எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி??? மலைக்க வைக்கும் கலெக்ஷன்...!!!

By Arun

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கூல் கேப்டன் தல டோனி, பைக், கார்கள் மீது பேரார்வம் கொண்டவர். அவரது பைக், கார் கலெக்ஷன்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதுடன், மலைக்க வைக்கும் வகையில் உள்ளன. அதுபற்றிய விரிவான செய்தியை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

 எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி??? மலைக்க வைக்கும் கலெக்ஸன்...!!!

திரும்ப வந்த சிஎஸ்கே...!!!

2 ஆண்டுகள் தடைக்காலம் முடிந்த பிறகு, ஐபிஎல் தொடருக்கு திரும்பியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடித்து தூள் கிளப்பி கொண்டிருக்கிறது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியிருப்பதன் மூலம், ஐபிஎல் என்றாலே சிஎஸ்கேதான் என்பது, மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

 எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி??? மலைக்க வைக்கும் கலெக்ஸன்...!!!

37 வயதாகி விட்டாலும், சிஎஸ்கே அணியை திறம்பட வழிநடத்தும் அதன் கேப்டன் டோனிதான், இன்றைய இளசுகளின் ஹாட் டாபிக். மற்ற அணிகளின் கேப்டன்களே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு, சிஎஸ்கே அணியை ஓர் ராணுவம் போல் கட்டுக்கோப்பாக வழிநடத்துகிறார்.

 எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி??? மலைக்க வைக்கும் கலெக்ஸன்...!!!

டோனியின் செகண்ட் லவ்...!!!

நம்ம தல டோனிக்கு செகண்ட் லவ் ஒன்னு இருக்கு...!!! சாக்ஸி இருக்கப்ப என்னங்க சொல்றீங்க? என அதிர்ச்சியடைய வேண்டாம். பைக்குகளும், கார்களும்தான் டோனியின் செகண்ட் லவ்...!!!

 எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி??? மலைக்க வைக்கும் கலெக்ஸன்...!!!

பைக்குகள் மற்றும் கார்கள் மீதான டோனியின் காதல் நாம் அறிந்ததுதான். அவைகளுடனான டோனியின் உறவு, நாம் நினைப்பதை காட்டிலும் சற்று எமோஷனலானது.

 எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி??? மலைக்க வைக்கும் கலெக்ஸன்...!!!

ஆட்ட நாயகன் விருது வென்றதற்காக கிடைத்த பைக்கை மைதானத்தில் ஓட்டியதாகட்டும், தனது தாய் வீடான ராஞ்சி மற்றும் 2வது தாய் வீடான சென்னை மாநகரங்களில் அசால்ட்டாக பைக்கை எடுத்துக்கொண்டு ரவுண்டு வந்ததாகட்டும், பைக்குகள் மற்றும் கார்களின் மீதான தனது காதலை, பல சந்தர்ப்பங்களில் டோனி வெளியுலகிற்கு காட்டியுள்ளார்.

 எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி??? மலைக்க வைக்கும் கலெக்ஸன்...!!!

அப்படி இருக்கையில், தேடி தேடி சேகரிக்கப்பட்ட பைக் மற்றும் கார்களை, டோனி தனது கேரேஜ் முழுவதும் நிரப்பி வைத்துக்கொண்டு, அவற்றை அணு அணுவாக ரசித்து வருகிறார். அவரிடம் உள்ள பைக்குகள் மற்றும் கார்களின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

 எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி??? மலைக்க வைக்கும் கலெக்ஸன்...!!!

ஹம்மர் எச்2

டோனிக்கு கார்கள் பிடிக்கும்தான். ஆனால் எஸ்யூவி கார்கள் என்றால்தான் டோனிக்கு கொள்ளை பிரியம். அவரிடம் உள்ள அனைத்து கார்களும் எஸ்யூவி வகையை சேர்ந்தவைதான். இதில், குறிப்பிடத்தகுந்த கவர்ச்சியான கார் என்றால் ஹம்மர் எச்2தான்.

 எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி??? மலைக்க வைக்கும் கலெக்ஸன்...!!!

ஹம்மர் எச்2 காரை, டோனி தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்து கொண்டார். ராஞ்சியில் ஊர் சுற்றவும், ஏர் போர்ட்டுக்கு வரவும் டோனி ஹம்மர் எச்2 காரைதான் அடிக்கடி பயன்படுத்துவார். ஒரு முறை பஸ்ஸில் சென்று கொண்டிருந்த நியூசிலாந்து வீரர்களை ஓவர் டேக் செய்து டோனி வாய் பிளக்க வைத்தது இந்த காரில்தான்.

 எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி??? மலைக்க வைக்கும் கலெக்ஸன்...!!!

