்துவதற்கும் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் இல்லை.

ப்ளஸ்-2 தேர்வு எழுதும் முன் 300 கிமீ ஸ்கூட்டர் ஓட்டிய மாணவி... நடந்ததை கேட்டு மனம் நொறுங்கிய மக்கள்

ஆனால் ஊரடங்கு தீவிரமாக அமலில் இருந்த கால கட்டத்தில், நிலைமை அப்படியே தலைகீழாக இருந்தது. பேருந்து, ஆட்டோ மற்றும் டாக்ஸி உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை. தனியார் கார், இரு சக்கர வாகனங்களை இயக்குவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. இதை மீறி இயக்கப்பட்ட வாகனங்களை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

ப்ளஸ்-2 தேர்வு எழுதும் முன் 300 கிமீ ஸ்கூட்டர் ஓட்டிய மாணவி... நடந்ததை கேட்டு மனம் நொறுங்கிய மக்கள்

எனவே அவசர தேவைகளுக்கு கூட பயணம் செய்ய முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். குறிப்பாக வேலையை இழந்த வெளி மாநில தொழிலாளர்களும், தேர்வு மற்றும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியவர்களும்தான் கடும் பாதிப்பை சந்தித்தனர். இவர்களில் பலர் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனம் போன்றவற்றில் பல நூறு கிலோ மீட்டர்கள் பயணித்தனர்.

ப்ளஸ்-2 தேர்வு எழுதும் முன் 300 கிமீ ஸ்கூட்டர் ஓட்டிய மாணவி... நடந்ததை கேட்டு மனம் நொறுங்கிய மக்கள்

அவர்களில் ஒருவர்தான் சுபாங்கி பாட்டீல். ஊரடங்கு சமயத்தில் நோய்வாய்ப்பட்ட தனது தாயை இவர் சுமார் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஸ்கூட்டியில் அழைத்து சென்றார். அதன்பின்பு வீட்டிற்கு திரும்ப வந்து ப்ளஸ்-2 தேர்வை எழுதினார். இப்படி கடும் சிரமத்திற்கு இடையே எழுதிய ப்ளஸ்-2 தேர்வில் அவர் 87 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

ப்ளஸ்-2 தேர்வு எழுதும் முன் 300 கிமீ ஸ்கூட்டர் ஓட்டிய மாணவி... நடந்ததை கேட்டு மனம் நொறுங்கிய மக்கள்

இதன் மூலமாக முதல் அமைச்சரின் லேப்டாப் திட்டத்தின் கீழ் 25,000 ரூபாய் தொகையை பெறுவதற்கும் அவர் தகுதி பெற்றுள்ளார். ஆனால் மகளின் இந்த சாதனையை பார்க்க அவரது தாய் தற்போது உயிருடன் இல்லை என்பதுதான் மிகவும் வருத்தமான ஒரு விஷயம். நாம் இங்கே பேசி கொண்டுள்ள சுபாங்கி பாட்டீல் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரை சேர்ந்தவர்.

ப்ளஸ்-2 தேர்வு எழுதும் முன் 300 கிமீ ஸ்கூட்டர் ஓட்டிய மாணவி... நடந்ததை கேட்டு மனம் நொறுங்கிய மக்கள்

சுபாங்கி பாட்டீலின் தந்தை ஒரு விவசாயி. கடந்த 2009ம் ஆண்டு சிறுநீரக செயலிழப்பால் அவர் உயிரிழந்தார். அதன்பின் சுபாங்கி பாட்டீலின் அம்மாதான் குடும்பத்தை முழுவதும் கவனித்து கொண்டார். அங்கன்வாடி பணியாளராக அவர் வேலை செய்து வந்தார். ஆனால் ஊரடங்கு சமயத்தில் அவரது உடல் நலம் மோசடைந்தது.

ப்ளஸ்-2 தேர்வு எழுதும் முன் 300 கிமீ ஸ்கூட்டர் ஓட்டிய மாணவி... நடந்ததை கேட்டு மனம் நொறுங்கிய மக்கள்

அப்போது சுபாங்கி பாட்டீலிடமும், அவரது மூத்த சகோதரியிடமும் பணம் இல்லை. எனவே என்ன செய்வது? என தெரியாமல் அவர்கள் தடுமாறினர். பின்னர் தங்களது தாயை பாட்டி வீட்டிற்கு அழைத்து செல்வது என முடிவு செய்தனர். இதுகுறித்து சுபாங்கி பாட்டீல் கூறுகையில், ''எங்களிடம் வெறும் 500 ரூபாய் மட்டுமே இருந்தது.

ப்ளஸ்-2 தேர்வு எழுதும் முன் 300 கிமீ ஸ்கூட்டர் ஓட்டிய மாணவி... நடந்ததை கேட்டு மனம் நொறுங்கிய மக்கள்

ஆனால் எனது தாயின் மருத்துவமனை செலவுகளுக்கு எங்கள் மாமாவால் பணம் கொடுக்க முடியும் என்பது எனக்கு தெரியும். எனவே பாட்டியின் வீட்டிற்கு அம்மாவை அழைத்த செல்ல முடிவு செய்தேன். இதன்பின்னர் என் அம்மாவை எனது ஸ்கூட்டியின் பின்னால் உட்கார வைத்து கொண்டு சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஹாராஷ்டிரா மாநிலம் சோப்டாவிற்கு சென்றேன்.

ப்ளஸ்-2 தேர்வு எழுதும் முன் 300 கிமீ ஸ்கூட்டர் ஓட்டிய மாணவி... நடந்ததை கேட்டு மனம் நொறுங்கிய மக்கள்

என் அம்மாவை போர்வையால் சுற்றி கொண்டேன். இதன்பின் தேர்வுக்காக நான் வீட்டிற்கு திரும்ப செல்ல வேண்டியிருந்தது. துரதிருஷ்டவசமாக எனது அம்மா கடந்த ஜூன் மாதம் உயிரிழந்து விட்டார்'' என்றார். இச்சம்பவம் தற்போது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ள சுபாங்கி பாட்டீலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ப்ளஸ்-2 தேர்வு எழுதும் முன் 300 கிமீ ஸ்கூட்டர் ஓட்டிய மாணவி... நடந்ததை கேட்டு மனம் நொறுங்கிய மக்கள்

விதிமுறைப்படி ப்ளஸ்-2 தேர்வில் 85 சதவீதம் அல்லது அதற்கும் மேலான மதிப்பெண்களை பெறும் ஸ்டேட் போர்டு மாணவர்களுக்கு, லேப்டாப் வாங்குவதற்காக 25,000 ரூபாய் வழங்கப்படும். சுபாங்கி பாட்டீல் 87 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளதால், இந்த தொகையை பெறுவதற்கு அவரும் தகுதி பெற்றுள்ளார். ஆனால் இந்த பணத்தை கல்லூரி கட்டணத்திற்கு பயன்படுத்த அவர் முடிவு செய்துள்ளார்.

ப்ளஸ்-2 தேர்வு எழுதும் முன் 300 கிமீ ஸ்கூட்டர் ஓட்டிய மாணவி... நடந்ததை கேட்டு மனம் நொறுங்கிய மக்கள்

சுபாங்கி பாட்டீலை போன்றே வறுமையில் உள்ள இன்னும் பல மாணவர்களும் இந்த தொகையை கல்லூரி கட்டணம் செலுத்துவதற்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
MP Girl Who Drove Her Ailing Mother 300 Km On A Two Wheeler, Scores 87 Per cent In Class 12. Read in Tamil
Story first published: Saturday, September 26, 2020, 16:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X