புகழ்பெற்ற ஹம்மர் எச்2 காரில் பொருத்தப்பட்டுள்ள 6.2 லிட்டர் வி8 பெட்ரோல் இன்ஜின், அதிகபட்சமாக 393 பிஎச்பி பவரை உருவாக்கும். இதன் ஆன் ரோடு விலை 75 லட்சம்.

 எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி??? மலைக்க வைக்கும் கலெக்ஸன்...!!!

மெர்ஸிடெஸ்-பென்ஸ் ஜிஎல்இ

டோனியின் கேரேஜூக்கு வந்துள்ள புதிய எஸ்யூவி கார் மெர்ஸிடெஸ்-பென்ஸ் ஜிஎல்இ. இந்த காரை டோனி, மகாராஷ்டிராவில் வைத்து பயன்படுத்துகிறார். மகாராஷ்டிரா செல்லும் போதெல்லாம், டோனியின் சாய்ஸ் மெர்ஸிடெஸ்-பென்ஸ் ஜிஎல்இதான். மூன்று இன்ஜின் ஆப்ஷன்களில் இந்த கார் மார்க்கெட்டில் கிடைக்கிறது.

 எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி??? மலைக்க வைக்கும் கலெக்ஸன்...!!!

ஆடி க்யூ7

ஆடி க்யூ7 காரையும் டோனி அடிக்கடி பயன்படுத்துவார். குறிப்பாக இந்த காரை அவரேதான் ஓட்டிச்செல்வார். டோனியிடம் இருப்பது ஆடி க்யூ7 பழைய மாடல். இதில், பொருத்தப்பட்டுள்ள வி12 டர்போ டீசல் இன்ஜின், 800 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதன் ஆன் ரோடு விலை கிட்டத்தட்ட 90 லட்சம்.

 எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி??? மலைக்க வைக்கும் கலெக்ஸன்...!!!

லேண்டு ரோவர் ப்ரீலேண்டர் 2

இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்ட முதல் லேண்டு ரோவர் எஸ்யூவி இதுதான். இந்த காரில் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 148 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 187 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய மாடலும் கூட மார்க்கெட்டில் கிடைக்கிறது. இதன் விலை 52 லட்ச ரூபாய்.

 எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி??? மலைக்க வைக்கும் கலெக்ஸன்...!!!

பெராரி 599 ஜிடிஓ

பெராரி 599 ஜிடிஓ காரை எடுத்தால், ரேஸில் பறப்பது போல்தான் ஓட்டவே தோன்றும். 8,250 ஆர்பிஎம்மில் 661 பிஎச்பி பவரை பெராரி 599 ஜிடிஓ உருவாக்கும். இதன் விலை சுமார் 3 கோடி ரூபாய்.

 எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி??? மலைக்க வைக்கும் கலெக்ஸன்...!!!

போர்ஸே 911

மிட்சுபிசி நிறுவனத்தில் இருந்து வெளிவந்த புகழ்பெற்ற எஸ்யூவி கார் பஜீரோ. இதன் விலை 22 லட்ச ரூபாய். இந்த காருடன் சேர்த்து 50 லட்ச ரூபாய் மதிப்பிலான ஜிஎம்சி சியரா, 2.50 கோடி ரூபாய் மதிப்பிலான போர்ஸே 911, 21 லட்ச ரூபாய் மதிப்பிலான மிட்சுபிசி அவுட்லேண்டர் உள்ளிட்ட கார்களும் டோனியின் கேரேஜை அலங்கரிக்கின்றன.

 எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி??? மலைக்க வைக்கும் கலெக்ஸன்...!!!

மகேந்திரா ஸ்கார்பியோ

டோனியின் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மகேந்திரா ஸ்கார்பியோ (10.5 லட்ச ரூபாய்), மாருதி சுசூகி எஸ்எக்ஸ்4 (10 லட்ச ரூபாய்), டொயாட்டோ கோரெல்லா (18 லட்ச ரூபாய்) உள்ளிட்ட கார்களும் டோனியிடம் உள்ளன.

 எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி??? மலைக்க வைக்கும் கலெக்ஸன்...!!!

மலைத்து விட வேண்டாம்

இவை அனைத்தும் டோனியிடம் உள்ள கார்கள் மட்டும்தான். இதற்கே மலைத்து விட வேண்டாம். ஏனெனில் டோனியிடம் இன்னும் எக்கச்சக்கமான பைக்குகள் உள்ளன.

 எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி??? மலைக்க வைக்கும் கலெக்ஸன்...!!!

யமஹா ஆர்டி350

யமஹா ஆர்டி350க்கு மாற்று என்பதே கிடையாது. 2 யமஹா ஆர்டி350 பைக்குகளை டோனி வைத்துள்ளார். டோனிக்கு மிகவும் நெருக்கமான பைக் இது. ஏனென்றால், இதில் ஒன்றுதான் டோனியின் முதல் பைக். இதனை 4,500 ரூபாய்க்கு அவர் வாங்கினார். இந்த பைக்கை டோனி கழுவுவதையும், ரிப்பேரை சரி செய்வதையும் அடிக்கடி பார்த்திருக்கலாம்.

 எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி??? மலைக்க வைக்கும் கலெக்ஸன்...!!!

கான்பெடரேட் ஹெல்கேட் எக்ஸ் 132

உலகில் மொத்தமாக 150 கான்பெடரேட் ஹெல்கேட் எக்ஸ் 132 பைக்குகள்தான் உள்ளன. இதில், ஒன்றை நம்ம தல டோனி வைத்துள்ளார். அவ்வளவு ஏன், தென் கிழக்கு ஆசிய நாடுகளிலேயே இந்த பைக்கை வைத்திருக்கும் ஒரே அதிர்ஷ்டக்காரர் டோனிதான்.

 எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி??? மலைக்க வைக்கும் கலெக்ஸன்...!!!

கான்பெடரேட் ஹெல்கேட் எக்ஸ் 132 பைக்கில் 2.2 லிட்டர் வி-டிவின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 121 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

 எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி??? மலைக்க வைக்கும் கலெக்ஸன்...!!!

ஹார்லி டேவிட்சன் பேட்பாய்

ஹார்லி டேவிட்சன் பேட்பாய் கண்கவர் லுக்கை கொடுக்க கூடியது. ராஞ்சியில் டோனி அடிக்கடி இந்த பைக்கில் வலம் வந்துள்ளார். இந்த பைக்கில், 1,690 சிசி திறனுடன் பொருத்தப்பட்டுள்ள வி-டிவின் இன்ஜின் 132 பிஎச்பி பவரை உண்டாக்கும்.

 எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி??? மலைக்க வைக்கும் கலெக்ஸன்...!!!

பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார்

டோனியின் கலெக்ஸன்களில் உள்ள மற்றொரு வின்டேஜ் பைக் பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார். இந்த பைக்கில், 500 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 48 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.

 எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி??? மலைக்க வைக்கும் கலெக்ஸன்...!!!

கவாஸ்கி நின்ஜா இஸட்எக்ஸ்-14ஆர்

கருப்பு நிற கவாஸ்கி நின்ஜா இஸட்எக்ஸ்-14ஆர் பைக்கை டோனி வைத்துள்ளார். இதில், 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 197 பிஎச்பி பவரையும், 162.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

 எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி??? மலைக்க வைக்கும் கலெக்ஸன்...!!!

கவாஸ்கி நின்ஜா எச்2

கவாஸ்கி நிறுவனத்தில், டோனியிடம் உள்ள மற்றொரு பைக் நின்ஜா எச்2. சமீபத்தில்தான் டோனி இந்த பைக்கை வாங்கினார். சமூக வலை தளங்களில் இந்த தகவலை டோனி தெரிவித்திருந்தார். ஆனால் இந்த பைக்குடன் இதுவரை எங்கும் அவரை பார்க்க முடிந்ததில்லை.

 எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி??? மலைக்க வைக்கும் கலெக்ஸன்...!!!

கவாஸ்கி நின்ஜா எச்2 பைக்கினுடைய இன்ஜின், 197 பிஎச்பி பவரையும், 134 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அதிக எடை கொண்ட இந்த பைக்கின் விலை 30 லட்ச ரூபாய்.

 எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி??? மலைக்க வைக்கும் கலெக்ஸன்...!!!

யமஹா எப்இஸட்-11

சென்னை மாநகரில் மேற்கொண்ட சாலை பயணங்களுக்கு டோனி இந்த பைக்கைதான் பயன்படுத்தினார். இதன் இன்ஜின் 148 பிஎச்பி பவரையும், 106 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

 எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி??? மலைக்க வைக்கும் கலெக்ஸன்...!!!

டுகாட்டி 1098

இவ்வளவு பைக்குகளை வைத்துக்கொண்டு டுகாட்டி இல்லாமல் இருந்தால் எப்படி? டுகாட்டி 1098 பைக்கை டோனி வைத்துள்ளார். அவரிடம் மொத்தமாக 23 பைக்குகள் உள்ளன...!!! அவர் எவ்வளவு கோடிக்கு பைக், கார்களை வாங்கியுள்ளார் என்பது அவருக்கே வெளிச்சம்...

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

01.புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியானது!

02.45 லிட்டர் டீசல் டேங்கில் 52.14 லிட்டர் டீசல்; முறைகேடு ஆதாரத்துடன் அம்பலம்

03.5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
MS Dhoni’s collection of cars & motorcycles: From Hummer H2 to Kawasaki Ninja ZX14R. read in tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more